Search
  • Follow NativePlanet
Share
» »ஆடிப்பெருக்கில் உங்க ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் செல்வ கோயில்கள்!

ஆடிப்பெருக்கில் உங்க ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் செல்வ கோயில்கள்!

ஆடிப் பெருக்கு, தமிழகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஒரு அற்புத திருவிழா. உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் தமிழகம் செழிப்புற வேண்டி விரும்பி கடவுளைத் தொழுவதும், செழிப்பான பூமியை வணங்குவதுமான ஆடிப்

By Udhaya

ஆடிப் பெருக்கு, தமிழகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஒரு அற்புத திருவிழா. உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் தமிழகம் செழிப்புற வேண்டி விரும்பி கடவுளைத் தொழுவதும், செழிப்பான பூமியை வணங்குவதுமான ஆடிப்பெருக்கு, ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆடியின் பதினெட்டாவது நாளில் நடைபெறும். தென் மேற்கு பருவக் காற்று காலத்தில் மழை பூமியை செழிப்பாக்கி, தமிழகத்தின் ஆறுகள் செழிப்படைந்து ஓடும். இதைப் பார்த்த மக்களது மனது இன்பமடையும். இதை விழாவாக கொண்டாடுகிறோம். நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை இப்போது விளைவித்தால் தை மாதம் முதல் நாள் அறுவடைக்கு தயாராகும். இதை ஒட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியை கூறினார்கள். வற்றா நதிகளை வணங்கி பூசைகள் செய்து உழவு வேலையை தொடங்குகிறார்கள். இப்படித்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு செல்வமும், குடும்ப மற்றும் உடல் நலனும் நலவாழ்வும் அமையும். இந்த கோயில்களுக்கு சென்று வந்தால் அதற்கென அருள் கிடைக்கும். வாருங்கள் அந்தந்த கோயில்களைப் பற்றி பார்க்கலாம்.

 தையல் நாயகி அம்மன் கோயில்

தையல் நாயகி அம்மன் கோயில்

ஆடி என்றாலே அம்மன் கோயில்களில் சிறப்பு தான். கொண்டாட்டம் ஒரு பக்கம் பக்தர்களின் வேண்டுதல்கள் ஒரு பக்கம் என கோயில் கலை கட்டும். தையல் நாயகி அம்மன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில் ஆகும். இது திருச்சி அருகே அமைந்துள்ளது.


Adityamadhav83

எப்படி செல்வது

எப்படி செல்வது

தையல் நாயகி அம்மன் கோயில் திருச்சி அருகே அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து வெறும் ஆறு கிமீ தொலைவில் அரியமங்கலம் எனும் ஊரில் இந்த கோயில் அமைந்துள்ளது.

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ் சாலை எண் 83ல் எறும்பீஸ்வரர் கோயிலுக்கு முன் அமைந்துள்ளது இந்த தையல் நாயகி அம்மன் கோயில்.

திருவெறும்பீசுவரர் கோயில்

திருவெறும்பீசுவரர் கோயில்

தையல் நாயகி அம்மன் கோயிலுக்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. மேஷ ராசிக் காரர்களுக்கு சிவன் கோயில் மிகவும் ராசியானது. அவர்கள் இங்கு செல்வது அவர்களின் தொழில் வளம் மேம்பட உதவும்.

தையல் நாயகி அம்மன் கோயில் செல்லும் அதே சாலையில் சற்று தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். 5 முதல் 6 கிமீக்குள்ளாகத்தான் வரும்.

Hayathkhan.h

இத்தியபுரம் காவு சாஸ்தா துர்க்கை கோயில்

இத்தியபுரம் காவு சாஸ்தா துர்க்கை கோயில்

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இந்த பகுதி வழியாக தப்பிச் சென்றார் எனும் தகவல் உள்ளது. இந்த கோயில் அவர் அமைத்தது எனவும் இதற்கு நிறைய உதவிகள் செய்தார் எனவும் கதைகள் உண்டு. இங்கு தினசரி மலை வாழ் மக்களால் பூசை நடத்தப் பட்டு வருகிறது.

Smanojcs90

எப்படி செல்வது

எப்படி செல்வது

நாகர் கோயில் நகரத்திலிருந்து 30கிமீ தொலைவிலும், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அங்கிருந்து 60 கிமீ தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது. சுவாமியார் மடம் எனும் இடத்திலிருந்து வேர்க்கிளம்பி செல்லும் வழியில் இந்த இத்தியபுரம் அமைந்துள்ளது. இங்குதான் சாஸ்தா கோயில் கொண்டுள்ளார். அருகில் வன துர்க்கை அமைந்துள்ளார்.

