» »பிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது? ஒரு வழிக்குறிப்பு!!

பிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது? ஒரு வழிக்குறிப்பு!!

Written By: R. SUGANTHI Rajalingam

கொடச்சேரி என்ற மலை உச்சி பகுதி கர்நாடகவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் கிட்டத்தட்ட 1343 மீட்டர் ஆகும். இந்த பகுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இயற்கை பாரம்பரியம் நிரம்பிய இடமாக இது உள்ளது.இதுவே கர்நாடகவின் பத்தாவது உயரமான பகுதியாகவும் உள்ளது.

இந்த கொடச்சேரி மலைப் பகுதியில் தான் மிகவும் புகழ் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயில் உள்ளது. இந்த மலை உச்சி கொல்லூர் மூகாம்பிகை தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. எனவே இது உங்களுக்கு பலவிதமான விலங்குகளையும், தாவரங்களையும் காணும் இடமாக இருக்கும். இங்கே பல்வேறு விதமான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றை கண்டு களிக்கலாம்.

எப்படி செல்வது

எப்படி செல்வது


வான்வெளி பயணம்

மங்களூர் விமான நிலையம் தான் மிக அருகில் உள்ள இடமாகும். இது 153 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே எல்லா விதமான நகரங்களுக்கும் வெளியூர் இடங்களுக்கும் செல்லக் கூடிய வசதிகள் உள்ளன.

ரயில் வழிப்பயணம்

குந்தபூர் ரயில் நிலையம் மங்களூருடன் இணைக்கிறது. இந்த ரயில் நிலையம் கொடச்சேரி யிலிருந்து 76 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.

சாலை வழிப்பயணம்

கொடச்சேரி செல்ல தகுந்த சாலை வழிப்பயணம் தேவைப்படுகிறது. கொல்லூர் செல்வதற்கு நிறைய போக்குவரத்து வசதிகள் இங்கே இருக்கின்றனர்.

புறப்படும் இடம் : பெங்களூர்

சேரும் இடம் :கொடச்சேரி

சுற்றுலா காலம் :அக்டோபர் - மார்ச்

PC: Ashwin Kumar

பாதை வழிகாட்டி

பாதை வழிகாட்டி

பெங்களூரிலிருந்து கொடச்சேரி செல்வதற்கு ஆகும் தூரம் 442 கி. மீ ஆகும். இதற்கு மூன்று பாதைகள் இருக்கின்றன.

வழி 1: பெங்களூர் - தும்கூர் - தவன்கிரி - ஹோனாலி - கொடேஷ் - நகர - கொடச்சேரி NH48

வழி 2: பெங்களூர் - குனிகல் - அரசிகரி - தரிகிரி - நகர - கொடச்சேரி - பெங்களூர் ஹானவர் ரோடு

வழி 3:பெங்களூர் - தும்கூர்-ஹிரியூர் - தரிகிரி - நகர - கொடச்சேரி NH48 மற்றும் SH 24

பயண நேரம்

பாதை 1 வழியாக தேசிய நெடுஞ்சாலை 48 ல் சென்றால் கொடச்சேரி செல்வதற்கு 8 மணி நேரம் ஆகும். இந்த பாதை தவன்கிரி மற்றும் நகர வழியாக செல்கிறது.

இந்த பாதையில் சாலை வசதி நன்றாக இருப்பதால் எளிதாக 442 கிலோ மீட்டரில் நீங்கள் கொடச்சேரியை அடைந்து விடலாம்.

பாதை 2 வழியாக சென்றால் கொடச்சேரி அடைய 8.16 மணி நேரம் ஆகும். மேலும் பெங்களூரிலிருந்து கொடச்சேரிக்கு ஹானவர் சாலை வழியாக சென்றால் தூரம் 392 கிலோ மீட்டர் ஆகும்.

பாதை 3 வழியாக சென்றால் குறைந்தது 8.5 மணி நேரம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் 24 வழியாக 410 கிலோ மீட்டரில் கொடச்சேரியை அடைந்து விடலாம்.

இந்த பயணத்திற்கு வார விடுமுறை நாட்களே போதுமானதாக இருக்கும். சனிக்கிழமை காலையில் கிளம்பி அந்த நாள் முழுவதையும் கொடச்சேரியில் கழித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அல்லது மதிய வேளையில் பெங்களூர் கிளம்பி விடலாம். இந்த பயணம் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுமையான பயணத்திற்கு கூட்டிச் செல்லும்.

தும்கூர் மற்றும் தவன்கிரியில் சின்னதா ஒரு நிறுத்தம்

தும்கூர் மற்றும் தவன்கிரியில் சின்னதா ஒரு நிறுத்தம்

பெங்களூர் போக்குவரத்து இடைஞ்சலை மனதில் கொண்டு நாம் சீக்கிரம் கிளம்பி விட்டால் எந்த வித இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் கொடச்சேரிக்கு பறந்து போய் விடலாம். தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் காலை உணவை முடிக்க நிறைய உணவு விடுதிகள் உள்ளன.

