சத்தியமங்கலம் என்றாலே முதலில் நம் கண் முன் தோன்றுவது அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தோற்றமும், நீர் வழிந்தோடும் அணைகளுமே. சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பவானிசாகர், கொடிவேரி அணைகளும், அணைத்தொப்பு என்னும் குட்டி அணையும் இங்கே போற்றத்தக்க சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இவற்றிற்கு அடுத்தபடியாக பண்ணாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஆன்மீகத் தலமாக திகழ்கிறது. இப்படி எந்தளவிற்கு சுற்றுலாத் தலங்களுக்காக புகழ்பெற்றுள்ளதோ அந்தளவிற்கு அமானுஷ்யங்களுக்காகவும் சத்தியமங்கலம் புகழ் பெற்றிருப்பது நாம் அறிந்ததுதான்.

சத்தியமங்கலம் வனப்பகுதி
சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதிகயாக உள்ளன. இவற்றுள், யானைகள், புலி, மான் என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக, அவ்வாப்போது யானைகள் ஊருக்குள் ஊடுருவதும், மலைச் சாலையில் புலிகள் பயணிகளை அச்சுருத்துவதும் அன்றாடம் செய்திகளில் நாம் கேட்டிருப்போம்.
Tamal Das

புலிகள் காப்பகம்
சத்தியமங்லத்தில் உள்ள புலிகள் காப்பகம் குறிப்பிடத்தக்க முக்கியச் சுற்றுலாத் தலமாகும். இங்கே சமீபத்தில் துவங்கப்பட்ட வண்ணப் பூரணி என்னும் திட்டம் பயணிகளால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது. காட்டுக்குள்ளேயே சென்று விலங்குகளைப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலாத் திட்டம், வனப் ஆர்வலர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளை பயணிகள் கண்டு ரசித்திட இத்திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
Sushilghugul

அமானுஷ்யமும் கூட...
மேற்குறிப்பிட்டவாறு சத்தியமங்கலம் எந்தளவிற்கு சுற்றுலாத் தலங்களுக்காக புகழ்பெற்றுள்ளதோ அந்தளவிற்கு அமானுஷ்யங்களுக்காகவும் பரவலாக அறியப்படுகிறது. சத்தியமங்கலம் என்றால் மலைகளும், அணைகளும் மட்டும் நம் மனதில் தோன்றாது. கூடவே, ஒரு காலத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லாம் கண்டு அஞ்சிய வீரப்பனின் நினைவுகளும் நம் ஆழ்மனதில் இருந்து ஒருவித உணர்ச்சியுடன் தோன்றும் அல்லவா.

வீரப்பனும், சத்தியமங்கலமும்
ஒரு காலத்தில் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட மலைக் காடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் வீரப்பன். இது அனைவரும் அறிந்ததுதான். அப்போது, இவரால் பல எதிரிகள் காடுகளுக்குள் வைத்து கொல்லப்பட்டதாகவும், சூழ்ச்சிகளின் நடுவே கொல்லப்பட்ட வீரப்பனின் ஆவியும் இன்றும் இக்காட்டுப் பகுதியில் உலாவி வரும் விசயம் உங்களுக்குத் தெரியுமா ?.
Jaseem Hamza

தேசிய நெடுஞ்சாலை 209
சத்தியமங்கலம் வன விலங்கு சரணாலயம் வழியாக செல்லும் சாலை தான் தேசிய நெடுஞ்சாலை 209. தமிழக, கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன் பதுங்கியிருந்து காட்டு வழிப் பாதையில் இதுவும் ஒன்று. இப்பாதையில் இருந்து தவறி காட்டினுள் செல்பவர்கள் எளிதில் திரும்பி வெளிவர முடியாத காலமும் இருந்தது.
Jaseem Hamza

இன்றும் உலாவும் வீரப்பன்
வீரப்பன் உயிருடன் இருந்தபோது, சத்தியமங்கலம் வனப்பகுதியில் வைத்து பலரை கொன்றுள்ளதாக தகவல்கள் உள்ளன. அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் ஆவியும், ஏன் வீரப்பனின் ஆவியும் கூட சத்தியமங்கலம் வனப்பகுதியில் இன்றும் உலாவி வருவதாக உள்ளூர் மக்களால் கூறப்படுவது திடுக்கிட வைக்கிறது.
Jaseem Hamza

இரவு நேரப் பயணம்
பெரும்பாலும், தேசிய நெடுஞ்சாலை 209 வழியாகத்தான் தமிழக- கர்நாடக பயணிகள் பயணிப்பது வழக்கம். குறிப்பாக, இரவு நேரங்களில் உள்ளூர் லாரிகளும், வெளி மாநில லாரிகளும் அதிகளவில் இச்சாலையில் பயணிக்கும். பல ஊர் கடந்து பயணிக்கும் ஓட்டுநர்களே கண்டு அஞ்சி நடுங்கும் வனப் பகுதியாக இந்த சத்தியமங்கலம் சாலை உள்ளது. காரணம், திடீரென சாலையில் தோன்றும் ஓர் உருவம் தான்.
Suniltg

அஞ்சும் பழங்குடி மக்கள்
சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பகுதியில் பல பழங்குடியின மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. வீரப்பனால் பெரிதும் பாதிப்படையாத இம்மக்களும் கூட தற்போது இரவு நேரங்களில் திடீர் திடீரென வனப் பகுதியில் அலறல் சத்தம் கேட்பதாக நம்புகின்றனர். நள்ளிரவு நேரங்களில் பேய் போன்ற அமானுஷ்ய உருவங்களையும் பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றனர் இம்மக்கள்.
Jaseem Hamza

பயணிகளை காக்கும் பண்ணாரி அம்மன்
சத்தியமங்கலம் வன விலங்கு சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 209-யைக் கடப்பதற்கு சற்று முன்னதாக உள்ளது திம்பம் மலைப் பாதை. இதற்கு முன்னதாக உள்ள பண்ணாரி அம்மன் கோவில் தான் பயணிகளின் பாதுகாவலனாக நம்பப்படுகிறது. இச்சாலையில் பயணிக்கும் முன்னதாக பண்ணாரி மாரியம்மனை வணங்கி செல்கின்றனர் பயணிகள்.
Krishnaeee



Click it and Unblock the Notifications