 அமைப்பும் கடவுளர்களும்

அமைப்பும் கடவுளர்களும்


இந்த கோயில் பார்ப்பதற்கு சாதாரண கோயில் போலத்தான் இருக்கிறது. இவ்விடத்தில் வன துர்க்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவராவார். கேட்ட வரம் உடனே அருளும் தன்மை கொண்டவர். இந்த கோயிலுக்கு பின்புறம் தங்க நிற பாம்பும், வெள்ளை நிற பாம்பும், ராஜ நாகங்களும் வாழ்வதாக நம்பிக்கை உள்ளது. இதை பலர் கண்களால் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

வன துர்க்கா, வன சாஸ்தா, பால கணபதி ஆகியோர் இங்கு சுயம்பு வடிவிலேயே அமைந்துள்ளனர்.

 ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்

கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் ஈரோட்டின் புகழ் பெற்ற தளமாகும். மாமன்னர்கள் கட்டிய கோட்டையில் குடி கொண்டுள்ளதாலேயே இப்பகுதிக்கு கோட்டை என்றும் கோயிலுக்கு கோட்டை மாரியம்மன் என்றும் பெயர் வந்தது.

1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயிலின் உள் நுழைந்ததும் சிம்ம வாகனம் அழகுடன் காட்சி தருகிறது. கருவறையின் முன் இரு அழகிய வண்ண துவாரபாலகர்கள் ஆண், பெண் பூதங்களாக காட்சி தருகின்றனர். அம்மன் உருவம் அழகுற தெரிகிறது. இடக்கால் மடித்து, வலக்கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார் அம்மன்.

Anandajoti Bhikkhu

எப்படி செல்வது

எப்படி செல்வது

ஈரோட்டிலிருந்து 6 கிமீ தொலைவில் காவிரி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது இந்த பெரிய மாரியம்மன் கோயில். வெறும் பத்து நிமிட பயணத்தில் இந்த கோயிலை எளிதில் அடைய முடியும்.

அருகிலேயே சக்தி மாரியம்மன் கோயில், எல்லை மாரியம்மன் கோயில், நவ பிருந்தாவனம் முதலிய இடங்கள் காணப்படுகின்றன.

கொப்புடை அம்மன் கோயில்

கொப்புடை அம்மன் கோயில்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோயில் உள்ளது. இந்த தலத்தின் மூலவராக கொப்புடை நாயகி அம்மன் உள்ளார். இது மிகவும் பழமையான தலமாகும். இது தென்னிந்திய பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

மற்ற கோயில்களைப் போலல்லாமல், கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் உற்சவராகவும், மூலவராகவும் அம்மனே இருக்கிறார். காவல் தெய்வம் கருப்பண்ண சாமியும் இக்கோயிலில் அமர்ந்திருக்கிறார்.

எப்படி செல்வது

எப்படி செல்வது

காரைக்குடியிலிருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கொப்புடை நாயகி அம்மன் கோயில். இது மிகவும் பிரபலமான கோயில் ஆகும்.

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்

மக்களின் உடலில் ஏற்படும் பல விதமான நோய்களை நீக்கி, குணமாக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், அது அமைந்துள்ள இடத்தின் பெயராலேயே அறியப்படுகிறது. 18ம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் துளஜாவின் மகள் இழந்த பார்வையை, இந்த கோயிலுக்கு வந்த பின் பெற்றார் என்றும் நம்பப்படுகிறது.

Nittavinoda

எப்படி செல்வது

எப்படி செல்வது

தஞ்சாவூரிலிருந்து கிழக்கே 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் எனும் இடம். இது அந்த ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலுக்காக புகழ் பெற்றது.

வன பத்ரகாளியம்மன் கோயில்

வன பத்ரகாளியம்மன் கோயில்

வன பத்ரகாளியம்மன் கோயில் கோயம்புத்தூர் அருகே இருக்கும் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது. பத்ரகாளியம்மன் ஆலயமான இது கோயம்புத்தூரில் இருந்து 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பீமன் காளியிடம் வழிபட்டு அசுரனை அழிக்க நினைத்தான் என நம்பப்படுகிறது. இங்கு பீமன், பகாசுரன் ஆகியோரையும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஆனைகுளத்தம்மன் கோயில்

ஆனைகுளத்தம்மன் கோயில்


ஆனை குளத்தம்மன் கோயில் வேலூருக்கு அருகில் இருக்கும் வேலப்பாடி எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் பார்வதி தேவி ஆனைக்குளத்தம்மன் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். இந்த கோயிலுக்கு அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது. ஆனால் உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில்

பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில்

பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவிலில் வீற்றிருப்பவர், இந்து தெய்வமான துர்கையம்மன் ஆவார். துர்கையம்மன் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துர்க்கையம்மனைத்தரிசித்து அருள்பெற்றுச் செல்ல இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

Read more about: travel chennai tamilnadu temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X