Search
  • Follow NativePlanet
Share
» »மழைக்காலங்களில் இந்தியாவின் இந்த இடங்களுக்கு எல்லாம் கட்டாயம் செல்லவே கூடாது – மிகவும் ஆபத்து!

மழைக்காலங்களில் இந்தியாவின் இந்த இடங்களுக்கு எல்லாம் கட்டாயம் செல்லவே கூடாது – மிகவும் ஆபத்து!

இந்தியா பொதுவாகவே ஒரு வெப்பமான வானிலையை கொண்டிருப்பதால் சுற்றுலா செல்வதற்காக குளிர் காலத்திற்காகவும், மழை காலத்திற்காகவும் காத்திருக்கிறோம்! காடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் என எல்லா இடங்களுமே செழுமையாக காணப்படும். ஆனால் இயற்கை அழகை தேடும் இந்த பயணத்தில் நாம் ஆபத்தில் சிக்கி கொள்ளக்கூடாது. கனமழை காரணமாக இந்தியாவின் சில இடங்கள் மிகவும் பாதுகாப்பற்றதாக மாறிவிடும். நீங்கள் உங்கள் பயணத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளக்கூடாத இடங்களின் லிஸ்ட் இதோ!

1

உத்தரகாண்ட்

முசொரி, நைனிடால், டேராடூன் போன்ற அழகிய சுற்றுலாத் தலங்கள், ஹரித்வார், கேதார்நாத், ரிஷிகேஷ் போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களின் தாயகமாக இருக்கும் உத்தரகாண்ட் பருவமழை காலங்களில் இயற்கையின் ருத்ரதாண்டவத்தை எதிர்கொள்ளுகிறது. இப்பகுதியில் நிலச்சரிவுகள் கடுமையான அழிவை ஏற்படுத்துவதால், மழைக்காலத்தில் செல்வது ஆபத்தான தேர்வாக அமைகிறது. அது மட்டுமின்றி, இணைப்புச் சாலைகள் துண்டிக்கப்படுகிறது. 2013 இல் ஏற்பட்ட பேரழிவை யாராலும் இன்றுவரை மறக்க முடியாது.

2

இமாச்சலப் பிரதேசம்

சிம்லா, மணாலி, குலு, டல்ஹௌசி, கசொல், கஜ்ஜியார், ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, சம்பா, குர்ஃபி போன்ற அழகிய சுற்றுலாத் தலங்கள் நிரம்பிய இமாச்சலப் பிரதேசம் பருவமழை சமயங்களில் நிலச்சரிவுகளையும், கடும் வெள்ளத்தையும் சந்திக்கிறது. இந்த சமயங்களில் இமாச்சலுக்கு சுற்றுலா செல்வது என்பது தவறான முடிவாகும்.

3

சிக்கிம்

சிக்கிமின் இயற்கை அழகு அனைவரையும் கவர்ந்தாலும், மழைப்பொழிவு சாலைகளை வெளியே செல்ல பயமுறுத்துகிறது, எனவே, பருவமழை இந்த வடகிழக்கு மாநிலத்திற்கு செல்ல மோசமான நேரம். வருடம் முழுவதும் தண்ணீர் வறட்சியை சிக்கிம் எதிர்கொண்டாலும், பருவமழை காலத்தில் ஸ்தம்பிக்கிறது.

4

கோவா

கோவா தானே, மலைப்பிரதேசம் ஒன்றும் இல்லையே, ஏன் செல்லக்கூடாது என உங்களுக்கு தோன்றுகிறது என்றால் அது தான் தவறு. நீங்கள் கோவாவிற்கு எந்த பிரச்சனையுமின்றி செல்லலாம். ஆனால் சுற்றிப் பார்க்கவே, கடலோர நடவடிக்கைகளிலோ உங்களால் ஈடுபடவே முடியாது. எங்கு போனாலும் தண்ணீர் தேங்கி நிற்கும், உங்களால் வாகனங்களை கூட பார்க் செய்ய இயலாது.

5

ஒரிசா

நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த மாநிலம் தென்மேற்கு பருவமழையால் அதிக தாக்கத்திற்கு உள்ளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 மிமீ மழையைப் பதிவு செய்கிறது. மாநிலத்தின் வெப்பமண்டல காலநிலை காரணமாக, ஒடிசா மழைக்காலத்தில் அடிக்கடி சூறாவளி மற்றும் சூறாவளியை அனுபவிக்கிறது, இதனால் மழைக்காலத்தில் இந்த இடத்திற்குச் செல்வது நடைமுறையில் சாத்தியமற்றது.

6

அஸ்ஸாம்

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மற்றொரு கண்கவர் மாநிலமான அஸ்ஸாம் பருவமழையின் போது அதிகமான மழைப்பொழிவை பெறுகிறது. இதனால் யாரும் வெளியேறி பயணிக்க கடினமாக உள்ளது. போர்டோசிலா எனப்படும் இடியுடன் கூடிய மழை அஸ்ஸாமில் மிகவும் பொதுவானது, இதனால் பலத்த மழை பெய்யும் - பெரும்பாலான வழித்தடங்கள் மழையினால் அடித்துச் செல்லப்படுகிறது. கனமழை அடிக்கடி நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் உள்ளாட்சிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் நீர் தேக்கத்திற்கு வழிவகுக்கும், இதனால் உள்ளூர்வாசிகளும் கூட வெளியே வருவதை தவிர்க்கின்றனர்.

7

மேகாலயா

உலகின் ஈரமான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சிரபுஞ்சி மற்றும் மவ்சின்ராம் அடங்கிய மேகாலயா எப்பொழுதுமே கணிசமான மழைப்பொழிவை பெறுகிறது. மழைக்காலத்தில் மாநிலம் துடிப்பான வண்ணங்களால் நிரம்பியிருக்கும் அதே வேளையில், இந்த நேரத்தில் நாட்டின் இந்தப் பகுதிக்கு பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது அதிக மழையைப் பெறுகிறது, இது உங்கள் வழியில் இடையூறாக இருக்கும்.

8

கேரளா

மூணார், ஆலப்புழா, தேக்கடி, வாகமான், குமரகம் என பல அழகிய இயற்கை சுற்றுலாத் தலங்கள் அடங்கிய கேரளா பொதுவாகவே குளிரான வானிலையில் நம்மை வரவேற்கிறது. வருடாந்திர தென்மேற்கு பருவமழை முதன் முதலில் இந்தியாவில் கேரளாவில் தான் தொடங்குகிறது. கேரளா அதிகப்படியான காடுகளால் சூழப்பட்டுள்ளதால் பருவமழையின் போது சில சமயங்களில் வெள்ளத்தையும், நிலச்சரிவுகளையும் எதிர்கொள்வதால் மழைக்காலங்களில் பயணிப்பது தவறானது.

இனி பருவமழைக்காலங்களில் இந்த இடங்களை எல்லாம் தவிர்ப்பது நல்லது பயணிகளே!

More News

    Read more about: travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+