Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தின் ஒட்டுமொத்த மலைப்பிரதேசங்களிலும் பயணிக்கலாம்: எங்கே? எப்போது? எப்படி? சுற்றுலா வழிகாட்டி

தமிழகத்தின் ஒட்டுமொத்த மலைப்பிரதேசங்களிலும் பயணிக்கலாம்: எங்கே? எப்போது? எப்படி? சுற்றுலா வழிகாட்டி

இந்த கோடை விடுமுறைக்கு தமிழ்நாட்டோட மூலை முடுக்கெல்லாம் சுற்றி வருவோம். மேற்கு தொடர்ச்சி மலைகள் தமிழக - கேரள எல்லையில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், ஊட்ட

By Udhaya

தமிழகத்தில் பெரும்பாலும் கோடையில் பயணிக்கவேண்டும் என்றால் நமது விருப்பம் ஒன்று கொடைக்கானல் மற்றொன்று ஊட்டி. அட இது தவிர இன்னும் நிறைய மலைப்பிரதேசங்கள் இருக்கு என்பதே பலருக்கு தெரியாதுன்னா பாத்துக்கோங்களேன். நீங்க பைக்ல உலா போற இளைஞர்னா உங்க மாவட்டத்துல ஒருசில இடங்கள் இருக்கும் அத நல்லா தெரிஞ்சிவச்சிருப்பீங்க. ஆனா ஒட்டுமொத்த தமிழகத்துலயும் என்னலாம் இருக்கு. கோடைய கொண்டாட எங்கெல்லாம் போகலாம்னு உங்களுக்கு தெரியுமா? கவலைய விடுங்க.. இந்த கோடை விடுமுறைக்கு தமிழ்நாட்டோட மூலை முடுக்கெல்லாம் சுற்றி வருவோம். மேற்கு தொடர்ச்சி மலைகள் தமிழக - கேரள எல்லையில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், ஊட்டி வரை பரவி இருக்கிறது. மேலும் கிழக்கு குன்றுகள் வடதமிழகத்தில் அமைந்துள்ளது. இவை எல்லாமே கோடைக்கு ஏற்ற கொடைதான்.

நாம் தமிழகத்தை முழுமையாக சுற்றவேண்டும் என்றால் நான்கு பிரிவுகளாக பிரித்துக்கொள்வோம்.

அ. திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

ஆ. தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

இ. கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

ஈ. வடதமிழகம்

திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

திருநெல்வேலி அருகாமை பகுதிகள் என்று பார்த்தால், நாகர்கோயில்,மருத்துவாழ் மலை, கீரிப்பாறை, ஆரல்வாய்மொழி, மாஞ்சோலை, அகத்தியர்மலை, பாபநாசம், மணிமுத்தாறு,குற்றாலம், தென்காசி, தென்மலை, கருப்பாநதி, ராஜபாளையம் வரை குறிப்பிடலாம். சரி வாருங்கள் ஒவ்வொரு இடத்துக்கும் பயணிக்கலாம்.

மருந்துவாழ் மலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பல அரிய வகை மூலிகை செடிகள் நிறைந்த மலை இதுவாகும். குமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோயிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கிய பயணத்தில் பொற்றையடி எனும் கிராமத்துக்கு அருகே இந்த மலையைக் காணலாம். இது இப்பகுதி மக்களின் நெடுநாள் சுற்றுலா பகுதியாகும்.

இம்மலையானது அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது விழுந்த துண்டு என்றும் இப்பகுதியில் சிலர் நம்புகின்றனர். இந்த மலை கிட்டத்தட்ட 1500 அடி உயரம் கொண்டதாகும். இதன் உச்சத்தில் நாராயண குரு எனும் யோகி சில ஆண்டுகள் தவம் இருந்து மெய்யறிவு பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த இடத்திற்கு நீங்கள் செல்லும்போது கிடைக்கும் தனிமையும், அமைதியும் உங்களை புத்துணர்ச்சியாக்கவல்லது. இதுதான் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடி முனை ஆகும்.

எப்போது செல்லலாம்?

பொதுவாகவே வெயில் நேரங்களில் மலை ஏறுவது சிரமமான விசயம் என்பதால் மாலை வேளைகளில் அல்லது காலைப்பொழுதுகளில் செல்வது சிறந்தது.

எப்படி செல்லலாம்?

