» »ராணி பத்மாவதி கோட்டை பற்றி நீங்கள் அறிந்திராத ரகசியங்கள்

ராணி பத்மாவதி கோட்டை பற்றி நீங்கள் அறிந்திராத ரகசியங்கள்

Written By: Udhaya

சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் பத்மாவதி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான பத்மாவதி பாத்திரத்தை தீபிகா எடுத்து நடித்திருந்தார். இவர் மேவார் நாட்டின் ராணியாக நடித்திருந்தார். இந்த பதிவில் நாம் ராணி பத்மாவதியின் மேவார் நாடு பற்றியும், அதன் வரலாறு பற்றியும், தற்போது அது எப்படி இருக்கிறது என்பது பற்றியும் காண்போம்.

மேவார்

மேவார்

மேவார் நாடு என்றழைக்கப்பட்ட நாடு, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கு பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் பில்வாரா, சித்தோர்கர், ராஜ்சமந்த், உதய்ப்பூர், பிராவா டெசில் ஆப் ஜலவார் , நீமுச், மந்தசவுர் என பல இடங்களாக இப்போது உள்ளது. இது ராஜபுத்திர வம்ச மன்னர்கள் ஆண்ட பகுதியாகும்.

Nagarjun Kandukuru

ஆரவல்லி மலைத்தொடர்கள்

ஆரவல்லி மலைத்தொடர்கள்


இந்த மேவார் நாடு, ஆரவல்லி மலைத்தொடர்களின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. வடக்கில் அஜ்மீரும், தெற்கில் குஜராத்தும், கிழக்கில் ஹதோடி எனும் பகுதியும் எல்லையாக அமைந்துள்ளது.

ஆரவல்லி மலைத்தொடர் மிகவும் பரந்துவிரிந்த மலைப்பகுதியாகும். இது மிகவும் அழகானதாகவும், பல உயிரினங்கள் வாழும் பகுதியாகவும் அமைந்துள்ளது.

Unknown

சுற்றுலாப் பகுதிகள்

சுற்றுலாப் பகுதிகள்


சித்தோர்கர் கோட்டை, உதய்ப்பூர், ஏரி மாளிகை, உந்தலகர்க், ஜெய்சமந்த் ஏரி, உதய் சாகர் ஏரி, பதேசாகர் ஏரி, ஷில்பாகிராம், ஏக்லிங்க்ஜி, நாத்ட்வாரா, ஹால்டிகட்டி, கும்பல்கர்க், சார்புஜா கோயில், ரனக்பூர் கிராமம் உள்ளிட்ட பல இடங்கள் இந்த பகுதியில் கட்டாயம் செல்லவேண்டிய இடங்களாகும்.

Nripendra.iitk

சித்தோர்கர் கோட்டை

சித்தோர்கர் கோட்டை


இந்நகரத்தின் பிரதான சிறப்பம்சம் 180 மீ உயரத்தில் அமைந்துள்ள சித்தோர்கர் கோட்டையாகும். இந்த கோட்டை வளாகத்தில் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை இருப்பது குறிப்பிடத்தக்கது. மஹாராணா ஃபதேஹ் சிங் மன்னரால் கட்டப்பட்ட ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை ஒரு அழகான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஸ்தலமாகும். இந்த அரண்மனையின் உள்ளே ஒரு அற்புதமான விநாயகர் சிலை, ஒரு பெரிய நீரூற்று மற்றும் அழகிய சுவரோவியங்களைக் காணலாம்.

Krutikaa

துல்ஜா பவானி கோயில்

துல்ஜா பவானி கோயில்


புரதானமான துல்ஜா பவானி கோயில் என்றழைக்கப்படும் இந்தக்கோயில் 1535ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது சித்தோர்கர் கோட்டையின் பிரதான நுழைவாயிலான ‘ராம் போல்' என்றழைக்கப்படும் வாசலுக்கருகில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் துல்ஜா பவானி அல்லது துர்யா பவானி என்றழைக்கப்படும் தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் சுவர்களை விதவிதமான ஹிந்துக்கடவுளரின் உருவங்கள் அலங்கரிக்கின்றன. சித்தோர்கர் பூர்வகுடிகளின் கலைத்திறமையை எடுத்துரைக்கும் கிரீடமாக இந்தக்கோயில் திகழ்கிறது.

