» »ஜல்லிக்கட்டில் காளையை கூட அடக்கிவிடலாம் ஆனால் இதை செய்ய தில் இருக்கிறதா உங்களுக்கு?

ஜல்லிக்கட்டில் காளையை கூட அடக்கிவிடலாம் ஆனால் இதை செய்ய தில் இருக்கிறதா உங்களுக்கு?

Written By: Staff

மனிதனுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த அடங்காத ஆசைகளில் ஒன்று வானத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் பறவைகள் போல நாமும் பறக்கமுடியாதா என்பது தான். அது ஒருவகையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் நிறைவேறியது என்றாலும் கூட பறவை போல பறக்கும் அனுபவத்தை விமான பயணங்கள் தருவதில்லை என்ற ஏக்கம் இருந்தது. 

அதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது தான் 'ஸ்கை டைவிங்' என்னும் சாகச விளையாட்டு ஆகும். வானத்தில் இருந்து அப்படியே அலேக்காக குதிக்கும் இந்த சாகசத்தில் ஈடுபட நிறைய தில் இருந்தால் தான் முடியும்.

இந்தியாவிலும் சமீப காலமாக இந்த விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இவ்விளையாட்டு எந்தெந்த இடங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.   

ஸ்கை டைவிங் என்றால் என்ன?:

ஸ்கை டைவிங் என்றால் என்ன?:

இலகு ரக விமானம் மூலம் மூலம் வானில் சில ஆயிரம் அடி உயரம் வரை சென்று அங்கிருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பது தான் ஸ்கை டைவிங் என்னும் இந்த சாகச விளையாட்டு ஆகும்.

இந்தியாவில் இந்த விளையாட்டு நடக்கும் இடங்கள் பற்றி அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம்.

Vipin Sekhar

மைசூர்:

மைசூர்:

கர்னாடக மாநிலத்தில் இருக்கும் மைசூரில் தற்போது ஸ்கை டைவிங் மிகப்பிரபலமாகி வருகிறது. இங்குள்ள சாமுண்டி மலை ஸ்கை டைவிங் செய்ய ஏற்ற சூழல் உள்ள இடமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

Harsh Agrawal

மைசூர்:

மைசூர்:

மைசூரில் இதற்காகவே தனியார் முகவங்கள் இருக்கின்றன. பெங்களூருவில் இருந்து வெறும் 150 கி.மீ தொலைவில் தான் மைசூர் அமைந்திருக்கிறது. எனவே வித்தியாசமாக ஏதாவது வார விடுமுறையின் போது செய்யவேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் 'ஸ்கை டைவிங்' ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

Laura Hadden

தானா - மத்திய பிரதேசம்:

தானா - மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேச மாநிலத்தில் அதன் தலைநகரான போபாலில் இருந்து சற்றே தொலைவில் அமைந்திருக்கிறது தானா என்னும் நகரம். இந்தியாவில் முதன் முதலில் ஸ்கை டைவிங் ஆரம்பிக்கப்பட்ட இடம் என்ற பெருமைக்குரிய இடமாகும் இது.

Arbana/ë ll

தானா - மத்திய பிரதேசம்:

தானா - மத்திய பிரதேசம்:

ஆகாயத்தில் கிட்டத்தட்ட 4000அடி உயரத்தில் நிலையாக நிற்கும் விமானத்தில் இருந்து குதித்து ஆகாயத்தில் மிதந்தபடியே தானாவின் பசுமையை கண்டு மகிழலாம்.

தானாவில் ஸ்கை டைவிங் செய்ய ₹12000-₹20000 வரை வசூலிக்கப்படுகிறது.

Dave Scriven

அம்பா பள்ளத்தாக்கு - மகாராஷ்டிரா:

அம்பா பள்ளத்தாக்கு - மகாராஷ்டிரா:

முதல்முறை ஸ்கை டைவிங் செய்பவர்களுக்கு ஏற்ற இடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும்அம்பா பள்ளத்தாக்கு ஆகும். மலைகள் சூழ அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கில் மற்ற இடங்களை காட்டிலும் வானில் உயரமாக சென்று ஸ்கை டைவிங் செய்திட முடியும்.

இந்த பகுதியில் வீசும் காற்று பாராசூட் மூலம் குதிப்பதற்கு எதுவாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.

Morgan Sherwood

அம்பா பள்ளத்தாக்கு - மகாராஷ்டிரா:

அம்பா பள்ளத்தாக்கு - மகாராஷ்டிரா:

தனியாக ஸ்கை டைவிங்கில் ஈடுபட நிறைய பயிற்சி வேண்டும் என்பதால் ஏற்கனவே பலமுறை ஸ்கை டைவிங் செய்த அனுபவமிக்க பயிற்சியாளர் ஒருவருடன் இணைந்து ஸ்கை டைவிங் செய்யும் டேண்டம் டைவிங்கில் ஈடுபட இந்த அம்பா பள்ளத்தாக்கு சிறந்த இடமாகும்.

Morgan Sherwood

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:

ஆம், நம்ம ஊருக்கு பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியிலும் ஸ்கை டைவிங் நடக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?.

2012ஆம் ஆண்டில் இருந்து ஒரு தனியார் ஏஜென்சியால் ஸ்கை டைவிங் நடத்தப்படுகிறது. பாண்டிச்சேரியில் ஸ்கை டைவிங் செய்யும் போது பரந்துவிரிந்த கடலையும், அழகும் நேர்த்தியும் கொண்ட பிரஞ்சு நகரமான பாண்டிச்சேரியையும் ஒன்றாக கண்டு மகிழலாம்.

Sathish J

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் ஒரு முறை வானில் இருந்து குதிக்க 18,000மும் ஐந்து முறை ஸ்கை டைவிங் செய்ய 60,000மும் டேண்டம் ஜம்பிங் செய்ய ₹27,000 கட்டணம் ஆகும்.

கொஞ்சம் காஸ்ட்லி தான் என்றாலும் இதைவிட சுவாரஸ்யம் நிறைந்த ஒன்று இருக்கவே முடியாது. எனவே நிச்சயம் ஒருமுறையேனும் ஸ்கை டைவிங்கை முயன்று பாருங்கள்.

Beanhammer

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

ஸ்கை டைவிங் புகைப்படங்கள் !!

Laura Hadden

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

ஸ்கை டைவிங் புகைப்படங்கள் !!

Dave Scriven

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

ஸ்கை டைவிங் புகைப்படங்கள் !!

Dave Scriven

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

ஸ்கை டைவிங் புகைப்படங்கள் !!

wales_gibbons

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

ஸ்கை டைவிங் புகைப்படங்கள் !!

Philip Leara

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

ஸ்கை டைவிங் புகைப்படங்கள் !!

Lachlan Rogers

Read more about: adventure skydiving goa mysore

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்