Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடகத்தில் 5 நாள் கொண்டாடப்படும் அசத்தல் தீபாவளி! எவ்ளோ வித்தியாசம் பாருங்க!

கர்நாடகத்தில் 5 நாள் கொண்டாடப்படும் அசத்தல் தீபாவளி! எவ்ளோ வித்தியாசம் பாருங்க!

கர்நாடகத்தில் 5 நாள் கொண்டாடப்படும் அசத்தல் தீபாவளி! எவ்ளோ வித்தியாசம் பாருங்க!

கர்நாடக மாநிலத்தில் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் வித்தியாசமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். நீதிமன்றம் வெடி வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், கர்நாடக மக்களுக்கு அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஏன் தெரியுமா.. வாருங்கள் அந்த காரணம் குறித்தும், கர்நாடகத்தில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது என்பன குறித்தும் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

ஐந்து நாள் பண்டிகை

ஐந்து நாள் பண்டிகை

வழக்கமான இந்திய மக்களைப் போலத்தான் புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் செய்து, இறைவனைத் தொழுது பண்டிகையை கொண்டாடுகின்றனர் கர்நாடக மக்கள். ஆனால் ஒரு வித்தியாசம். இங்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்களும் வித்தியாச வித்தியாசமான பூசைகள், விருந்துகள் என தடபுடலாக கொண்டாடப்படுகிறது கர்நாடகத் தீபாவளி.

முதல் நாள்

முதல் நாள்

கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகை அஸ்வேயுஜ பகுல த்ரயோதசி எனும் பூசையுடன் தொடங்குகிறது தீபாவளி பண்டிகை.

தனத்ரயோதாசி எனும் லட்சுமி பூசையும் அதைத் தொடர்ந்து யமதீப்தன் எனும் விழாவும் நடத்தப்படுகிறது. ஆனால், இந்த முறைகளை பெரும்பாலும் நகர மக்கள் செய்வதில்லை. கன்னட பாரம்பரியத்தை பின்பற்றும் பழம் குடும்பங்கள் மட்டுமே இப்போது கொண்டாடுகின்றனர்.

 இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் நரகசதுர்த்தி ஆகும். அது நம் ஊரில் தீபாவளியாக கொண்டாடப்படும் விழாவாகும். நரகனை அழித்த நாளை நரக சதுர்த்தியாக கொண்டாடுகின்றனர் மக்கள். அது கர்நாடகத்தில் வெடி வெடித்து கொண்டாடும் விழாவாகவே உள்ளது. ஆனாலும் மிக முக்கிய தல தீபாவளி பண்டிகை மூன்றாவது நாளே கொண்டாடப்படுகிறது.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள்


தல தீபாவளி.. நம் ஊரில் திருமணமாகி வரும் மக்கள் கொண்டாடும் தல தீபாவளி பண்டிகை கேள்வி பட்டிருக்கிறோம். இது தலையாய தீபாவளி எனும் பொருளுடன் முதன்மை தீபாவளியாக மின்னும் ஒளியில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாவாகும். இரவில் விளக்கேற்றி வீடு முழுவதும் விழாக் கோலம் கொண்டு, வண்ண விளக்குகளையும் ஒளிர விட்டு ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள் இல்லத்தினர் அனைவரும்.

நான்காம் நாள்

நான்காம் நாள்

கர்நாடக தீபாவளியின் நான்காம் நாள் பலி பத்யம் எனப்படும் விரத நாள் ஆகும்.

முந்தைய நாள் இனிப்பு பலகாரங்களைச் சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விரதம் கடை பிடிக்கப்படுவதாக மூத்த மக்கள் கூறுகின்றனர். இது குறித்த தகவல்கள் பெரும்பாலும் இந்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால் இந்த நான்காவது நாள் தீபாவளியை ஒரு சம்பிரதாயமாக கொண்டாடுகின்றனர்.

கடைசி நாள்

கடைசி நாள்

ஐந்து நாள் தீபாவளி கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று எமத்வித்தேயா, பத்ருவிதியா என்று அழைக்கப்படுகிறது. இது எந்த மாதிரியான கொண்டாட்டம் என்பது தெரியவில்லை. ஆனால், இதுவும் முன்பு கொண்டாடப்பட்ட விழாக்களில் ஒன்றாகும். வெறும் சம்பிரதாயமாக இந்த விழாவை கர்நாடக மக்கள்கொண்டாடுகின்றனர்.

 இல்லங்களில் புது வண்ணங்களில்

இல்லங்களில் புது வண்ணங்களில்

முந்தைய காலங்களில் இல்லங்களை புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளை இந்த சமயத்தில்தான் செய்து வந்துள்ளனர் கர்நாடக மக்கள். மேலும், கன்னடம் பேசும் பாரம்பரிய குடும்பத்தவர்கள் தங்கள் இல்லங்களை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, எழில் கொஞ்சும் அலங்காரங்களைச் செய்து, உறவுக்காரர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களோட பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். நீங்களும் கர்நாடகத்தில் தீபாவளியை கொண்டாட ஆசைப் படுகிறீர்களா.. திட்டமிடுங்கள்.. சுற்றுலாவுக்கு தயாராகுங்கள்.

Read more about: travel karnataka bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X