Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?

சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்ல, சொகுசாக செல்ல, வெளிநாடுகளுக்கு பயணிக்க நமக்கு வசதியாக இருப்பது விமான போக்குவரத்து தான்! அதுவும் இப்போது கோடை விடுமுறை வந்து கொண்டிருக்கிறது, அதனால் மாநிலங்களுக்கு உள்ளே பறக்கும் விமானங்களின் டிக்கெட் விலையும், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் விலையும் இப்போது அதிகரித்துள்ளது! கோவா, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கான விமான கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல விமான கட்டணம் ரூ.6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்!

Chennai, Tamil Nadu

இயல்பு நிலைக்கு திரும்பிய விமான போக்குவரத்து

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு நாடு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் விமான போக்குவரத்து எவ்வித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இன்னும் 2 மாதங்களில் கோடை விடுமுறை வர உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியே செல்ல திட்டமிட்டு செல்ல முடியாத பலரும் இந்த ஆண்டு நிச்சயம் சுற்றுலா சென்று வர வேண்டுமென்று நினைத்துள்ளனர். இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தலங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதிலிருந்து விமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்து வருகின்றனர்.

Chennai, Tamil Nadu

சென்னை to டெல்லி உயர்த்தப்பட்ட கட்டணம்

கோடை விடுமுறை வருவதையொட்டி விமான பயணிகள் தற்போதிலிருந்தே டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளனர். நாளுக்கு நாள் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாடு மற்றும் கோவா, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கான விமான கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல விமான கட்டணம் ரூ. 6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னையிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் பயணிகள் யாவரும் இதனால் கவலையடைந்துள்ளனர்.

chennai, tamil nadu

துபாய், கோவா விமான கட்டணங்களும் உயர்வு

சமீபத்தில் முடிவடைந்த திருவிழாக் காலத்தில் விமானக் கட்டணங்கள் கூரை வழியாகச் சென்றன. இப்போது மறுபடியும் விமான கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை to டெல்லி போலவே சென்னையில் இருந்து துபாய் செல்வதற்கான கட்டணம் ரூ. 20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சென்னை- கோவா கட்டணம் ரூ. 4,500 ஆகவும் உயர்ந்துள்ளது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு விமான கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

More News

    Read more about: chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+