Search
  • Follow NativePlanet
Share
» »காவிரிக் கரை கனவு தேசத்தில் பரிசல் பயணம் போவோம்!

காவிரிக் கரை கனவு தேசத்தில் பரிசல் பயணம் போவோம்!

கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில் இயற

By Udhaya

கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. காவேரி நதியில், சலசலத்து ஓடும் சிற்றலைகளின் மீது பரிசல் பயணம் செல்லும் அனுபவம் அலாதியானது. வாருங்கள் ஒரு இனிய பயணத்துக்கு சென்று வருவோம்.

விலங்குகள்

விலங்குகள்

முததியின் பரிசல் பயணம் அப்பகுதிகளில் மிகவும் பிரபலம். முததி கிராமம் காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் இருப்பதாலும், அடர்ந்த காடுகளாலும், பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்டிருப்பதாலும் எண்ணற்ற விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்கு சாம்பார் மற்றும் புள்ளி மான்கள்,காட்டெருமைகள், ராட்சஸ அணில்கள், புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், கரடிகள் உள்ளிட்டவற்றை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

Karthik Prabhu

விருப்பமான சுற்றுலாத் தலம்

விருப்பமான சுற்றுலாத் தலம்

அதேபோல் முததிக்கு அருகில் இருக்கும் பீமேஸ்வரி, சாகசப் பிரியர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது. ஆனால் இங்குள்ள காடுகளுக்குள் செல்ல வனத்துறையினரின் அனுமதி கண்டிப்பாக தேவை. அதோடு கடல் மட்டத்திலிருந்து 1125 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சோலிகிரி குன்றில் நடை பயணம் செல்வதும் நல்ல அனுபவமாக இருக்கும். இந்த குன்றின் உச்சியிலிருந்து பார்த்தால் முததியின் பேரழகை பயணிகள் எந்த தடையும் இல்லாமல் ரசிக்கலாம்.

One of the peace maker

 சுஞ்சி நீர்வீழ்ச்சி

சுஞ்சி நீர்வீழ்ச்சி

முததிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு சென்று அதன் அழகை ரசிக்கலாம். இது அர்க்காவதி ஆற்றிலிருந்து உருவாகி காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த அருவியை சூழ்ந்து காணப்படும் அடர்ந்த காடுகள் அருவியின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் உள்ளது.சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு மழைக் காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.

One of the peace maker

ஆஞ்சநேயர் கோயில்

ஆஞ்சநேயர் கோயில்

முததிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆஞ்சநேயர் கோயிலை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் உள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் ராமனின் மனைவியான சீதா தேவி தன்னுடைய மோதிரத்தை காவிரி ஆற்றில் தவற விட்டதாகவும், உடனே அனுமார் காவிரியை தயிர் கடைவது போல் கடைந்து மோதிரத்தை மீட்டெடுத்ததாகவும் புராணம் கூறுகிறது.

Karthik Prabhu

காவேரி வனவிலங்கு சரணாலயம்

காவேரி வனவிலங்கு சரணாலயம்


முததிக்கு அருகே உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயம் பயணிகள் கண்டிப்பாக பர்ர்க்க வேண்டிய இடம். இது ஜனவரி 14, 1987-ஆம் ஆண்டு விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. நூறு கிலோமீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் பல்வேறு விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்கு சாம்பார் மான்கள், காட்டெருமைகள், ராட்சஸ அணில்கள், புள்ளிமான்கள், சிறுத்தை, காட்டு நாய்கள், கரடிகள் போன்ற மிருகங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருபவை. அதோடு இங்கு எண்ணற்ற பறவை இனங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதிலும் முக்கியமாக, சிர்க்கீர் குயில்கள், வேண்புருவ புல்புல்கள், சின்ன மரங்கொத்தி, பச்சை அலகு கொண்ட மல்கோஹா போன்ற பறவைகளை நீங்கள் வேறு எங்கும் பார்ப்பது அரிது. இதை தவிர ஆமைகள், சதுப்பு நில முதலைகள், பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளையும் இங்கு காணலாம்.காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு சுற்றுலா வர நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் சிறப்பானதாக இருக்கும். இங்கு வரும் பயணிகள் வனவிலங்கு சரணாலயத்தின் சரிவுகளில் நெடுந்தூர பயணம் செய்தும், சீறிப்பாய்ந்து ஓடும் காவிரியில் கட்டுமரப் பயணம் செய்தும் பொழுதை இன்பமயமாக களிக்கலாம். அதோடு மீன்பிடிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் இது ஏற்ற இடமாக அமையும்.

Nikhil$051994

பரிசலில் பயணிப்பது

பரிசலில் பயணிப்பது

முததிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசலில் பயணிப்பது ஒரு சிறிய சாகசப் பயண அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பரிசல்கள் குறைந்த எடையுடன், மூங்கில்களை கொண்டு செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளின் தினசரி போக்குவரத்துக்கு பயன் பட்டுவரும் இந்த பரிசல்கள், இப்போதெல்லாம் அதிகமாக சுற்றுலாப் பயனிகளுடனேயே பயணிக்கின்றன.

Karthik Prabhu

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X