Search
  • Follow NativePlanet
Share
» »உங்களை நொடிக்கொரு தடவை "வாவ்" சொல்ல வைக்கும் வய நாடு பற்றி நிறைய தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!

உங்களை நொடிக்கொரு தடவை "வாவ்" சொல்ல வைக்கும் வய நாடு பற்றி நிறைய தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!

By R. Suganthi Rajalingam

வயநாடு - யாரெல்லாம் இயற்கை வேட்டைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால் அவர்களுக்காகவே கடவுள் படைத்த அற்புதமான படைப்பு தான் இந்த வயநாடு பயணம். அழகான மலைத்தொடர்கள், எங்கும் பசுமை கம்பளம் விரித்தாற் போல் இருக்கும் தேயிலை தோட்டங்கள், நறுமணம் கமழும் மூலிகை செடிகள் என்று இதன் இயற்கை எழில் எங்கும் பரவி நிற்கிறது.

நம் நாட்டில் இந்த பயணம் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு அழகான அனுபவத்தை கொடுக்க கூடியதாக அமையும். பசுமையின் சொர்க்கம் என்றே இந்த இடத்தை அழைக்கலாம்.

 மழைக்காலம்

மழைக்காலம்

இந்த மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் போதும் பெங்களுரிலிருந்து இந்த வயநாட்டிற்கு செல்வது குதூகலமாக இருக்கும். உங்கள் மன அழுத்தம் எல்லாம் இந்த இயற்கை மருந்தால் காணாமல் போய்விடும்.

நீங்கள் உங்கள் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை பெங்களுரிலிருந்து கிளம்பி வயநாட்டிற்கு சென்று எளிதாக ஞாயிறு இரவில் பெங்களூர் திரும்பி விடலாம்.

PC: wikimedia.org

வயநாடு செல்ல வழி

வயநாடு செல்ல வழி

பெங்களூர் - ரமணஹரா - மைசூர் - பண்டிபூர்-குடலூர் - வயநாடு

முதல் நாள்

முதல் நாள்

நீங்கள் பெங்களுரிலிருந்து அதிகாலை 5.30மணிக்கு உங்கள் வயநாடு பயணத்தை ஆரம்பித்தால் 280 கி. மீ தொலைவு பயணம் மேற்கொள்ள வேண்டும். உங்கள் காலை உணவிற்கு சிறப்பான இடம் ரமணஹராவில் உள்ள காமத் லோகர்ச்சி ஆகும். பிறகு அப்படியே மைசூர் செல்லலாம்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள ரிங் ரோடு மைசூரின் வரம் என்றே செல்லலாம். ஊருக்குள் செல்லாமல் அப்படியே நெடுஞ்சாலையில் சென்று பண்டிபூர் நேஷனல் பார்க்கையும் கண்டு களிக்கலாம்.

PC: wikimedia.org

திருநெல்லி கோயில்

திருநெல்லி கோயில்

இந்த நேஷனல் பார்க் வழியாக மெதுவாக பயணம் மேற்கொள்ளும் போதே நிறைய வன விலங்குகளை காண முடியும். நீங்கள் மிதமான வேகத்தில் சென்று கொண்டே மரங்களில் தொங்கி தாவும் குரங்குகளின் கூட்டம், துள்ளிக் குதிக்கும் புள்ளி மான்கள், தோகை விரித்து நடனமாடும் மயில் என்று கண்ணை கொள்ளை கொள்ளும் காட்சிகளை காணலாம். பெரிய கொம்பன் யானைகளின் சத்தத்துடன் காணலாம்.

இந்த பூங்காவில் உங்கள் வாகனங்களை நிற்பதற்கு அனுமதி இல்லை. மிதமான வேகத்தில் சென்று கொண்டே உங்களுக்கு பிடித்த காட்சிகளை கேமராவில் க்ளிக் செய்ய கொள்ளலாம். இந்த வனவிலங்கு காட்சிகள் கண்டிப்பாக நமக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

PC: wikipedia.org

வயநாட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்

வயநாட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்

நீங்கள் பண்டிபூர் காட்டை சுற்றி பார்த்த பிறகு நுழைவது குடலூர் ஆகும். இந்த சிறிய நகரம் அழகான சலசலப்பு ஓசையுடன் வயநாட்டை நோக்கி நகர்த்தி செல்லும். இப்பொழுது நீங்கள் கேரளா மாநிலத்தில் நுழைவீர்கள் மேலும் காலநிலை மாற்றமும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எங்கு பார்த்தாலும் பசுமை, மழை என்று கேரளா தன் இயற்கை கரத்தால் உங்களை வரவேற்க தயாராக இருக்கும். நீங்கள் முன்னதாகவே வசிக்கும் அறைகளை புக் செய்து கொள்வது நல்லது. இங்கே ஏராளமான அழகான வயநாடு ரிசர்ட்கள் உள்ளன

PC: wikimedia.org

 பேக்கிங்

பேக்கிங்

அப்படியே உங்கள் பேக் மற்றும் பொருட்களை ரூமில் வைத்து விட்டு கேரளா ஸ்டைலில் வல்லியதோர் உணவருந்தி கொண்டு அப்படியே பூக்கோட் ஏரியை நோக்கி பயணத்தை மேற்கொள்ளலாம். உங்கள் மாலை நேரத்தை நன்றாக செலவழிக்கவும் மற்றும் படகு சவாரிக்கும் சரியான இடமாக இது இருக்கும்.

