» »கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை வணங்கினால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை!

கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை வணங்கினால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை!

Written By: Udhaya

ஒருபுறம் சுப்பிரமணியர் மறுபுறம் லக்ஷ்மி நாராயணர் - கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை வணங்கினால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை! கேட்கவே சிறப்பாக இருக்கிறதல்லவா. இப்படி ஒரு கோயில் தமிழகத்தில் இல்லை. கர்நாடகத்தில் உள்ளது அந்த கோயில். என்ன ஒரு எட்டு போய் தரிசனம் செய்துவிட்டு வரலாமா?

 எங்குள்ளது

எங்குள்ளது

கட்டி சுப்பிரமணிய கோயில் பெங்களூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், தொட்டபல்லப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து ஏலகங்கா, ஹடோனஹல்லி வழியாக 1 மணி நேரத்திற்கு சற்று கூடுதலான நேரத்திற்குள் சென்றடையலாம். செல்லும் வழியில் பெங்களூரு மாளிகை, பஃன் வேல்ட் அம்யூஸ்மன்ட் பார்க், ஹெப்பால் ஏரி, மாங்கோ கார்டன் உள்ளிட்ட இடங்கள் அமைந்துள்ளன.

 புனிதப்பயணம்

புனிதப்பயணம்

இந்தக் கோயில் முன்னொரு காலத்தில் புனிதப் பயணம் வரும் யாத்ரிகர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியது. முற்காலம் தொட்டே இந்த கோயிலுக்கு வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள தெய்வம் தமிழர்களின் தெய்வம் என்றும் பழங்கால நம்பிக்கைகள் உள்ளன.

Akshatha Inamdar

 பக்தர்களின் சுற்றுலா

பக்தர்களின் சுற்றுலா

இப்போதும் இங்கு ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திரள் திரளாக வந்து வழிபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி நம் ஊரில், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்கள் கொண்டாடப்படுகிறதோ அதே அளவுக்கு விழாக்களும், கொண்டாட்டங்களும் நிறைந்ததாக அமைகிறது இந்த கோயில்.

Akshatha Inamdar

தனித்துவம்

தனித்துவம்

ஆலயத்தின் தனித்துவம் சுப்பிரமணிய சாமியும், லக்ஷ்மி நாராயணனும் இக்கோயிலின் முதன்மை கடவுள்கள். இந்த கோயிலின் விக்ரகம் தனித்துவமான பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த கோயிலிலும் இப்படி ஒரு வழிமுறை இருப்பதாக தெரியவில்லை.

Akshatha Inamda

எதிரெதிர் திசை நோக்கி

எதிரெதிர் திசை நோக்கி

ஒரே கல்லில் கிழக்கு பார்த்தவாறு சுப்பிரமணிய சாமி சிலையும் , மேற்கு பார்த்தவாறு லக்ஷ்மி நாராயண சாமி சிலையும் செதுக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணிய சாமி நேரடியாக காட்சி தர, மேற்கு பார்த்து காணப்படும் லக்ஷ்மி நாராயண சாமியை கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் மூலமே தரிசிக்க முடியும்.

இந்த பிம்ப தரிசனத்தை ஒழுங்காகச் செய்தால் தொழில் முன்னேற்றமடைந்து கோடீஸ்வரனாக செய்கிறது நாராயணரின் அருள். இதை இங்குள்ள பக்தர்கள் பலர் அனுபவித்துள்ளதாக கூறுகின்றனர்.

Akshatha Inamdar

நேர்த்தியான வடிவமைப்பு

நேர்த்தியான வடிவமைப்பு


இந்த வடிவமைப்பின் நேர்த்தி மிகவும் அலாதியானது. இந்த புதுமையை காணவும், திருவிழாக்களில் கலந்து கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வருவர்.