நாகர்கோயில் நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் உள்ளூர் பேருந்துகள் அனைத்தும் இந்த பகுதி வழியாகச் செல்லும். இது நாகர்கோயிலில் இருந்து 11 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

சுற்றுலா நினைவூட்டல்: நாகர்கோயிலில் இருந்து மருந்துவாழ் மலை செல்லும் வழியில் இருக்கும் சுசீந்தரம் தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு செல்ல மறந்துவிடாதீர்கள்.

V.B.Manikandan

அருவிகளும் ஆச்சர்யங்களும்

அருவிகளும் ஆச்சர்யங்களும்

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலம் பற்றி பலருக்கு தெரிந்திருக்கும். அது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆச்சர்யமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அருவிகள் என்று பார்க்கையில் காளிகேசம் அருவி, உலக்கை அருவி, திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியன கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் ஆகும்.

உங்கள் உடல்களோடு உள்ளங்களையும் குளிரச் செய்து மனதை புத்துணர்ச்சியுண்டாக்கும் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்.

எப்படி செல்லலாம்?

கன்னியாகுமரியிலிருந்து மூன்று வழித்தடங்களில் இந்த நீர்வீழ்ச்சியை அடையமுடியும்.

அ. கடற்கரைச் சாலைவழியாக, குமரி, புத்தளம், தக்கலை, திருவட்டாறு வழியாக திற்பரப்பு நீர்வீழ்ச்சியை அடையலாம்.

ஆ. குமரியிலிருந்து கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோயில் வழியாக தக்கலையை அடைந்து அங்கிருந்து திற்பரப்பை அடையமுடியும்.

இ. தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆரல்வாய்மொழியை அடைந்து பின் அங்கிருந்து பூதபாண்டி, தரிசனங்கோப்பு, குலசேகரம் வழியாகவும் திற்பரப்பை அடையலாம்.

மேற்குறிப்பிட்ட மூன்றாவது வழியில் ஆரல்வாய்மொழி, பூதபாண்டி, தரிசனங்கோப்பு வரை பயணித்து பின் தடிக்காரன்கோணம் வழியே வலதுபுறமாக பயணித்தால் காளிகேசம் நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.

முன்னதாக தரிசனங்கோப்பிலிருந்து வலதுபுறமாக பயணித்தால் உலக்கை அருவி வருகிறது. நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில், பயணித்து தரிசனங்கோப்பு தாண்டி வரும் சிவன் கோயிலில் வலதுபுறமாக பெருதலைக்காடு சாலை பிரிகிறது. இதில் பயணித்தால் எளிதில் உலக்கை அருவியை அடையமுடியும்.

Wiki

குற்றாலம் சுற்றியுள்ள அருவிகள், நதிகள்

குற்றாலம் சுற்றியுள்ள அருவிகள், நதிகள்

மணிமுத்தாறு

திருநெல்வேலியிலிருந்து மூன்று வழித்தடங்களில் செல்லும்படியான தூரத்தில் அமைந்துள்ளது மணிமுத்தாறு. மணிமுத்தாறில் அணை மற்றும் நீர்வீழ்ச்சியுடன், அழகிய நதியும் காணமுடியும்.

திருநெல்வேலியிலிருந்து செல்லும்படியான மூன்று வழித்தடங்கள்

அ. திருநெல்வேலியிலிருந்து தருவாய், கோபாலசமுத்திரம், பத்தமடை, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி வழியாக மணிமுத்தாறை 1 மணி நேரம் 15நிமிடங்களில் அடையமுடியும். இது 52கிமீ பயண தூரமாகும்.

ஆ. திருநெல்வேலியிலிருந்து பேட்டை, பழவூர், முக்கூடல், பாப்பாகுடி, ரெங்கசமுத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக ஏறக்குறைய 2 மணி நேரங்களில் இந்த நீர்வீழ்ச்சியை அடையமுடியும். இது 51கிமீ பயண தூரமாகும்.

இ. திருநெல்வேலி - தென்காசி சாலையில் தேசிய நெடுஞ்சாலை எண் 39ல் பயணித்தால் சீதபற்பநல்லூர், நலன்குறிச்சி, மருதம்புத்தூர் வழியாக பயணித்து மணிமுத்தாறை அடையலாம்.

குற்றால அருவிகள்

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன. இவை அனைத்திலும் குளிப்பதென்பது சில சமயங்களில் நடக்காத காரியம். நீர் வரத்தை பொறுத்து இதன் மாற்றங்கள் இருக்கும். ஆனால் கண்குளிர காட்சிகளை அனுபவித்துவிட்டு வரமுடியும்.

