Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 7 அதிசயங்கள்!

இந்தியாவின் 7 அதிசயங்கள்!

By Super Admin

உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன.

இவையெல்லாவற்றையும்விட உலகின் 8-வது அதிசயமாக உலக அழகி ஐஸ்வர்யாராயை நாம் எல்லோருக்கும் தெரியும்!!!

அதேவேளையில் இந்தியாவின் 7 அதிசயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வதில் சாதாரணமாக எலோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்.

எவையெல்லாம் இந்தியாவின் 7 அதிசயங்களாக பார்க்கப்படுகின்றன, அப்படி பார்க்கப்படும்படி என்ன அதிசயம் அவற்றில் காணப்படுகின்றன என்று பார்ப்போம்.

சிரபுஞ்சி வேர்ப்பாலம்

சிரபுஞ்சி வேர்ப்பாலம்

மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் வேர்களால் ஆன பாலம் உள்ளது. இது இந்தியாவின் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்

மாமல்லபுரம் சமநிலை பாறை

மாமல்லபுரம் சமநிலை பாறை

மாமல்லபுரத்தில் சரிவான பாறையின் மீது பந்து போன்ற பாறை சரிவில் விழாமல் காணப்படுகிறது. இது இந்தியாவின் 7 உலக அதிசயங்களில் இரண்டாவதாகும்.

இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள கிளிக்குங்கள்

லொனார் விண்கல் பள்ளம்

லொனார் விண்கல் பள்ளம்

52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே எரிகல் மோதி அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும்.

இதுகுறித்து மேலும் அறிய கிளிக்குங்கள்

மேக்னடிக் ஹில்

மேக்னடிக் ஹில்

உங்கள் காரை ஆப் செய்து நிறுத்தினால் கூட தானாகவே தன்னை நோக்கி இழுக்கும் சக்தி கொண்ட இந்த மலைதான் காந்த மலை. இது லடாக்கில் உள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள கிளிக்கவும்

போரா குகைகள்

போரா குகைகள்

கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய குகை போரா ஆகும்.

பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களாலேயே உருவாகியிருக்கும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகையாக கருதப்படுகிறது.

இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள கிளிக்கவும்

மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்

மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்

மணிகரன் நகரில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் ஒன்று ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாராவிலும் மற்றொன்று பார்வதி ஆற்றுப்பகுதியிலும் அமைந்துள்ளது. பார்வதி ஆற்றின் கரையிலுள்ள வெந்நீர் ஊற்று சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த ஊற்று நீரில் பல கதிரியக்க கனிமங்களும் இயற்கையான யுரேனியத் தாதும் கலந்திருப்பது பல ஆராய்ச்சிகளுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் பனிலிங்கம்

அமர்நாத் பனிலிங்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் இமயமலையின் மீது 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் அமர்நாத் குகை அமைத்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் பனிலிங்கத்தை தரிசிக்கலாம். அதாவது இயற்கையாக உருவாகும் பனிலிங்கமாக கருத்தப்படும் இது ஜூன் மாதம் உருவாகி ஆகஸ்ட் மாதத்தில் கரைந்துவிடும். இதனை தரிசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் குகைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+