Coolgama

சின்ன கஜுராஹோ

சின்ன கஜுராஹோ


சித்தோர்கர் - புண்டி சாலையில் சித்தோர்கர் நகரத்திலிருந்து 90கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிறு கிராமம் இந்த மேணல் ஆகும். பிரபலமான கஜுராஹோ வரலாற்றுத்தலம் போன்றே அழகிய இயற்கைச்சூழலையும் அற்புதமான புராதனக்கோயில்களையும் கொண்டுள்ளதால் இது ‘சின்ன கஜுராஹோ' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே பல புராதனமான பௌத்த கோயில்களைக் கொண்டுள்ள இந்த ஸ்தலத்தில் புதிது புதிதாக இன்னும் கோயில்கள் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கோயில்கள் தவிர அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்று அடர்ந்த வனப்பகுதி ஆகியன இந்த ஸ்தலத்தை ஒரு பிரசித்தமான சிற்றுலாப்பகுதியாகவும் மாற்றியுள்ளன

Ssjoshi111

கௌமுக் குண்ட்

கௌமுக் குண்ட்

கௌமுக் குண்ட் எனும் இந்த நீர்த்தேக்கம் புகழ்பெற்ற சித்தோர்கர் கோட்டையின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. கௌமுக் எனும் சொல்லுக்கு ‘பசுவின்வாய்போன்ற' என்பது பொருளாகும். பாறைகளின் இடையே உள்ள வெடிப்புகளின் வழியே ஓடி வரும் நீரானது இறுதியில் இந்த நீர்த்தேக்கத்தை அடைகிறது.

இந்த கௌமுக் குண்ட் தீர்த்தத்தில் உள்ள மீன்களுக்கு சுற்றுலாப்பயணிகள் தீனி போட்டு மகிழ அனுமதிக்கப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகிலேயே உள்ள ராணி பிந்தர் சுரங்கப்பாதை அமைந்துள்ளது.

உள்ளூர் கதைகளின்படி, இந்த சுரங்கப்பாதையானது சித்தோர்கர் ராணி பத்மினி ‘ஜௌகார்' (கௌரவத்தற்கொலை)செய்துகொண்ட பாதாள அறை வரை செல்வதாக சொல்லப்படுகிறது

Findan

மீராபாய் கோயில்

மீராபாய் கோயில்

ராஜபுதன இளவரசியான மீராபாய்'க்காக இந்த மீரா கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர் தன் ராஜ சௌகரியங்களை எல்லாம் மறுத்து கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் கழித்த பெண் பக்தையாக அறியப்படுகிறார்.

மீரா பாய் தன் வாழ்நாள் முழுக்கவே பஜனைகளைப் பாடுவதிலும் கிருஷ்ண பஹவானைத் துதிப்பதிலும் கழித்துள்ளார். ராஜபுதன கட்டிடக்கலையின் ஒரு அற்புதமான மாதரிவடிவமாக இந்த மீராபாய் கோயிலைச்சொல்லலாம்.

இது கும்பா ஷியாம் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. வட இந்திய கட்டிடக்கலை பாணியை இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலைச்சுற்றிலும் உள்ள நான்கு திறந்த மாடங்கள் காணப்படுகின்றன. மேலும் கோயிலின் உட்பகுதியை கலையம்சம் நிறைந்த மீரா மற்றும் கிருஷ்ணர் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.

Sujay25

 மஹா சதி

மஹா சதி


மஹா சதி எனப்படும் இந்த ஸ்தலம் உதய்பூர் மன்னர்கள் தகனம் செய்யப்பட்ட இடமாகும். இங்கு கங்கோத்பாவா குண்ட் எனும் இயற்கை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. மக்கள் நம்பிக்கைகளின்படி இது கங்கை ஆற்றின் துணை ஆறு ஒன்றினால் உருவானதாக சொல்லப்படுகிறது.

அஹார் என்ற பெயரைக்கொண்ட இந்த பாதாள நீரோடை நிலத்துக்கு அடியிலிருந்து வெளிப்பட்டு ஒரு நீர்த்தேக்கமாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கங்கை நீரின் புனித குணம் இந்த நீர்த்தேக்கத்துக்கும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இந்த ஏரிக்கருகிலேயே ஒரு சிவன் கோயிலும் உள்ளது.

Shakti

கீர்த்தி ஸ்தம்பம்

கீர்த்தி ஸ்தம்பம்


கீர்த்தி ஸ்தம்பம் என்றழைக்கப்படும் இந்த ஜைன மரபுக்கோபுரம் 22 மீட்டர் உயரமும் ஏழு தளங்களும் கொண்ட கோபுரமாகும். இது முதலாம் ஜைன தீர்த்தங்கரரான ஆதிநாதருக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

சோலங்கி கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ள கீர்த்தி ஸ்தம்பம் பலகணிகள் மற்றும் அழகிய சுவர்ச்சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த ஸ்தம்பத்தின் சுவர்களில் பயணிகள் ஜைன தீர்த்தங்கரர்களின் உருவங்களை காணலாம்.

