Search
  • Follow NativePlanet
Share
» »தாம்பரம், கோவை, திருநெல்வேலியை எளிதாக அடைய தமிழகத்தில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவை!

தாம்பரம், கோவை, திருநெல்வேலியை எளிதாக அடைய தமிழகத்தில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவை!

தமிழ்நாட்டின் அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவை என்பது சென்னை, கோவை, திருச்சி ஆகிய பல முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் ஒரு பாரிய முயற்சியாகும். இந்தத் திட்டம் தமிழக ரயில்வேயின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அதன் நெட்வொர்க் முழுவதும் தடையற்ற பயணத்தை ஆதரித்தல் ஆகியவற்றின் பரந்த நோக்கத்தை கொண்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் அம்ரித் பாரத் சேவை இயக்கப்படவுள்ளது என்று பார்ப்போம்!

தமிழ்நாட்டில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் துவக்கம்

தமிழ்நாட்டில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் முயற்சியானது, மாநிலத்தின் பல முக்கிய இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட நிலையங்களை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்திய இரயில்வேயின் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேம்படுத்தப்பட்ட வசதிகள், மேம்படுத்தப்பட்ட காத்திருப்புப் பகுதிகள், மேம்பட்ட டிக்கெட் அமைப்புகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் தன்மை ஆகியவற்றைக் கொண்ட நிலையங்களை மறுவடிவமைப்பதில் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது. ஒட்டுமொத்தமாக சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதன் மூலம் ரயில் நிலையங்களை பயனர்களுக்கு ஏற்றதாகவும் திறமையானதாகவும் மாற்றுவதே இலக்கு.

மக்களிடம் வரவேற்பை பெற்ற வந்தே பாரத்

இந்தியாவின் அதிவிரைவு ரயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானியங்கி கதவுகள், வைஃபை இணைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு என நவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளதோடு, இதன் டிக்கெட் விலையும் சாமானிய மக்களுக்கு ஏற்றதாக இல்லை என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. இந்த குறையை போக்கும் வகையில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் என்ற சேவையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏசி வசதிகள் இல்லை. மற்றபடி நவீன வசதிகளும், அதிவிரைவு பயணத்திற்கும் பஞ்சமில்லை.

amritbharatexpress

குறைந்த விலை வந்தே பாரத் அறிமுகம்

ஆம்! LHB எனப்படும் லிங்கே ஹாஃப்மன் புஸ்ச் என்ற பாதுகாப்பு அம்சமும், ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் கிளாஸ், சீட்டிங் உடனான லக்கேஜ்கள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள், சிசிடிவி, ஒளிரும் பட்டைகள், தண்ணீர் பயன்பாட்டை அளவிடும் மானிட்டர்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்க முடியும். எவ்வளவு தூரம் பயணித்தாலும் அசதி ஏற்படாத வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் உடன் குறைந்த டிக்கெட் கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

பெரும் வரவேற்பை பெற்ற அம்ரித் பாரத்

குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரெயில்கள் இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலிவு விலை அம்ரித் பாரத் ரயில்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 26 அம்ரித் பாரத் ரெயில்களை கூடுதலாக இயக்க மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய 26 அம்ரித் பாரத்

இந்நிலையில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை விடுவதற்கு புதிய வழித்தடங்களை இந்திய ரயில்வே ஆய்வு செய்து வந்தது. அதன்படி, 26 அம்ரித் பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், தமிழகத்தில் இருந்து புறப்படும் வகையில் இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அவை, தாம்பரம் மற்றும் நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும். இவை நேரடியாக வட மாநிலங்கள் உடன் அதிவிரைவு பயண சேவையுடன் இணைக்கப்படவுள்ளது. இதனை எதிர்பார்த்து தமிழக ரயில் பயணிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

amritbharatexpress launch tamilnadu

எந்தெந்த பகுதிகளில் அம்ரித் பார்த்

அதன் ஒரு பகுதியாக, நெல்லை - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் மற்றும் தாம்பரம் - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே புதிய அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. நெல்லை - சாலிமர் வழித்தடத்தில் இயங்கும் ரெயில், நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும். அதேபோல, சென்னை தாம்பரம் - சந்திரகாச்சி வழித்தடத்தில் இயங்கும் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக செல்லும்.

முழு வீச்சில் தயாராகும் தமிழ்நாடு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடத்தில் உள்ள 16 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி, சூலூர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் 70 முதல் 90 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன.

More News

    Read more about: vande bharat news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+