Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து திருப்பதி வெறும் 95 நிமிடங்களில் – புதிய வந்தே பாரத் விரைவு ரயில்!

சென்னையிலிருந்து திருப்பதி வெறும் 95 நிமிடங்களில் – புதிய வந்தே பாரத் விரைவு ரயில்!

உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகத்தின் வேறு பகுதிகளிலிருந்து சென்னையை அடைந்தும், சென்னையிலிருந்தும், தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். சென்னை மற்றும் விஜயவாடாவை இணைக்கும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம், சென்னையில் இருந்து பயணிகள் வெறும் 95 நிமிடங்களில் திருப்பதியை அடையலாம்!

சென்னை to திருப்பதி விரைவு போக்குவரத்து

திருப்பதியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள ரேணிகுண்டாவுக்கும் சென்னைக்கும் இடையிலான 136.6 கி.மீ தூரத்தை வந்தே பாரத் அதிவேக ரயில் ஒரு மணி நேரம் 35 நிமிடங்களில் கடக்கிறது. மாறாக தற்போது வழக்கத்தில் உள்ள சப்தகிரி மற்றும் கருடாத்ரி தினசரி விரைவு ரயில்கள் சென்னையில் இருந்து ரேணிகுண்டாவுக்குச் செல்ல இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களை எடுத்துச் செல்கிறது. அதே போல தனியார் அல்லது அரசுப் பேருந்துகளில் சாலைப் பயணம் சராசரியாக மூன்று மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

1

அமோக வரவேற்பு கொடுத்த மக்கள்

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையேயும், புதுதில்லியில் இருந்து விஜயவாடா மற்றும் சென்னை சென்ட்ரல் இடையேயும் சிறப்பு வந்தே பாரத் சேவைகளை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில்களுக்கு செல்லும் ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பயண நேரத்தை பாதியாக குறைக்கும் ரயில்

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து திருப்பதிக்கு வருபவர்களும் சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்களும் இந்த ரயில் மூலம் பயனடைவர்கள் என எதிர்பார்க்கப்பட்டு இந்த வந்தே பாரத் ரயில் ரேணிகுண்டா வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தான் தற்போது சென்னை திருப்பதி இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைத்துள்ளது.

2

கிளம்பிய 95 ஆவது நிமிடத்தில் ரேணிகுண்டா

சென்னை-விஜயவாடா வந்தே பாரத் விரைவு ரயில் காலை 5:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்புகிறது. சரியாக 7:05 மணிக்கு ரேணிகுண்டாவிற்கு செல்கிறது. சரியாக சென்னையில் இருந்து கிளம்பிய 95 ஆவது நிமிடத்தில் இது ரேணிகுண்டாவை சென்று அடைகிறது. ரேணிகுண்டாவில் இருந்து திருப்பதி மற்றும் திருமலை ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி பேருந்துகள் இருப்பதால் மக்கள் இந்த ரயில்களை அதிகம் பயன்படுத்த தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதி நாட்டின் முன்னணி ஆன்மீக தலமாக திருப்பதி உள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் செகந்திராபாத்தில் இருந்து திருப்பதிக்கு ஏற்கனவே வந்தே பாரத் ரயில் சேவை நிலையில் இப்போது தமிழகத்திலிருந்தும் திருப்பதியை சுலபமாக அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு திரளான பக்தர்கள் சென்று வரும் நிலையில் சென்னை to ரேணிகுண்டா அதிவேக வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்ற தகவலால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

    Read more about: tirupati andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+