இங்கே போகின்ற வழியில் நிறைய தாபா ஹோட்டல்கள் உங்கள் பசியை நிரப்ப ரெடியாக இருக்கின்றனர். அப்படியே நிறுத்தி சுடச்சுட சுவையான மொறு மொறுப்பான தோசை யுடன் உங்கள் காலை உணவை முடித்து விட்டு அப்படியே மதிய வேளைக்கு தாவன்கரேக்கு சென்று விடலாம்.

இந்த பயணம் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுமையான பயணத்திற்கு கூட்டிச் செல்லும். அதுவும் பெங்களூர் போன்ற போக்குவரத்து நெரிசல், மக்கள் நெரிசல் என்று இருந்து விட்டு இங்கே செல்லும் போது சுற்றிலும் பசுமை, பனி மூட்டம், சில்லென்று காற்று, அமைதியான கிராமம் என்று உங்களுக்கு போகும் வழி எல்லாம் இயற்கையை பரிசளிக்கும்.

PC: Ashwin Kumar

 கர்நாடகவின் மான்செஸ்டர்

கர்நாடகவின் மான்செஸ்டர்

தவன்கிரி கர்நாடகவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதி ஹைதர் அலி காலத்தில் இருந்து தொழில் முனைவதற்கு சிறந்த இடமாக இருந்து வருகிறது. இந்த இடமும் வித விதமான உணவிற்கு பேர் போன இடமாக உள்ளது.

இங்கே உள்ள தவன்கிரி பென்னி தோசை மிகவும் புகழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் ருசியிலும் பேர் போனது. இங்கிருந்து 183 கிலோ மீட்டரில் குறைந்தது 4 அல்லது 5 மணி நேரத்தில் கொடச்சேரியை அடைந்து விடலாம்.

PC :Jayeshj

கொடச்சேரி

கொடச்சேரி

உங்கள் வாழ்க்கை பயணத்தில் கொடச்சேரி மலைப் பிரதேசம் கண்டிப்பாக முக்கியமான இடத்தை பெறும். இதுவரை நீங்கள் காணாத தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க இயற்கை எழில் பொங்கும் இடமாகவும் கொடச்சேரி இருக்கும்.

அழகான மலையை சுற்றி பசுமை கம்பளம் விரித்தாற் போல் இருக்கும் சோலா காடுகள், குட்டி குட்டி மலை முகடுகள், சில்லென்று வீசிச் செல்லும் காற்று என்று எல்லாமே உங்களை பரவசம் செய்து விடும்.

PC: Srutiagarwal123

சர்வஞ்சன பீடம்

சர்வஞ்சன பீடம்

ஆதிசங்கரர் தனது தியானத்தை இந்த இடத்தில் மேற்கொண்டு தான் கொல்லூரில் மூகாம்பிகை கோயிலை ஏற்படுத்தினார் என்று கூறப்படுகிறது. இங்கே காணப்படும் சிறிய கோயில் தான் சர்வஞ்சன பீடம் ஆகும். இந்த பீடம் கற்களால் ஆதி சங்கராச்சாரியாரால் கட்டப்பட்டது.

இந்த கோயிலில் தான் அம்மன் முதலில் எழுந்தருளியுள்ளார். அப்புறம் தான் மூகாம்பிகை கோயில் கட்டப்பட்டது.

இந்த மூகாம்பிகை கோயிலின் முன் பகுதியில் 40 அடி உயரத்தில் பெரிய இரும்புத் தூண்கள் உள்ளது. இது மவுண்ட் அபு கட்டடக்கலையில் இருப்பது போல் உள்ளது. பக்தர்கள் அனைவரும் அம்மன் இந்த தூணை திரிசூலமாக பயன்படுத்தி தான் அரக்கன் மூகாசுரனை கொன்றார் என்று நம்புகின்றனர்.

PC: Ashwin Iyer

கொல்லூர் மூகாம்பிகை தேவி

கொல்லூர் மூகாம்பிகை தேவி


இந்த கொல்லூர் மூகாம்பிகை கோயில் நீங்கள் காண வேண்டிய முக்கியமான இடமாகும். இங்கே அம்மன் முப்பெரும் தேவியான சரஸ்வதி, துர்கா மற்றும் லட்சுமி யாக காட்சியளிக்கிறார்.

இந்த கோயில் எப்பொழுது கட்டப்பட்டது என்பதற்கு இன்னும் தக்க சான்றுகள் இல்லை. ஆனால் இங்கே உள்ள அம்மன் சிலை ஆதிசங்கரரால் நிறுவப்பட்டு உலக மக்கள் அனைவருக்கும் அருள் பொழிகின்றார்.

PC: Vinayaraj

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்