» »பொள்ளாச்சியில் ஒரு நாள்: அடேங்கப்பா பொள்ளாச்சியில இவ்ளோ இடம் இருக்கா?

பொள்ளாச்சியில் ஒரு நாள்: அடேங்கப்பா பொள்ளாச்சியில இவ்ளோ இடம் இருக்கா?

Written By: Udhaya

பொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் ஒரு நாளில் பொள்ளாச்சியில் அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்க்கலாம்.

சுப்ரமண்யர் திருக்கோயில்

சுப்ரமண்யர் திருக்கோயில்

சுப்ரமண்யர் திருக்கோயில், பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.

எப்படி செல்லலாம்

பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும்வகையில் 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சுப்ரமணியர் கோயில். ரயில் நிலையத்திலிருந்து மார்க்கெட் சாலையில் சென்று பின் எஸ் எஸ் கோயில் தெருவில் நுழைந்கு வலதுபுறமாக சென்றால் நடந்து செல்லும் தொலைவில் சுப்ரமணியர் கோயில் உள்ளது.

மேலும் ரயில் நிலையத்திலிருந்து நேராக செல்லும் வழியிலேயே சந்தை அமைந்துள்ளது.

PC: pollachimurugantemple

அணைக்கட்டுகள்

அணைக்கட்டுகள்

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன.

பொள்ளாச்சி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.

ஆழியார் அணை

பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவில், ஆழியார் ஆற்றுக்குக் குறுக்கே, 1959 மற்றும் 1969 ஆகிய வருடங்களுக்கு இடையில், கட்டப்பட்ட ஆழியார் அணையின் முக்கிய குறிக்கோள் நீர்ப்பாசனமாகும்.

இவ்வணை, சுமார் 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துக்கு, எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தற்சமயம், இந்த அணை பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.


சினிமா வளர்த்த பொள்ளாச்சி

1970 களில் வந்த படங்களில் முக்கால்வாசி தமிழ் படங்கள் பொள்ளாச்சியிலேயே படம்பிடிக்கப்பட்டன என்று சொன்னால் பொள்ளாச்சி எந்த அளவுக்கு சினிமா காரர்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தது என்று பாருங்கள். மேலும் பொள்ளாச்சியில் நிறைய கோயில்களும் அமைந்துள்ளன.

PC: Subramonip

ஆன்மீகத் தலங்கள்

ஆன்மீகத் தலங்கள்

ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்கள் பொள்லாச்சிக்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது.


அழகுநாச்சி அம்மன் கோயில்

அழகுநாச்சி அம்மன் கோயில், பொள்ளாச்சியிலிருந்து 80 கி.மீ. தொலைவில், வள்ளியரச்சல் என்ற ஊரைச் சேர்ந்த மக்களால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு மூலக்கடவுளாக விளங்கும் அழகுநாச்சி அம்மன், இந்த ஊர் மக்களின் குல தெய்வமாகும். கேட்டதை கொடுக்கும் தெய்வமாக இருக்கிறார் அழகுநாச்சி.

பொள்ளாச்சி ஐயப்பன் கோயில்

பொள்ளாச்சி ஐயப்பன் கோயில், சபரி மலை அய்யப்பன் கோயிலுடன் நிறைய ஒற்றுமைகள் கொண்டதாகக் காணப்படுகிறது. இக்கோயிலில், மூலவராக ஐயப்பன் இருந்தாலும், பிற தெய்வங்களின் சந்நிதிகளையும் காணலாம். ஏராளமான பக்தர்கள் இங்கு தினந்தோறும் நடைபெறும் வழக்கமான சடங்கு முறைகள், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மாசாணியம்மன் கோயில்

மாசாணியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயிலில், மூலக்கடவுளின் திருவுருவம் பாம்பின் உடலைக் கொண்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபடுவோரின் பிரர்த்தனைகள், சுமார் மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று நம்பப்படுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள், அம்மனுக்கு உகந்த நாட்களாதலால், இவ்விரு நாட்களிலும், பக்தர்கள் வருகை, இங்கு மிக அதிகமாக இருக்கும்.

PC: anaimalaimasaniamman

 சின்னார் வனவிலங்கு சரணாலயம்

சின்னார் வனவிலங்கு சரணாலயம்

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில், சிறுத்தைகள், புள்ளிமான்கள், காட்டெருமைகள், புலிகள், யானைகள், தொப்பித்தலை குரங்குகள், நீலகிரி வரையாடுகள், ஹனுமான் குரங்குகள், தலை நரைத்த ராட்சத அணில்கள், உள்ளிட்ட 34 வகையான பாலுட்டிகள், அதன் காடுகளில் காணப்படுகின்றன.

அரிய வகையான, தலை நரைத்த ராட்சத அணில்கள், தூவானம் நீர்வீழ்ச்சி, மற்றும் முழு சரணாலயத்தையும் பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் ஆகியவை இச்சரணாலயத்தின் கவரும் அம்சங்களில் முக்கியமானவை ஆகும்.

திருமூர்த்தி மலை

திருமூர்த்தி அணைக்கு அடுத்தாற் போல் உள்ள திருமூர்த்தி மலையில், திருமூர்த்தி கோயில் உள்ளது. ஸ்ரீ அமரலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் திருமூர்த்தி மலையை ஒட்டியவாறு ஒரு நீரோடை ஓடுகின்றது. அத்தரி மஹரிஷியும், ரிஷி பத்தினியான அனுசூயா தேவியும் இம்மலையில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களின் பக்தியை சோதிக்கும் நோக்கில் மும்மூர்த்திகள் இங்கு வந்ததாகவும் சான்றோர்கள் கூறுகின்றனர். அவ்வாறு வருகை தந்த மும்மூர்த்திகள், அனுசூயா தேவியை நிர்வாணமாக தங்களுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்ல, அவரும் அதை ஏற்றுக் கொண்டு, மும்மூர்த்திகளையும், குழந்தைகளாக்கி, அவ்வாறே அவர்களுக்கு அமுதூட்டினார். மும்மூர்த்திகளும், இத்தம்பதியை ஆசிர்வதித்துச் சென்றனர். அதனால், இம்மலை, மும்மூர்த்திகளின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.

மங்கீ ஃபால்ஸ்

சுமார் 30 கி.மீ. தொலைவில், ஆனைமலையில் அமைந்துள்ள மங்கீ ஃபால்ஸ், இயற்கையாக அமைந்த நீர்வீழ்ச்சியாகும்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சியில் மலையேற்றத்துக்கான பாதை ஒன்று உள்ளது. இவ்வருவியின் கண்ணை கொள்ளை கொள்ளும் அழகினால், இது மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு செல்வதற்கு நுழைவுக் கட்டணமாக 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. (நீங்கள் செல்லும்போது கட்டணம் சிறிது மாற்றப்பட்டிருக்கலாம்)

PC: Siva301in

 பொள்ளாச்சி எப்போது எப்படி?

பொள்ளாச்சி எப்போது எப்படி?

பொள்ளாச்சியின் வானிலை பொள்ளாச்சியில் வருடந்தோறும் மிதமான, ரம்மியமான வானிலையே நிலவுகிறது. சுற்றுலா செல்வதற்கு, வருடம் முழுவதும் ஏற்ற இடமாக இருப்பினும், மிகவும் இனிய வானிலை நிலவக்கூடிய மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில், இந்நகரம், மிகுந்த பொலிவுடன் காணப்படும்.

கோயம்புத்தூர் விமான நிலையம் பொள்ளாச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து, அருகில் உள்ள ஊர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் இரயில் நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும்.

PC: Divyacskn1289

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்