» »இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?

இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?

Posted By: Udhaya

கோவா டூர் போனா எதுலாம் அணியக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க

சுற்றுலாவுக்கு பல்வேறு இடங்கள் இந்தியாவில் இருக்கிறது.  நாமும் நண்பர்கள், உறவினர்கள், மனசுக்கு பிடித்தவர்களுடன் பல்வேறு  இடங்கள் பயணம் செய்து அதை மறக்கமுடியாத நினைவுகளாக உள்ளத்தில் சேமித்து வைத்திருப்போம்.

அந்த வகையில் இந்தியாவில் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு என அனைத்து  பகுதியும் சொர்க்கமாக இருக்கிறது.  இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாட்டினரும் சுற்றுலாவுக்காக இந்தியா வருகின்றனர். அவர்களுக்கு நாட்டின் பல்வேறு  இடங்களுக்கும் போக அனுமதி உள்ளது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்தியாவில் இந்தியர்களையே அனுமதிக்காத சில பகுதிகள் உள்ளன என்று... முழுவதும் படியுங்கள்.

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

 ப்ஃரீ கசோல் கஃபே, கசோல்

ப்ஃரீ கசோல் கஃபே, கசோல்

இந்த பட்டியலில் முதலில் வருவது ப்ஃரீ கசோல் கஃபே. இது முற்றிலும் வெளிநாட்டவருக்கான கஃபே ஆகும். இதன் பெயரிலிருந்தே ப்ஃரீ கசோல் உள்ளூர் காரர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறியலாம்..

oneindia

ப்ஃரீ கசோல் கஃபே, கசோல்

ப்ஃரீ கசோல் கஃபே, கசோல்

உள்ளூர் காரர்கள் மட்டுமல்ல இந்திய குடிமகன்கள் யாருக்கும் இங்கு நுழைய அனுமதி இல்லை. இந்தியாவிலேயே இந்தியர்களுக்கு அனுமதி இல்லையே.

 யுனோ - இன் ஹோட்டல், பெங்களூரு

யுனோ - இன் ஹோட்டல், பெங்களூரு

சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூருவில் இருந்த இந்த ஹோட்டல், இந்தியர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்று புகார் எழுந்தது.

யுனோ - இன்

யுனோ - இன்


இந்த ஹோட்டலில் வேலை பார்ப்பவர்கள், நிறவெறி வேறுபாடு கொண்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து இதன் உரிமை பறிக்கப்பட்டது.

பாரீனர்ஸ் ஒன்லி பீச், கோவா

பாரீனர்ஸ் ஒன்லி பீச், கோவா

என்னது கோவாவுல அனுமதி இல்லையா எப்போதிருந்துனு கேக்காதீங்க.. இது கோவாவில் இருக்கும் ஒரு பீச்.

பாரீனர்ஸ் ஒன்லி பீச், கோவா

பாரீனர்ஸ் ஒன்லி பீச், கோவா

இங்கு வெளிநாட்டவர்கள் பிகினி உடையில் ஓய்வெடுப்பதால், இந்தியாவில் ஒரு சிலர் தவறாக நடந்துகொள்ள கூடும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

பாரீனர்ஸ் ஒன்லி பீச், புதுச்சேரி

பாரீனர்ஸ் ஒன்லி பீச், புதுச்சேரி

பாண்டிச்சேரி எனும் பெயரைக் கூட புதுச்சேரி என்றாக்கிவிட்டோம். இருந்தபின்னும் இப்போதும் கூட ஒரு பீச்சில் இந்திய குடிமக்களுக்கு அனுமதி இல்லை

பிரெஞ்சு

பிரெஞ்சு

இது ஒரு பிரெஞ்சுகாரர்கள் வசிக்கும் பகுதி என்பதால், இந்தியர்கள் அனுமதிக்கவேண்டாம் என முடிவெடுத்துள்ளனர் போலும். இருப்பினும் அவர்களில் பலர் நல்ல முறையில் இந்தியர்களுடன் பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஒரு ஹோட்டல்

சென்னையில் ஒரு ஹோட்டல்

ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் செய்திக்குறிப்பில் வெளியான தகவலின்படி, நம்ம சென்னையிலும் ஒரு ஹோட்டல் இந்திய மக்களை அனுமதிப்பதில்லையாம். வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருந்தால் மட்டுமே அனுமதி என்றார்களாம்.

திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி

அந்த ஹோட்டல் திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கிறதாம். அவர்கள் நிறவெறி கொண்டுள்ளதாக அந்த பத்திரிகை எழுதியிருந்தது. என்றாலும், ஒரு வெளிநாட்டு ஹோட்டலுக்குள் யார் யார் அனுமதிக்கலாம் என்பது அவர்களின் சுயஉரிமை என்பதும் உண்மைதான். ஆனால் சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமகனாக நடத்தப்படுவது மிகக் கேவலமானது.

இந்த ரியல் பேய்கள் பண்ணுற காமெடி என்னனு தெரியுமா? இங்க போங்க

Read more about: travel