இந்த ஸ்தம்பத்தின் இரண்டாம் தளத்தில் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள ஆதிநாதர் சிலை காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலின் ஏழாவது தளத்திலிருந்து சித்தோர்கர் நகரின் அழகை உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

Schwiki

ராணா கும்பா அரண்மனை

ராணா கும்பா அரண்மனை


கர்ராஜபுதன மன்னரான மஹாராணா கும்பா வசித்த ஒரு வரலாற்றுச்சின்னம் இந்த ராணா கும்பா அரண்மனை ஆகும். 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கம்பீரமான அரண்மனை இந்தியாவின் மிகச்சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. ராஜபுதன வம்சத்தாரின் கட்டிடக்கலை அறிவின் உச்சத்தை பறைசாற்றும் இது சுற்றுலாப்பயணிகளிடையே மிகப்பிரசித்தமான ஸ்தலமாக விளங்குகிறது. இந்த அரண்மனையில் ராணி பத்மினி தன் அந்தப்புர பெண்களுடன் ‘ஜௌகார்' எனப்படும் ‘கௌரவத்தற்கொலை' புரிந்து கொண்ட பாதாள அறைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எதிரிகளின் கைகளில் சிக்கி மானத்தை இழக்காமல் இருக்க அக்கால ராஜகுல மகளிர் இந்த ‘ஜௌகார்' எனும் முடிவை தேர்ந்தெடுக்கும் வழக்கம் வரலாற்றுகால மரபில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனைக்கு அருகிலேயே சிவனுக்கான கோயில் ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த அரண்மனை வளாகத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக ‘ஓலி-ஒளி' காட்சி விளக்க நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன

Shakti

பத்மினி அரண்மனை

பத்மினி அரண்மனை

வீரமும் அழகும் பொருந்திய பத்மினி ராணியார் வசித்த அரண்மனையே இந்த பத்மினி அரண்மனை ஆகும். கம்பீரமான சித்தோர்கர் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள இது பத்மினி ராணியாரின் வீரம் மற்றும் நளினத்திற்கு சான்றாகவும் நிலைத்து நிற்கிறது. இந்த அரண்மனைக்கு அருகில் ஒரு அழகிய தாமரைக்குளம் உள்ளது. இந்த இடத்தில்தான் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு ராணியாரின் அழகை தரிசிக்கும் அனுபவம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. ராணியாரின் அழகில் மதிமயங்கிய சுல்தானின் ஆசையே பின்னர் யுத்தமாக முடிந்துள்ளது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இந்த அரண்மனையானது சுற்றிலும் எழில் மிளிரும் இயற்கைச்சூழலையும் பெற்றுள்ளது. சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள நீலகண்ட மஹாதேவ் கோயில் இந்த அரண்மனைக்கு அருகில் உள்ளது.

Jonathan Freundlich

விஜய ஸ்தம்பம்

விஜய ஸ்தம்பம்


விஜய ஸ்தம்பம் அல்லது வெற்றிக்கோபுரம் என்றழைக்கப்படும் இந்த பிரபலமான சுற்றுலா அம்சம் சித்தோர்கர் நகரில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தை மஹாராணா கும்பா மன்னர் 1440 ஆண்டு கட்டியுள்ளார்.

இந்த கலையம்சம் கொண்ட அமைப்பு முகமது கில்ஜியை வெற்றிகொண்டதன் அடையாளமாக எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 37 மீட்டர் உயரங்கொண்ட இந்த கோபுரம் 9 தளங்களை கொண்டுள்ளது.

ஹிந்து தெய்வங்களின் உருவங்கள் இதன் சுவர்களை அலங்கரிக்கின்றன. ராமாயண மற்றும் மஹாபாரத இதிகாச நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் அற்புதமான மற்றும் நுணுக்கமான சிற்ப வடிப்புகளை இதனுள்ளே பார்க்கலாம். இதன் உச்சியிலிருந்து நகரத்தின் அழகை கண்களால் பருக முடிவது மற்றொரு இனிமையான அனுபவமாகும்.

Schwiki

உதய்ப்பூர் ஏரி மாளிகை

உதய்ப்பூர் ஏரி மாளிகை


ஏரி மாளிகை அல்லது அரண்மனை என்பது, உதய்ப்பூரில் அமைந்துள்ள பிசோலோ ஏரியில் அமைந்துள்ள அரண்மனையாகும். இது முன்னர் ஜஹ் நிவாஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. இதில் 83 அறைகளும் உள்ளன.

தரைப்பகுதியில் கறுப்பு வெள்ளை நிறத்தில் மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. சிப்பாய் கலகத்தின்போது வெள்ளைக்காரர்கள் தங்கள் குடும்பங்களுடன் இங்கு தங்கியது குறிப்பிடத்தக்கது.


own work

 ஷில்ப்கிராம் அருங்காட்சியகம்

ஷில்ப்கிராம் அருங்காட்சியகம்

கைவினை பொருள்களுக்கான ஒரு இடமாக விளங்கும் இந்த பகுதி ஷில்ப்கிராம் என்று அழைக்கப்படுகிறது. மதோப்பூரிலிருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

Gopalsinghal7

ஏக்லிங்கிஜி

ஏக்லிங்கிஜி


உதய்ப்பூரில் அமைந்துள்ள இந்து கோயிலுக்கு ஏக்லிங்க்ஜி என்ற பெயருள்ளது. இது 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மகாசிவராத்திரி இந்த கோயில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.


Nikhil Varma

Read more about: travel, temple, fort, rajasthan