Search
  • Follow NativePlanet
Share
» »உலகத்தர பார்ட்டிகளை வழங்கும் இந்திய நகரங்கள் - இரவு வாழ்க்கையை அனுபவிக்க இங்கே தான் செல்ல வேண்டும்!

உலகத்தர பார்ட்டிகளை வழங்கும் இந்திய நகரங்கள் - இரவு வாழ்க்கையை அனுபவிக்க இங்கே தான் செல்ல வேண்டும்!

இந்தியா என்றால் கோவில்கள், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் என்று தான் அனைவரும் நினைப்பார்கள்! ஆனால் உலகின் நவீன நகரங்களைப் போலவே இந்தியாவின் பல நகரங்கள் இரவு நேரங்களில் மிகவும் துடிப்புடன் செயல்படுவதுடன், அசத்தலான பார்ட்டிகளையும், இரவு கலாச்சாரத்தையும் வழங்குகிறது! இரவில் பார்ட்டிகளுக்கு சென்று நாட்டின் இந்த வேடிக்கையான மற்றும் அமைதியான முகத்தை ஆராய விரும்புகிறீர்களா? இதோ இந்தியாவின் சிறந்த சில இரவு நேர நகரங்களின் பட்டியல்!

1

கோவா

இந்தியாவின் பார்ட்டி தலைநகரம் என்றழைக்கப்படும் கோவா, இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது தானே நியாயம். இது இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாக இருந்தாலும் கூட, கேளிக்கை, விருந்து, பார்ட்டி என்று வரும் போது கோவாவை வேறு எந்த நகரமும் அடித்துக் கொள்ள முடியாது. இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் கூட கோவாவுக்குச் சென்று குதூகலமான இரவு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். சிறந்த இசை, பீச் பார்ட்டிகள், மூன் டிரான்ஸ் பார்ட்டிகள், கச்சேரிகள், டிஸ்கோக்கள் ரேவ் பார்ட்டிகள், கோவாவின் இரவு வாழ்க்கை அனைத்தையும் கொண்டுள்ளது.

2

பெங்களூரு

இந்தியாவின் கார்டன் சிட்டியான பெங்களூரு அதன் சுற்றுலா தலங்களைக் காட்டிலும் இந்தியாவில் இரவு வாழ்க்கைக்கு மிகவும் பிரபலமானது. இந்த இடம் இளம் பணியாளர்களுக்கு இடமளிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் சிறந்த இரவு வாழ்க்கை அனுபவங்களில் ஒன்றை வழங்குவதன் மூலம் அவர்களை மகிழ்விக்கிறது. நேரடி கரோக்கிகள், மைக்ரோ ப்ரூவரிகள், ஆடம்பரமான இரவு விடுதிகள், தியேட்டர், கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி இசையை அனுபவிக்க உங்களுக்கு பெங்களூருவில் பல இடங்கள் உண்டு.

3

மும்பை

"தி சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" என்ற பெயர் பெற்ற மும்பை பாலிவுட்டுக்கு மட்டும் பெயர்பெற்றது அல்ல, இந்தியாவில் இரவில் அனுபவிக்கக்கூடிய மிகச்சிறந்த இடங்களில் மும்பையும் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து சர்வதேசம் வரை புகழ்பெற்ற பிரபலங்கள், டிஜேக்கள், மியூசிக் பேண்டுகள் தங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளை அவ்வப்போது நடத்துவதை நீங்கள் காணலாம். மும்பையின் வேடிக்கை நிறைந்த இரவு வாழ்க்கையில் ஈடுபட இது ஒரு வழியாகும். மற்ற நகரங்களை போல அல்லாமல் மும்பையில் நீங்கள் இரவு முழுவதும் சுற்றித் திரியலாம்.

டெல்லி

பகல் நேரத்தில் டெல்லி மிகவும் துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்ற கருத்து நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு டெல்லி அதன் பல்வேறு இரவு வாழ்க்கையின் காரணமாக முற்றிலும் மாறுபட்ட சாயலைக் காட்டுகிறது. இங்கு பல்வேறு பப்கள், கிளப்புகள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் இரவு முழுதும் இயங்குகிறது. டெல்லியில் உள்ள அனைத்தையும் போலவே, அதன் இரவு வாழ்க்கையும் அதன் தனித்துவமான அழகைக்.கொண்டுள்ளது. இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ள நேரில் சென்று அனுபவிப்பதே சரியான வழியாகும்.

4

சென்னை

இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை அங்கு இருக்கும் மக்களுக்கும் சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களுக்கும் பல கேளிக்கைகளை வழங்கி மகிழ்விக்கிறது. நவநாகரீக இசை முதல், பானங்கள், கிளப்புகள், இரவு விடுதிகள், அனிமேஷன் செய்யப்பட்ட பப்கள் வரை என சென்னையில் இரவு நேர பொழுதுபோக்கு ஏராளம் உள்ளன.

ஹைதராபாத்

இந்தியாவின் நவாபி நகரமான ஹைதராபாத் வண்ணமயமான கிளப்புகள், பப்கள், டிஸ்கோக்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுடன் பார்ட்டி பிரியர்களை வரவேற்கிறது. பேகம்பேட், பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் சோமாஜிகுடா ஆகிய இடங்களில் மக்களின் கூட்டம் எப்பொழுதும் அலைமோதிக் கொண்டே இருக்கும். நகரத்தை ஆராய்ந்து, உற்சாகமான, வேடிக்கையான இரவுக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த விருப்பங்களின் மூலம் உங்களை மனதை உற்சாகமடையச் செய்யுங்கள்.

More News

    Read more about: travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+