Akshatha Inamdar

அருகிலுள்ள இடங்கள்

அருகிலுள்ள இடங்கள்

இந்த கோயிலை தவிர தொட்டபல்லப்பூர் நகரத்தில் வேறு சில கோயில்களும் இருக்கின்றன. கட்டி சுப்பிரமணிய கோயில் வரும் பயணிகள் அதன் அருகாமையில் உள்ள நந்திக் குன்றுக்கும் செல்லலாம்.

Pramath

நந்தி ஹில்ஸ்

நந்தி ஹில்ஸ்


பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 4851 அடி உயரத்திலும் இயற்கையின் வரப்பிரசாதமாய் நந்திக் குன்று அமைந்துள்ளது. சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் இருக்கும் நந்திக் குன்று பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதால் பயணிகள் எளிதாக இந்த சுற்றுலாத் தலத்தை அடையலாம்.

wiki

லும்பினி கார்டன்ஸ்

லும்பினி கார்டன்ஸ்

வித்தியாசமான பெயரை கொண்டிருக்கும் இந்த படகுத்துறை அல்லது ஏரிக்கரை பூங்கா அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு பொழுதுபோக்கு ஸ்தலமாகும். இது பெங்களூரின் வெளிவட்ட நெடுஞ்சாலையில் ஹெப்பல் கெம்ப புரா பகுதியில் அமைந்துள்ளது.

நாகவரா ஏரிக்கரையை ஒட்டி 1.5 கி.மீ நீளத்துக்கு இந்த பூங்கா அமைந்துள்ளது. 25 அடி உயர புத்தர் சிலையை கொண்டுள்ள இந்தப் பூங்காவுக்கு புத்தர் பிறந்த இடமான லும்பினி எனும் இடத்தின் பெயரையே வைத்துள்ளனர். குடும்பத்துடன் அமைதியாக பொழுது போக்குவதற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.

Rameshng

உல்சூர் ஏரி

உல்சூர் ஏரி

பெங்களூர் நகரத்தின் வட கிழக்கு பகுதியில் எம்.ஜி ரோடுக்கு அருகில் உல்சூர் ஏரி அமைந்துள்ளது. பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவால் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. 1.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் குட்டி குட்டி தீவுகள் காணப்படுகின்றன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு கணேசா திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

Ramesh NG

கப்பன் பார்க்

கப்பன் பார்க்


1870 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த எழில் மிகுந்த பூங்கா பெங்களுர் மாநகரத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். நகர நிர்வாக வளாகத்தின் அருகிலேயே இது அமைந்துள்ளது. எம்.ஜி ரோடு வழியாகவோ அல்லது கஸ்தூரிபா ரோடு வழியாகவோ இதற்குள் செல்லலாம்.

Indrajit Das

 ஹெசரகட்டா ஏரி

ஹெசரகட்டா ஏரி


செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி பெங்களூரிலிருந்து வட மேற்கில் 18 கி.மீ தொலைவின் அமைந்துள்ளது. நகரின் குடிநீர் தேவைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. 73.84 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து இந்த ஏரியில் மழை நீர் சேகரமாகும்படி அமைந்துள்ளது. அர்காவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த ஏரியின் கரை 1690 மீட்டர் நீளமும் 40.55 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

Nikkul

கட்டி சுப்பிரமணியர் கோயிலுக்கு எப்படி செல்லலாம்?

கட்டி சுப்பிரமணியர் கோயிலுக்கு எப்படி செல்லலாம்?

பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம்தான் கட்டி சுப்பிரமணிய கோயிலுக்கு அருகாமையில் உள்ள விமான நிலையமாகும். அதேபோல் மாகாளி துர்கா ரயில் நிலையம் கட்டி சுப்பிரமணிய கோயிலுக்கு வெகு அருகில் உள்ளது. மேலும், பெங்களூரிலிருந்து தொட்டபல்லப்பூருக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால் தொட்டபல்லப்பூரை அடைந்தபின் பயணிகள் சுப்பிரமணிய கோயில் செல்வதற்கு வாடகை கார்களையோ, நகரப் பேருந்துகளையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்