Search
  • Follow NativePlanet
Share
» »அரசியல்வாதிகளையே ஆட்டிப்படைக்கும் கோவில்... இப்போ நடக்குறதுக்கெல்லாம் இவைதான் காரணமாம்

அரசியல்வாதிகளையே ஆட்டிப்படைக்கும் கோவில்... இப்போ நடக்குறதுக்கெல்லாம் இவைதான் காரணமாம்

நம்மில் பலர் எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்பும், ஏதேனும் பிரச்சனை காலத்தில் தங்களுக்கான விருப்பக் கோவிலுக்கு சென்றோ, விருப்பக் கடவுளையோ வழிபடுவதை வாக்கமாகக் கொண்டுள்ளோம். அரசியல்வாகிளும் இதற்கு

By Saba

நம்மில் பலர் எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்பும், ஏதேனும் பிரச்சனை காலத்தில் தங்களுக்கான விருப்பக் கோவிலுக்கு சென்றோ, விருப்பக்
கடவுளையோ வழிபடுவதை வாக்கமாகக் கொண்டுள்ளோம். அரசியல்வாகிளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அவர்களும் தங்களுக்கான
வேலையை செய்யும் முன் விருப்பக் கடவுளை அல்லது பிரபலமான திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால், இங்கே ஒரு
திருத்தலமானது பெரும்பாலான அரசியல்வாதிகள் பயணிக்கும் பிரபலமான கோவிலாக இருப்பது ஏதோ ஒரு மர்மப் பின்னணியைக்
கொண்டதாகவே உள்ளது. வாருங்கள், அக்கோவில் எங்கே உள்ளது ? எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

மைசூர் நகரிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சிதரலாக சாமுண்டி மலையில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி
கோவில். அழகிய சாமுண்டி மலைமீது சென்றால், உலiக ஆளும் சாமுண்டீஸ்வரி தேவி எழிலுடன் காட்சி தருகிறார். மன்னர் ஆட்சிக் காலம்
தொடங்கி மக்களாட்சி காலம் வரை தமிழகம், கர்நாடகாவை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி
நடத்துவதில்லை.

wikimedia

அன்னை சாமுண்டீஸ்வரி

அன்னை சாமுண்டீஸ்வரி


சிவனிடம் வரம் பெற்ற மஹிஷாசுரன், தனக்கு இனி மரணமே இல்லை என பிறருக்கு துன்பங்களை விளைவித்தான். மஹிஷாசுரன் அட்டகாசம்
தாங்கவில்லை என்று சிவனிடம் முறையிட்ட தேவர்கள் அவனை அழிக்க வேண்டினார்கள். அதற்கு சிவனோ, என்னிடம் வரம் பெற்றுள்ள
மஹிஷாசுரனுக்கு ஆண்கள், பிராணிகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது. ஆனால் பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும் என்று கூறியதை அடுத்து
உடனே மஹிஷனை அளிக்க அன்னை பார்வதியிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற பார்வதிதேவி சாமுண்டீஸ்வரியாக அரக்கனை
அளித்தார்.

Lomita

18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சி

18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சி

இத்தல சாமுண்டீஸ்வரி தேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி,
சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு
துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று
சாமுண்டிமலையில் குடிகொண்டதாக வரலாறு.

wikipedia

தல வரலாறு

தல வரலாறு


1573ம் ஆண்டு நான்காம் சாமராஜ உடையார் மைசூரை ஆண்டு வந்தார். இவரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு
திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் அவரது ஆட்களையும் காப்பாற்றிய அன்னை சாமுண்டீஸ்வரிக்கு
நன்றி தெரிவிக்க மைசூரின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தை விரிவாக எழுப்பியுள்ளார். 3500 அடி
உயரத்தில் வீற்றிருக்கும் இந்த சாமுண்டீஸ்வரி கோவிலை 1872-ம் ஆண்டு கிருஷ்ணராஜா உடையார் புனரமைத்து விரிவாக்கினார்.

Deepti deshpande

கோவில் அமைப்பு

கோவில் அமைப்பு


இக்கோவிலின் கட்டமைப்பு சூற்றுவட்டார பசுமையுடனும், கோவில் திருத்தலம் கலை நயத்துடனும் காணபோரை மெய் மறக்கச் செய்திடும். ஏழு
நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் ஏழு தங்கக் கலசங்கள் உள்ளன. கருவறையில் எட்டுக் கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில்
காட்சியளிக்கிறார். பழமையான இச்சிலை மார்க்கண்டேய மகரிஷியால் பிரதிஸ்ட்டை செய்ப்பட்டது. கோபுர நுழைவு வாசலில் விநாயகர்
வீற்றுள்ளார்.

Saiprasadvanapamala

பிரம்மாண்ட நந்தி

பிரம்மாண்ட நந்தி


15 அடி உயர நந்தி சிலை மைசூர் சாமுண்டிமலையில் உள்ள கோவிலில் அமைந்துள்ளது. மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு
செல்ல மலை அடிவாரத்தில் இருந்து ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். இதில் மலை மேல் இருந்து 200வது படிக்கட்டுக்கும், மலை
அடிவாரத்தில் இருந்து 800வது படிக்கட்டும் மத்தியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. இந்த சிலை 15 அடி உயரமும், 30
அடி அகலமும் கொண்டது. இது 200 ஆண்டு பழமைவாய்ந்தது.

Aleksandr Zykov

 மைசூர்கே முன்னோடி

மைசூர்கே முன்னோடி

மைசூரு என்ற பெயர் வருவதற்கு ஆதிதேவதையான சாமுண்டீஸ்வரி தான் காரணம் என்பது கடந்த வரலாற்றின் மூலம் தெரிய வருகிறது.
மாநிலத்தில் அரண்மனை நகரம் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் மைசூரு மாநகரை காண கர்நாடகம் மட்டுமில்லாமல், நாட்டின் பல
மாநிலங்களில் இருந்தும், பலவெளி நாடுகளில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வருவோர் தவறவிடக்கூடாத தலம்
இக்கோவிலாகும்.

Naveen P.G

பிரமுகர்களின் விருப்பக் கோவில்

பிரமுகர்களின் விருப்பக் கோவில்


குறிப்பாக, இத்தலத்திற்கும் தென்னிந்திய அரசியல் பிரமுகர்களுக்கும் ஓர் நெருங்கியத் தொடர்பு உள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் தனக்கு விருப்பமான இத்தலத்திற்கு அவ்வப்போது பயணித்துள்ளார். தற்போதைய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் கூட
தனது பதவியை ஏற்கும் முன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Alankarsingh84

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X