இந்த அருவிகளில் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றாலம், பாலருவி ஆகிய அருவிகள் இருக்கின்றன.

எப்படி செல்லலாம்?

மணிமுத்தாறிலிருந்து ஒரு மணி நேரத்தில் குற்றாலத்தை அடைய முடியும். அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கடையம் வழியாக 42கிமீ தூர பயணத்தில் குற்றாலத்தை அடையலாம். அங்கிருந்து சில சில கிமீ தூரத்தில் மற்ற பல அருவிகள் காணப்படுகின்றன.

சுற்றுலா நினைவூட்டல் : குற்றாலத்தில் பயணிக்கும்போது குற்றால நாதர் ஆலயத்துக்கு செல்ல மறந்துவிடாதீர்கள்..

Raghukraman

தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

தேனியைப் பொறுத்தவரையில் நம்மில் பலருக்கு தெரிந்திருப்பது கொடைக்கானல். அதுபற்றி முழுவதும் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள். மேலும் இதைச் சுற்றி நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேகமலை, கம்பம், போடிநாயக்கனூர், சூரியநெல்லி, பண்ணைக்காடு, பழனிமலை, ஆனைமுடி, மூணாறு ஆகிய பகுதிகளும் இதைச் சுற்றி அமைந்துள்ளன.

மேகமலை

மேகமலை என்பது மிக அழகான பெரிய மரங்கள் நிறைந்த , பசுமையான நிலப்பரப்புடன் கூடிய பகுதியாகும். இங்கு கோடைக்காலம் மட்டுமின்றி வருடத்தின் அனைத்து நாட்களிலும், சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

இங்குள்ள காபி, தேயிலை தோட்டம், உயர்ந்து வளர்ந்த மரங்கள், மலைகள், இயற்கையின் அழகு ஊற்று, மலைச்சிகரங்களுக்கு இடையேயான பள்ளத்தாக்கு என இந்த மலைப்பிரதேசம் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் தனித்து விளங்குகிறது.

எப்படி செல்லலாம்?

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரிலிருந்து மலைப்பாதை வழியாக பயணித்தால், மேக மலையை அடையலாம். தேனியிலிருந்து நாற்பத்தைந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மேகமலைப் பகுதி.

wiki

 கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

கோவைப் பகுதியில் நிறைய மலைப்பிரதேசங்கள் இருக்கின்றன. அவைகளில் முக்கியமானவை என்று சொன்னால் பொள்ளாச்சி டாப்ஸ்லிப், ஆனைகட்டி, குன்னூர், கெட்டி, ஊட்டி, கோத்தகிரி, மசினகுடி, கோடநாடு என்று நிறைய பெயரை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஊட்டி

ஊட்டிக்கு எப்படி செல்வது, ஊட்டியில் என்னென்ன சிறப்புகள் இருகின்றன என்பதை இதைக் கிளக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் ஊட்டி செல்லும் வழியில் குன்னூர், கோத்தகிரி, கெட்டி முதலிய இடங்களும் இருக்கின்றன. மேட்டுப்பாளையத்திலிருந்து பிரியும் சாலையில் இடதுபுறம் செல்வது குன்னூர், கெத்தி வழியாக ஊட்டியை சென்றடையும், வலதுபுறம் செல்வது கோத்தகிரிக்கும், தேனாடு, கோடநாடு வரை செல்லும். இங்கு இன்னும் நிறைய பெயர் தெரியாத பல இடங்கள் அழகழகாக காட்சியளிக்கின்றன.

இந்த பயணத்தின் போது குன்னூரின் அழகை தரிசிக்க மறக்காதீர்கள்

எப்படி செல்லலாம்

அ. முதல் பாதையை எடுத்துக்கொண்டு குன்னூர், கெட்டி வழியாக ஊட்டியை அடைய வேண்டும் என்றால், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு 52கிமீ தூரம் பயணிக்கவேண்டும். இந்த பயணம் 2 மணி நேரங்கள் எடுக்கலாம். மேலும் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் 35கிமீ தொலைவிலும், கெட்டி 46கிமீ தொலைவிலும் அமைந்துள்ளன. கெட்டியிலிருந்து பத்து கிமீ க்கும் குறைவான தூரம் பயணித்தாலே ஊட்டியை சென்றடைந்துவிடலாம்.

ஆ. இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்து பயணித்தால், கொட்டகொம்பை, கோத்தகிரி, கெர்பன் கெட்டி, கட்டபெட்டு வழியாக ஊட்டியை 2 மணி நேரத்தில் அடையலாம்.

