Search
  • Follow NativePlanet
Share
» »சூரத் - இந்தியாவின் வைர நகரம்

சூரத் - இந்தியாவின் வைர நகரம்

குஜாரத் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சூரத் நகரம் வைரம் பட்டைதீட்டும் தொழில்சாலைகளுக்கும், ஜவுளி உற்பத்திக்கும் உலக அளவில் பெயர் போனது. தனது தொழில் அடையாளங்களை தாண்டி சுற்றுலாப்பயணிகளை கவரும் அற்புதமான சுற்றுலத்தலங்களும் இங்கே நிறைய உள்ளன. வாருங்கள், சூரத் நகரில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

டுமாஸ் பீச் :

சூரத் - இந்தியாவின் வைர நகரம்

Photo: Marwada

சூரத் நாகரில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த கடற்க்கரை மாலை நேரத்தில் காலாற நடந்தபடி இளைப்பாற அருமையானதொரு இடம். சூரத் நகர மக்களால் மிகவும் விரும்பப்படும் இந்த இடத்தின் சிறப்பம்சம் இங்குள்ள கருப்பு நிற மணல் தான். இந்த கடற்கரையை ஒட்டியே தைரிய விநாயகர் கோயில் ஒன்றும் அமைந்திருக்கிறது. அங்கும் கட்டாயம் சென்று வாருங்கள்.

ஐரோப்பிய கோபுரங்கள் :

சூரத் - இந்தியாவின் வைர நகரம்

சூரத் நகரில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டச் மற்றும் பிரிட்டிஷ் கட்டிடங்கள் சில இந்திய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை கலப்புடன் வித்தியாசமாக கட்டப்பட்டுள்ளன. மிகவும் பாதுகாக்கப்படும் இந்த கட்டிடங்களை புகைப்படம் எடுக்கவும் அனுமதி கிடையாது. வித்தியாசமான இந்த இடத்தின் பழமையையும், அழகையும் ரசித்து மகிழலாம்.

முகல்சாராய் :

சூரத் - இந்தியாவின் வைர நகரம்

Photo: Marwada

ஹஜ் புனித யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் ஓய்வெடுப்பதற்காக 17ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷா ஜகானால் கட்டப்பட்டது தான் இந்த முகல்சாராய். பின்னர் சிப்பாய்கள் கலகம் நடைபெற்ற 1857ஆம் வருடம் சிறைச்சாலையாக மாற்றப்படிருக்கிறது. இப்போது சூரத் நகர மாநகராட்சி கட்டிடமாக செயல்பட்டு வருகிறது. முகலாய கட்டிடக்கலையின் நுட்பத்தை ரசிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகின்றனர்.

சூரத்தின் உணவுகள் :

சூரத் - இந்தியாவின் வைர நகரம்

Photo: Garrett Ziegler

இனிப்பான கறி உணவுகளுடன் சேர்த்து தயாரிக்கப்படும் நல்ல காரமான சூர்தி உணவுகள் குஜராத் முழுமையும் புகழ் பெற்று விளங்குகின்றன.
காரி என்ற சிறப்பான இனிப்பு உணவும், லோச்சோ, உன்தியு, ராசாவாலா காமன் மற்றும் சூர்தி சைனீஜ் ஆகிய உணவுகளும் சூர்தி உணவு வகைகளில் புகழ் பெற்று விளங்கும் உணவுகளாகும். குஜராத்தில் அசைவ உணவு கலாச்சாரம் நிலவும் நகரமாக சூரத் விளங்குகிறது.

எப்படி அடைவது சூரத்தை:

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலங்களை கொண்டுள்ள நகரங்களில் ஒன்றாக சூரத் உள்ளது. NH-6, NH-228 மற்றும் சூரத் அகமதாபாத் நெடுஞ்சாலை, உதானா-மும்பை நெடுஞ்சாலை ஆகிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்தை பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும். ஊள்ளூர் போக்குவரத்திற்கு வசதியாக நவீனமான மற்றும் CNG எரிபொருள்களை பயன்படுத்தும் SMSS பேருந்து சேவைகள் உள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X