Search
  • Follow NativePlanet
Share
» »குழந்தையின்மையா, திருமணத்தடையா – சென்னைக்கு அருகில் உள்ள இந்த சக்தி வாய்ந்த கோயிலுக்கு செல்லுங்கள்!

குழந்தையின்மையா, திருமணத்தடையா – சென்னைக்கு அருகில் உள்ள இந்த சக்தி வாய்ந்த கோயிலுக்கு செல்லுங்கள்!

சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள இந்த கோயில் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. காரணம், குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கோயிலுக்கு சென்று வந்த உடனே கருவுற்று விடுகின்றனராம், கர்ப்பிணி பெண்கள் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் சுகப்பிரசவம் ஆகிறதாம்! வெறும் மூன்றே எலுமிச்சம் பழங்களில் எல்லா வரங்களையும் அள்ளித் தருகிறாள் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் கோயில் கொண்டுள்ள பூங்காவனத்தம்மன் எனும் அங்காள பரமேஸ்வரி! இந்த கோயிலுக்கு யாரெல்லாம் செல்ல வேண்டும்? ஏன் செல்ல வேண்டும் என்று பார்ப்போம்!

காலடி எடுத்து வைத்தவுடனே நம்மை சிலிர்க்க வைக்கும் அனுபவம்

மஞ்சளும் குங்குமமும், வேப்பிலையும் மணக்கும் சந்நிதிக்குள் நிறைமாதக் கர்ப்பிணியாகப் படுத்த நிலையில் வரவேற்கிறாள் பூங்காவனத்தம்மன். அந்தத் திருவுருவத்தை தரிசிக்கும் யாருக்கும் உச்சி முதல் பாதம் வரையிலான சிலிர்ப்பு சில நொடிகள் நீடிக்கும் நிச்சயம். நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக மட்டுமின்றி, எல்லா விதமான வேண்டுதல்களுக்கும் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள் மக்கள்.

தண்ணீர் தாகத்தினால் துவண்ட பார்வதி தேவி

பழங்காலத்தில் இப்பகுதி வேப்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. சிவனும் பார்வதியும் மேல்மலையனூருக்கு புட்லூர் வழியாக நடைப்பயணம் மேற்கொண்டனர். நீண்ட தூரம் நடந்தபின், களைப்பும் தாகமும் கொண்ட பார்வதி, வயலில் அமர்ந்து சிவபெருமானிடம் தண்ணீர் கேட்டார். தண்ணீரைத் தேடி வெகு தூரம் சென்றாம் சிவபெருமான், ஆனால் காற்று மழையினால் அவரால் சீக்கிரம் வர முடியவில்லை.

Putlur angala parameswari amman temple

புற்று உருவாக புட்லூர் அம்மனாக மாறிய அதிசயம்

இதற்கிடையில், பொறுமையிழந்த, பார்வதி தரையில் அமர்ந்தார், அவரைச் சுற்றி ஒரு எறும்புப் புதை படிப்படியாக உருவானது. அவரைச் சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு வந்த சிவபெருமான் புற்றுக்குள் பார்வதி அமர்ந்து இருப்பதை கண்டு அங்கேயே சோகமாக தாண்டவராயன் எனும் நாமத்தில் அமர்ந்து விட்டார். இதை பிரதிபலிக்கும் விதமாக சிவனின் முகம் அந்த கோயிலில் சற்று தொய்வுடன் இருப்பதை நீங்களே காணலாம். காலப்போக்கில் இந்த சிலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டு மிகப்பெரிய கோயிலாக உருவெடுத்தது என்று வரலாறு கூறுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக காட்சி தரும் தேவி

புட்லூர் தளத்தில் பார்வதி தேவி அமர்ந்த புற்று இன்னும் வளர்ந்த படியே உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள்.

தங்கள் குறைகளை கொட்ட கூட்டமாய் கூடும் மக்கள்

தங்கள் வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், விருப்பங்களை நிறைவேற்றவும் மக்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் சந்ததிக்காக வேண்டி இங்கு வருகிறார்கள். குழந்தை பாக்கியம் மட்டுமின்றி, திருமண வரம், வேலைத் தடை, உடல் நலம் ஆகியவும் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் நிவர்த்தி ஆகிறது என கூறுகிறார்கள் இங்கு சென்று வந்த மக்கள். இந்த அம்மன் சன்னதியில் காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் நீங்கும், தடைகள் அகலும், பில்லி, ஏவல், சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் மக்கள் விடுபடுகிறார்கள்.

Putlur angala parameswari amman temple2

எலுமிச்சை பழம் வாங்கி செல்ல மறக்காதீர்கள்

கோயிலுக்கு வெளியே பூஜை பொருட்களை விற்கும் கடைகளில் ஐந்து எலுமிச்சை மற்றும் வளையல்களை வாங்கும் ஒரு தனி வழக்கம் உள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பௌர்ணமி நாட்களில், அம்மனின் அருள் வேண்டி வழிபடுபவர்களால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். கருப்பு, கோடு இல்லாதவாறு எலுமிச்சை பழங்களை வாங்கி அம்மனிடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அந்த தாய் நேரில் வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார்.

எப்படி செல்வது?

ரயில் பயணம் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் சென்றால், புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில்.

பேருந்து - திருவள்ளூரிலிருந்து பேருந்து வசதியும் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

உங்களுக்கு ஏதேனும் வேண்டுதல் இருந்தால் கட்டாயம் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள். புட்லூர் பூங்காவனத்தம்மன் உங்களை காப்பாற்றுவார்! ஒரு முறை சென்று வந்தால் போதும், இந்த ஆலயத்தின் மகிமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!

More News

    Read more about: chennai travel guide tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+