» »தமிழராய் பிறந்த எல்லோரும் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா ?

தமிழராய் பிறந்த எல்லோரும் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா ?

Posted By: Staff

உலகில் இன்றிருக்கும் எல்லா மொழிகளைக்காட்டிலும் பழமையானதும், மொழிச்செழுமை மிகுந்ததுமாக திகழும் மொழி தமிழ் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என்றும் இனிமை குன்றா தமிழ் மொழிக்கு தொல்காப்பியத்தின் வடிவில் மொழிக்கான இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் உலகம் முழுக்கவும் தமிழின் சிறப்பை உரக்கச்சொல்லியது தமிழர் வேதம் என்று போற்றப்படும் 'திருக்குறள்' தான். 

நாகரீகம் பரவலாக தோன்றிடாத காலத்திலேயே மொழி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு மனித இனத்திற்கே பொதுவான நெறி காட்டும் நூலாக திருக்குறள் இயற்றப்பட்டிருக்கிறது. இந்த நூலை எழுதிய வள்ளுவருக்கு இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் அமெரிக்க சுதந்திர தேவி சிலைக்கு நிகராக பிரம்மாண்டமான சிலை ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. தமிழராய் பிறந்த எல்லோரும் நிச்சயம் செல்ல வேண்டிய இடமான இதனைப்பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

இந்திய பெருங்கடல், அரேபியக்கடல் மற்றும் வங்காள விரிகுடா என முக்கடல்கள் சங்கமிக்கும் குமரி முனையில் உள்ள சிறிய தீவு போன்ற இடத்தில் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை உணர்த்தும் வகையில் 133அடி உயரத்தில் பிரமாண்டமாக நிறுவப்பட்டிருக்கிறது திருவள்ளுவரின் சிலை.

Premnath Thirumalaisamy

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் நேராக இல்லாமல் சற்றே நளினமாகநிற்ப்பது போல இச்சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதனை வடிவமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் திரு.வி. கணபதி ஸ்தபதி ஆவர். இவர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான ஹிந்து கோயில்களை வடிவமைத்தவராவார். சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தவரும் இவரே.

Raj

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலையை வடிவமைத்த திரு. கணபதி ஸ்தபதி அவர்களின் புகைப்படம். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு தன்னுடைய 84ஆவது வயதில் காலமானார்.

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

இந்த சிலைக்கு 1979ஆம் ஆண்டே அப்போதைய இந்திய பிரதமர் மொராஜி தேசாய் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு விட்டாலும் 1990ஆம் ஆண்டு தான் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்திருக்கின்றன.

Ramakrishnan AP

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

பத்து ஆண்டுகள் கழித்து புதிய நூற்றாண்டின் முதல் நாளான 1.1.2000அன்று இச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

பல்லாயிரம் டன் பாறைகளை கொண்டு வடிக்கப்பட்டிருக்கும் இச்சிலையின் உட்பகுதி முழுக்கவே வெற்றிடமாக இருக்கிறது. இந்த வெற்றிடம் தான் எப்பேர்ப்பட்ட இயற்கை பேரழிவையும் தாங்கும் சக்தியை இச்சிலைக்கு வழங்குவதாக கூறப்படுகிறது.

Thejas Panarkandy

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

சூரிய உதயத்தின் போதும், அஸ்தமனத்தின் போதும் வானில் வர்ணஜாலங்களுக்கு இடையே வள்ளுவர் சிலையை பார்க்க அத்தனை அற்புதமான இருக்கும்.

Nithi Anand

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

கரையில் இருந்து 400மீ தொலைவில் இருக்கும் இந்த வள்ளுவர் சிலையை சென்றடைய படகுகள் இருக்கின்றன. கரையிலிருந்து படகில் ஏறி முதலில் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றுவிட்டு பின்னர் திரும்பி வரும் போது வள்ளுவர் சிலைக்கு சென்று வரலாம்.

mimi anderson

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

2004ஆம் ஆண்டு இந்தியப்பெருங்கடலில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவான சுனாமியால் கன்னியாகுமரி கடல்பகுதியில் 80அடி வரை அலைகளில் எழும்பி நாசம் விளைவித்த போதிலும் வள்ளுவர் சிலைக்கு எந்த சேதமும் நேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Natesh Ramasamy

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

தற்காலத்தில் தமிழரின் கட்டிடக்கலை மாண்பையும், வள்ளுவனின் வாழ்வியல் நெறிகளின் அடையாளமாகவும் இருக்கும் இந்த இடத்திற்கு தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் ஒருமுறையேனும் வர வேண்டும்.

Raj

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை :

வள்ளுவர் சிலை அமைந்திருக்கும் குமரி மாவட்டத்தில் இருக்கும் இதர சுற்றுலாத்தலங்கள் பற்றிய தகவல்களையும், இங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Feng Zhong