கோத்தகிரியின் கோடைகால பயணம் எப்படி இருக்கும் தெரியுமா?


Fayiz Musthafa

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்


இவைகளைத் தவிர்த்து பார்த்தால் தமிழகத்தில் கட்டாயம் செல்லவேண்டிய கோடை தளங்களாக, ஏழைகளின் ஊட்டி ஏற்காடு, வால்ப்பாறை, கொல்லிமலை, ஏலகிரி, நயினார் மலைக்காடுகள், ஜவ்வாது மலை, கல்ராயன் மலைகள், தொக்கவாடி காடுகள், கௌன்டின்யா காடுகள், ஆரணி பூசிமலைக்குப்பம் தனிக்காடு, காட்டூர், கந்தாடு காடுகள், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் என நிறைய வகைகள் கோடைக்கால சுற்றுலாவுக்கு ஏற்றதாக அமைந்துள்ளன.
Karthickbala

 ஏற்காடு சுற்றுலா

ஏற்காடு சுற்றுலா


சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள மிதமான தட்பவெப்பம் கொண்டுள்ள ஏற்காடு மலையின் பெயர், ஏரி மற்றும் காடு ஆகியவற்றிலிருந்து வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இங்கு முக்கியமாக காணவேண்டியது ஒரு ஏரி ஆகும்.

எப்படி செல்லலாம்

திருச்சியிலிருந்து சேலம் 140 கிமீ பயணித்து அங்கிருந்து 25கிமீ தூரம் பயணித்தால் நாம் ஏற்காட்டை வந்தடையலாம். காரில் பயணிப்பது சிறந்ததாக அமையும். அல்லது சேலத்திலிருந்து வாடகை வண்டிகள் மூலமாக வருவதென்றாலும் சிறப்பு. ஏற்காட்டிலும் மற்ற மலைகளைப் போல கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் 20 வளைவுகள் வரை இருக்கலாம்.

உணவகங்கள் தங்குமிடங்கள்

ஏற்காட்டில் உணவகங்கள் பெரும்பாலும் அசைவ உணவகங்களாகவே இருக்கின்றன. ஒரு சில உணவகங்களில் சைவ உணவுகள் தரப்படுகின்றன. விருப்பத்துக்கு ஏற்ப சாப்பிடலாம்.

சுற்றுலா நினைவூட்டல் - ஏற்காடு அருகே இருக்கும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு செல்ல மறந்துவிடாதீர்கள்.

Riju K

கொல்லிமலை

கொல்லிமலை

நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலை 280சகிமீ பரப்பளவுடன் அழகாக காட்சியளிக்கிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவனால ஓரியின் ஆட்சிப்பகுதிக்குட்பட்டது இந்த கொல்லிமலை. சங்க இலக்கியங்களிலும் இதன் புகழ் பேசப்படுகிறது.

காணவேண்டிய இடங்கள்

அரியூர் சோலை சிகரம், ஓரி கட்டிய அறப்பள்ளீஸ்வரர் கோயில், நாச்சியார் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரிய சாமி கோயில், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, தாவரவியல் பூங்கா என நிறைய சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றன.

சுற்றுலா நினைவூட்டி: அருகேயுள்ள வாசலூர் படகு இல்லத்துக்கு போக மறந்துடாதீங்க...

Saravankm

ஜவ்வாது மலை

ஜவ்வாது மலை

மலைக்கிராமங்களுக்குள் பயணம் செய்து அனுபவம் இருப்பவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு புத்துணர்வை கொடுக்கும் என்று. சென்னையிலிருந்து அதிகாலை கிளம்பினால் சுற்றுலாவை அனுபவித்து விட்டு நள்ளிரவுக்குள் வீடு திரும்பிவிடலாம்.

செல்லும் வழிகள்

அ. வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி வழியாக ஜவ்வாது மலையை 256கிமீ தூர பயணித்தில் அடையலாம். இதற்கு 6மணி நேரங்கள் வரை ஆகும்.

ஆ. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திண்டிவனம் திருவண்ணாமலை செங்கத்தை அடைந்து அங்கிருந்து ஜவ்வாது மலையை அடைவது சிறப்பு.

இ. முதல் பாதையில் திருப்பெரும்புதூர் வழியாக பயணிக்காமல், திருவள்ளூர் வழியாக பயணிப்பது மற்றொரு வழியாகும்.

Mithun Kundu

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X