நமது அடுத்த பயணம் செயின் மரம் ஆகும். ஆமாங்க இங்கே ஒரு அத்திமரத்தின் கிளைகளில் செயின் தொங்குகிறது அதனால் இதற்கு செயின் மரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பின்னாடி சுவராஸ்யமூட்டும் கதைகளும் சொல்லப்படுகின்றன. காலனிய ஆட்சி காலத்தில் ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் உள்ளூர் ஆதிவாசி இளைஞரின் உதவியுடன் வயநாட்டை கண்டறிந்தார். இந்த அழகிய நகரத்தை கண்டறிந்த பெருமை தனக்கே வர வேண்டும் என்று பேராசை பெற்று அந்த இளைஞனை அவர் கொன்றதாகவும் அங்கே சுற்றித் திரிந்த அவரின் ஆத்மாவை ஒரு பூசாரி சங்கிலியால் இம்மரத்தில் கட்டி வைத்துள்ளனர் என்ற கதை கூறப்படுகிறது.

இதற்கு அடுத்த படியாக உங்களுக்கு கோசி படுக்கை காத்திருக்கிறது.

PC: wikimedia.org

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

நல்ல சூடான கேரளா புட்டு மற்றும் கடலை கரி சாப்பாட்டுடன் காலை உணவை முடித்த பிறகு நாம் செல்லக் கூடிய இடம் எடக்கல் குகைகள். வயநாட்டின் முக்கியமான இடமாக இது உள்ளது. இங்கே ஏறிச் சென்று பார்க்கும் குகைகளுக்கு உங்கள் எனர்ஜி முழுவதும் செலவானாலும் இதுவரை நீங்கள் பார்த்திராத அனுபவத்தை கொடுக்கும்.

இந்த குகை இரண்டு பாறைகளின் பிரிவில் உருவாகியுள்ளது. இதன் வயதை கண்டறிவது இன்னும் கடினமாக உள்ளது. இதைப் பற்றிய ஆராய்ச்சி வேலையில் கற்பாறை செதுக்கு வேலை மூன்று பிரிவாக அகழ்வாராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டுவருகிறது.

அடுத்த படியாக நாம போக இருப்பது பனாசுரா சாகர் அணை. இந்த அணை கபினி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே முதல் மிகப்பெரிய அணையாகவும் ஆசிய கண்டத்திலயே இரண்டாவது பெரிய அணையாகவும் இது உள்ளது. இந்த அணையிலும் நீங்கள் மோட்டார் படகு சவாரி மேற்கொண்டு செம்பிரா எல்லையையும் பனாசுரா எல்லையும் காணலாம்.

PC: wikimedia.org

ஹாட் ரோட்டில் பயணம்

ஹாட் ரோட்டில் பயணம்

அப்படியே நீங்கள் ஹாட் ரோட்டில் பயணம் மேற்கொண்டு ஒரு சிறிய ஹோட்டலில் உங்கள் மதிய உணவை முடித்து கிளம்பி விடலாம். இந்த ஹாட் சாலை தான் வயநாட்டின் முடிவாகும். இது கோழிக்கோடு நுழைவு வாயிலாக உள்ளது. இதன் வழியாக பயணம் மேற்கொள்ளும் போது நிறைய காடுகளையும் பசுமை சூழலையும் பார்க்கலாம்.

நமது அடுத்த நிறுத்தம் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு சிறப்பு மிக்க ஹெரிடேஜ் மியூசியம். இதற்கு அடுத்த படியாக நாம் செல்லப் போவது பழசிராஜா சமாதி. வயநாட்டின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட குறுநில மன்னரின் சமாதி தான் இது. இவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து துணிச்சலுடன் போராடியவர்.

இதற்கு அப்புறம் உங்களுக்கு சோர்வாக இருந்தால் உங்கள் ரூமிற்கு சென்று ஒரு குட்டி தூக்கத்தை போட்டு விடுங்கள்.

PC: wikimedia.org

 மூன்றாம் நாள்

மூன்றாம் நாள்

அதிகாலையிலேயே உங்கள் பயணத்தை பெங்களூர் நோக்கி ஆரம்பித்து விடுங்கள். இப்பொழுது நாம் பார்க்க போவது முத்தங்கா சரணாலயம். உங்களது ரூமை காலி செய்து விட்டு முத்தங்கா சரணாலயத்தை நோக்கி செல்லுங்கள். இது பண்டிபூர் மற்றும் முதுமலை காட்டிற்கும் இடையே அமைந்துள்ளது. இதன் வழியாக செல்லும் போது சாலைகளை கடந்து செல்லும் யானைகள், புல் மேயும் காட்டு எருமைகள் மற்றும் துள்ளி குதிக்கும் மான்கள் போன்றவற்றை காணலாம்.

அப்படியே நீங்கள் பரபரப்பான பெங்களூர் நகரத்திற்குள் சென்று விடலாம்.

என்னங்க இயற்கை ஆட்சி புரியும் வயநாடு பயணத்திற்கு தயாராகி விட்டீங்களா.

PC: wikimedia.org

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X