Search
  • Follow NativePlanet
Share
» » வாருங்கள் கொண்டாடி தீர்க்கலாம் இந்த தீபாவளியை

வாருங்கள் கொண்டாடி தீர்க்கலாம் இந்த தீபாவளியை

 வாருங்கள் கொண்டாடி தீர்க்கலாம் இந்த தீபாவளியை

புகைப்படம்: cprogrammer

எப்போது வரும் என்று வருடம் முழுவதும் நாம் ஏங்கும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். தீபஒளியின் திரு நாளான தீபாவளி நாம் நம் குடும்பத்தினர் எல்லோருடனும் ஒன்று கூடி பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் சாப்பிட்டு மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு நாள். இந்த வருடம் வழக்கத்தை விடுத்து தீபாவளியை வித்தியாசமாக கொண்டாட நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? வாருங்கள் இந்த தீபாவளியை மறக்க முடியாததாக்கிட நீங்கள் செல்ல வேண்டிய ஐந்து இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

புனித நகரத்தை ஒளியேற்றும் 'தேவ தீபாவளி'

இந்துக்களின் புனித நகரமான வாரணாசியில் வழக்கமான தீபாவளிக்கு பதினைந்து நாள் கழித்து 'தேவ தீபாவளி' கொண்டாடப்படுகிறது. கங்கைக்கரையின் இரு புறமும் கோடிக்கணக்கான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கங்கை நதிக்கு தீப ஆராதனை காட்டி இந்த விழா கொண்டாடப்படுகிறது.

புகைப்படம்: Davy Demaline

இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெரும். வேத மந்திரங்கள் முழங்க ஒளி வெள்ளத்தில் ஆர்ப்பரித்து ஓடும் கங்கையை காண்பது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக அமையும். நான்கு நாட்கள் நடைபெரும் இந்த விழாவை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

அம்ரித்ஸர்

சீக்கியர்களின் புனிதக்கோயிலான பொற்க்கோயில் அமைந்திருக்கும் நகரம் அம்ரித்ஸர். ஆறாவது சீக்கிய குரு ஹர்கோபீந்த் முகலாயர் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்ததை கொண்டாடும் விழாவான பந்தி ஷொர் திவாஷும், வனவாசம் முடித்து ராமன் அயோத்திக்கு திரும்புவதை கொண்டாடும் விழாவான தீபாவளியும் இங்கு ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.

புகைப்படம்: Suzanne Olsson

கீர்த்தனைகளும், பஜனைகளும் ஒலிக்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும் பொற்கோயில் நிச்சயம் தவற விடக்கூடாத ஒன்று. சீக்கியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடுவதால் பஞ்சாப் முழுவதும் விழாக்கோலமாக காட்சி தருகிறது. தில்லியில் இருந்து அம்ரித்ஸருக்கு நாள் முழுவதும் விமான சேவைகள் உள்ளன. அதே போல அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து ரயில் சேவைகளும் உள்ளன.

ராஜஸ்தான்

'பிங்க் சிட்டி' என்று அழைக்கப்படும் ராஜஸ்தானில் தீபாவளி ஐந்து நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நகரத்தில் அனைத்து வீடுகளும், வீதிகளும் ஏன் கடைகளும் கூட விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. விளக்குகளை கொண்டு எந்தக்கடை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்ற போட்டியும் தீபாவளியின் போது இங்கு நடக்கிறது.

புகைப்படம்: Marc Shandro

கம்பீரமான கோட்டைகளில் மேல் நின்று வான வேடிக்கைகளையும், ஒளிரும் ராஜஸ்தான நகரத்தையும் கண்டு ரசிக்க கிடைக்கும் வாய்ப்பு நிச்சயம் தவற விடக்கூடாத ஒன்றாகும். தில்லியில் இருந்து ஐந்து மணி நேர சாலைப்பயணதில் ஜெய்ப்பூரை அடையலாம், முக்கிய நகரங்களில் இருந்து குறிப்பிடத்தகுந்த அளவில் விமான மற்றும் ரயில் சேவைகள் இந்த நகருக்கு உள்ளது.

கோவாவில் நடக்கும் நரகாசுர வதம்

இந்தியாவின் மிகப்பிரபலமான சுற்றூலாத்தளங்களில் ஒன்றான கோவாவில் தீபாவளியும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நரகாசுர வதம் தான் இவ்விழாவின் முக்கிய நிகழ்வு. இங்கிருக்கும் கிராமங்களுக்கிடையே யார் மிகப்பெரிய, மிகப்பயமுருத்தும் நரகாசுர கொடும்ப்பாவியை உருவாக்குகிறார்கள் என்ற போட்டியும் நடைபெறுகிறது.

 வாருங்கள் கொண்டாடி தீர்க்கலாம் இந்த தீபாவளியை

புகைப்படம்: Vipal

விழா நாட்களின் போது தங்களின் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க மக்கள் வரைமுரைக்கு உற்ப்பட்ட சூதாட்டதில் ஈடுபடுவதும் உண்டு. கேலிக்கை கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார பழமை ஆகியவற்றின் ரசனயான கலவையாக இந்த கோவா தீபாவளி உங்களுக்கு அமையும்.

புருஷ்வாடி (மஹாரஷ்டிரா)

பட்டாசுகளின் இரைச்சலில் இருந்து தப்பித்து அமைதியாக ஊர் மக்களுடன் ஒன்றாக இதமாக நெருப்பினை சுற்றி அமர்ந்து தீபாவளியை கொண்டாட விரும்பினால் நீங்கள் பயணப்பட வேண்டிய இடம் மஹாரஷ்டிரா மாநிலத்தில் மும்பை-நாசிக் சாலையில் உள்ள சிறு மலைகிராமமான புருஷ்வாடி ஆகும். தீபாவளியின் போது அங்கு சென்று அங்கிருக்கும் கிராமத்துபெண்கள்களுக்கு ரங்கோலி கோலமிடுவதில் உதவி செய்யலாம், நெல் அறுவடை செய்யலாம், விறகு வெட்ட காட்டிற்க்கு செல்லலாம்.

வாருங்கள் கொண்டாடி தீர்க்கலாம் இந்த தீபாவளியை

புகைப்படம்: Jessica Lucia

பின்னர் சூரியன் மறைய, மறைய மின்மினி பூச்சிகளின் வர்ணஜாலம் துவங்குகிறது. அங்கிருக்கும் கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகள் நம்மை சுற்றி ரிங்காரமிட்டு பறக்கும் போது ஏற்படும் பரவசம் சொல்லில் அடங்காதது. சில நாட்கள் கிராமப்புற வாழ்க்கை வாழ்ந்து இயற்க்கை அன்னையின் மடியில் தவழ்ந்து தீபாவளியை கொண்டாடலாம்.
எப்படி அடையலாம்? மும்பை நகரில் இருந்து ஐந்து மணி நேர NH-3 நெடுஞ்ச்சாலைப்பயணத்தில் புருஷ்வாடியை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X