» »இந்த கோடையில் கர்நாடகத்தின் ஐந்து அற்புத அணைகளுக்கு போய் வரலாம்

இந்த கோடையில் கர்நாடகத்தின் ஐந்து அற்புத அணைகளுக்கு போய் வரலாம்

Written By:

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது அமரக் காதல் கொண்டவர்களுக்கும் பிரத்யேகமாக எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கர்நாடகாவை சுற்றி அமைந்துள்ளன. கூர்க் மாவட்டம் அதன் பச்சை புல்வெளிகளை கொண்ட கவின் கொஞ்சும் பள்ளத்தாக்குகளால் இந்தியாவின் ஸ்காட்லேண்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த எழில் நகரம் கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கர்நாடகாவின் காப்பித் தோட்டமான சிக்மகளூர் மாவட்டமும், அம்மாவட்டத்தின் அழகிய அருவிகளுக்கு சொந்தமான கெம்மனகுண்டியும், பசுமையான குதுரேமுக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள். இந்த மாநிலம் செழிப்பாக இருப்பதற்கு இங்குள்ள அணைகளும் ஒரு காரணமாகும். அப்படிபட்ட அணைகளைப் பற்றி இந்த பகுதியில் காண்போம்.

திப்பகொண்டனஹள்ளி

திப்பகொண்டனஹள்ளி

திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தைப்போலவே இந்த மஞ்சின்பேலே அணையும் மகடி நகரத்துக்கு பாசன வசதிகளை தருவதற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் பாசன வசதியை பெறும் பகுதி ‘தொரே சாலு' என்று அழைக்கப்படுகிறது. ‘ஆற்றுப்பக்கம்' என்பது இதன் பொருளாகும். நகரின் சந்தடியிலிருந்து விலகி ஓய்வாக நேரத்தை கழிக்க விரும்புபவர்களுக்கு இது உகந்த ஸ்தலமாகும். சிற்றுலா (பிக்னிக்) மற்றும் பறவை வேடிக்கைக்கும் இது பொருத்தமாக உள்ளது. பெங்களூரிலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள இந்த அணைக்கு வரவிரும்பும் பயணிகள் மகடி சாலை வழியாக வரலாம். செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் இந்த மஞ்சின்பேலே அணைக்கு சிற்றுலா செல்ல உகந்த காலமாகும்.

wikipedia.org

 கடவினகட்டா அணை

கடவினகட்டா அணை

வெங்கடபூர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த கடவினகட்டா அணை பட்கல் நகரத்தின் நீராதாரமாக விளங்குகிறது. மழைக்காலத்தின் மழை இங்கு சேகரமாகி வருடம் முழுமைக்குமான நீர்த்தேவையை பூர்த்தி செய்யும்படி இந்த அணையில் சேகரிக்கப்படுகிறது.

பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் நேரம் இருப்பின் இந்த அணையை சென்று பார்க்கலாம். இருப்பினும் இங்கு குளியல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது ஆபத்தானதாகும்.

Pavanaja

 துங்கா அணைக்கட்டு

துங்கா அணைக்கட்டு

துங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த துங்கா அணை பயணிகளை வசீகரிக்கும் ஒரு அம்சமாக வீற்றிருக்கிறது. 535 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணைக்கு அருகிலேயே 3 கி.மீ தூரத்தில் சக்ரேபாயுலு யானைப்பயிற்சி முகாமும் அமைந்திருக்கிறது. தீர்த்தஹள்ளியிலிருந்து ஷிமோகா செல்லும் வழியில் குஜனூர் எனும் இடத்தில் இந்த துங்கா அணை அமைந்திருக்கிறது. நன்கு பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வரும் இந்த அணைப்பகுதி ஷிமோகா மாவட்டத்திலுள்ள முக்கியமான பிக்னிக் ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக பொழுதுபோக்க இது மிகவும் ஏற்றது. ஷிமோகாவிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த துங்கா அணை அமைந்துள்ளது. ஷிமோகாவிலிருந்து தீர்த்தஹல்லி செல்லும் வழியில் 20 நிமிடப்பயணத்திலேயே இந்த அணைப்பகுதியை அடைந்துவிடலாம். உள்ளூர் போக்குவரத்து வசதிகளும் துங்கா அணைக்கு இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள ரயில் நிலையம் 12 கி.மீ தூரத்தில் ஷிமோகா பிரதான நகரத்தில் அமைந்துள்ளது.

Sanyam Bahga

பத்ராவதி அணை

பத்ராவதி அணை

பத்ராவதி நகருக்கு அருகில் உள்ள பத்ராவதி அணை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். 194 அடி உயரமுள்ள இந்த அணை பத்ராவதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இதை கர்நாடகாவின் பொறியியல் பிதாமகர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் கட்டியுள்ளார்.

இந்த அணை பத்ரா மற்றும் அதன் அருகாமை பகுதிகளின் மின்சார மற்றும் நீர்பாசனத் தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. பத்ராவதி அணை சிறிய தீவுக் காடுகளும், குன்றுகளும் புடைசூழ பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க காத்துக் கொண்டிருக்கிறது. இது லக்கவல்லி கிராமத்துக்கு அருகில் அமைந்திருப்பதால் லக்கவல்லி அணை என்றும் அழைக்கப்படுகிறது.

Amarrg

ஹரங்கி அணை

ஹரங்கி அணை

காவிரி ஆற்றின் துணை ஆறான ஹரங்கி ஆற்றின் மீது இந்த ஹரங்கி அணை கட்டப்பட்டுள்ளது. குஷால்நகரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள ஹுட்லூர் எனும் கிராமத்துக்கருகில் இந்த அணை அமைந்துள்ளது.

கூர்க் பகுதியில் சிற்றுலா செல்வதற்கு மிகப்பொருத்தமான இடம் இந்த ஹரங்கி அணை ஆகும். இரவில் இங்கு தங்குவதற்கு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை உள்ளது. முன் அனுமதி பெற்று இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். தென்மேற்கு பருவ மழை பொழியும் மழைக்காலத்தில் இந்த அணை நிறைந்து காணப்படும்.

wikipedia.org

யாகாச்சி அணை

யாகாச்சி அணை

யாகாச்சி அணை பேலூரிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது ஹாசனிலிருந்து 45 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 2004ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அணை ஹாசன், சிக்மகளூர், பேலூர் போன்ற நகரங்களின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 965 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த அணை நீர்த்தேக்கம் காவிரி ஆற்றின் துணை ஆறாகிய யாகாச்சி ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் வெளியேற்ற அளவு 4300 கியூசெக்'குகளாகவும் (கியூபிக் செண்டி மீட்டர்) நீர்வரத்து 4500 கியூசெக்'குகளாகவும் உள்ளது. நக்சல்கள் நடமாட்டம் கருதி இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சமீபத்தில் இந்த அணை நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதற்காக ‘யாகாச்சி சாகச நீர் விளையாட்டு மையம்' ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையம் சிறு படகுச்சவாரி, சொகுசுப்படகு சவாரி, வேகப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி, ஜெட் நீர்ச்சறுக்கு விளையாட்டு மற்றும் பம்பர் சவாரி போன்ற பல வகையான உல்லாச பொழுது போக்கு அம்சங்களை பயணிகளுக்கு வழங்குகிறது. இவை தவிர இயற்கையான சூழலில் ரசித்து ஓய்வெடுக்க விரும்பும் ஏகாந்தமான அமைதியையும் எழிலையும் இந்த ஸ்தலம் பெற்றுள்ளது.

Harijibhv

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்