Search
  • Follow NativePlanet
Share
» » உங்கள் நண்பர்களோடு த்ரில்லா ஒரு சுற்றுலா போக வேண்டும் என்று ஆசையா – இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

உங்கள் நண்பர்களோடு த்ரில்லா ஒரு சுற்றுலா போக வேண்டும் என்று ஆசையா – இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

சாகச சுற்றுலா செல்ல வயது முக்கியம் அல்ல, உடலிலும் மனலிலும் தெம்பு இருந்தால் போதும். ஏன் இன்னும் சொல்லப் போனால், சாகச சுற்றுலா செய்வது உங்களை இன்னமும் இளமையாக உணர வைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது. ரிவர் ராஃப்டிங், ஸ்னோர்கெலிங், பஞ்சி ஜம்பிங், ட்ரெக்கிங், பாராகிளைடிங், ஜிப் லைனிங், ஸ்கை டைவிங் என எக்கச்சக்கமான சாகச விளையாட்டுகள் இந்தியாவில் உள்ளன. ஆனால் எந்த விளையாட்டிற்கு எங்கே செல்ல வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இப்போது தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்!

Rishikesh

ரிஷிகேஷில் ரிவர் ராஃப்டிங்

ரிவர் ராஃப்டிங் உங்கள் பக்கெட் பட்டியலில் இருந்தால், நேராக இந்தியாவின் ரிவர் ராஃப்டிங் தலைநகரான ரிஷிகேஷுக்குச் செல்லுங்கள். இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையின் நடுவே சிலிர்ப்பை அனுபவியுங்கள், ஆன்மாவுடன் இணைவதற்குப் புகழ்பெற்ற இந்த அழகிய இடத்துக்கு நீங்கள் திரும்பி வருவீர்கள். ஆற்றில் படகில் செல்லும் போது, இமயமலையின் பளபளப்பான காட்சியை நீங்கள் காணலாம். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கைக்கு நடுவே மிக வேகமாக ராஃப்டிங் செய்துக் கொண்டு செல்வது ஒரு வித உத்வேகத்துடன் மகிழ்ச்சியை அளிக்கிறது.

frozenriverinladakh1

லடாக்கின் உறைந்த நதியில் ட்ரெக்கிங்

உறைந்த ஏரியின் மீது நடப்பதை விட, அட்ரினலின் சுரப்பை உண்டாக்குவது எதுவாக இருக்க முடியும். இந்தியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள லடாக்கின் நிலப்பரப்பு பல சவாலான நடவடிக்கைகளுக்கு தாயகமாக உள்ளது. புகழ்பெற்ற சதர் மலையேற்றம், ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கில் ராஃப்டிங், மௌண்டெயின் பைக்கிங் என பல இருந்தாலும் உறைந்த நதியில் நடைபயணம் என்பது நமக்கு மிகவும் உற்சாகத்தை தருகிறது. உறைந்து கிடக்கும் நதி மீது பூஜ்ஜியம் வெப்பநிலையில் நடைபயணம் மேற்கொள்வது உங்கள் முதுகுத் தண்டில் ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்கும்.

hotbaloonsafariinjaipur1

ஜெய்ப்பூரில் ஹாட் பலூன் சஃபாரி

சூடான ஹாட் பலூனில் சஃபாரி செய்வது சாகச விரும்பிகளின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு விஷயமாகும். ராஜஸ்தானில் உள்ள அழகான இடங்களை ஆராயும் போது, ஜெய்ப்பூரின் ஹாட் ஏர் பலூன் சவாரி சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். ஹாட் பலூன் சஃபாரி செய்து கம்பீரமான அரண்மனைகள், இளஞ்சிவப்பு சுவர்கள் மற்றும் நீர்நிலை ஹோட்டல்களைப் பார்த்து ரசிப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். சவாரிகள் வழக்கமாக சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்படும். ஜெய்ப்பூர் மட்டுமல்லாமல் ராஜஸ்தானின் புஷ்கரிலும் ஹாட் பலூன் சஃபாரி செய்யலாம்.

skiingingulmarg1

குல்மார்க்கில் ஸ்கீயின்

சுவிட்சர்லாந்தின் அழகிய கிராமத்திற்குள் இருப்பது போல ஒரு உணர்வை தருகிறது நம் காஷ்மீரின் குல்மார்க். இங்கு பனிப்பொழிவு காரணமாக, ஹெலி-ஸ்கையிங் ஒரு பிரபலமான சாகச விளையாட்டாக உள்ளது. ஹெலி-ஸ்கையிங் என்பது ஹெலிகாப்டரில் இருந்து பனி மலையின் மீது குதித்து வேகமாக பனிச்சறுக்கு செய்யும் ஒரு சாகசக் செயலாகும். அட்ரினலின் விரும்பிகளுக்கு, பனிச்சறுக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருப்பதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சாகச சுற்றுலா விரும்பிகள் குல்மார்க்கிற்கு வருகை தருகின்றனர். குல்மார்க்கில் உள்ள ஸ்கை சிகரத்திற்கு கோண்டோலா சேவை இயக்கப்படுகிறது. அதிலும் மறக்காமல் சென்று வாருங்கள்.

paraglidinginbirbilling1

பிர் பில்லிங்கில் பாராகிளைடிங்

ஹிமாச்சல பிரதேசத்தின் ஜோகிந்தர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கிராமமான பிர் பில்லிங் ஒரு அழகிய கிரமாமாக இருப்பதோடு, சாகச விளையாட்டான பாராகிளைடிங்கின் தலைநகராகவும் உள்ளது. நம்மில் பலருக்கும் பாராகிளைடிங் செய்ய வேண்டும் என்ற ஆசை பலமாக இருக்கும். ஆனால் அதை செய்து பார்க்க சரியான இடம், காங்க்ரா பள்ளத்தாக்கின் பிர் பில்லிங்கிற்கு தான் செல்ல வேண்டும். உயரமான பாயிண்டில் இருந்து கீழே குதித்து உங்கள் அட்ரனலின் ரஷ்க்கு தீனி போட இங்கே பாராகிளைடிங் செய்ய தவறாதீர்கள்.

rockclimbinginbadamicaves1

பதாமி குகையில் ராக் கிளைம்பிங்

அகஸ்திய தீர்த்த நீர் தேக்கத்தைச் சுற்றிலும் சிவப்பு மணற்கல் பாறைகளுக்கு மத்தியில் மலையேற்றம் செய்வது பிரபலமான சாகசச் செயலாகும். ஃப்ரீ கிளைம்பிங், ராக் கிளைம்பிங் மற்றும் ராப்பெல்லிங் ஆகியவை பாதாமியில் நீங்கள் முயற்சிக்கக்கூடிய மூன்று வகையான பாறை ஏறுதல்கள் ஆகும். பாதாமியில் உள்ள பாறை ஏறுதலின் வகைகள் காரணமாக பாதாமி, உள்ளூர் மற்றும் சர்வதேச பாறை ஏறும் ஆர்வலர்கள் மத்தியில் 'பாறை ஏறுதலின் மக்கா' என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

trekkinginsikkim1

சிக்கிமில் ட்ரெக்கிங்

உலகின் மூன்றாவது உயரமான மலையான காஞ்சன்ஜங்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட சிக்கிம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் மலைப் பிரியர்களை, குறிப்பாக மலையேற்ற ஆர்வலர்களை கவர்ந்திழுக்கிறது. பெரும்பாலான மலையேறுபவர்கள் சிக்கிமில் தனி மலையேற்றத்தை விரும்புகிறார்கள், ஏனெனில் இது அவர்களுக்கு அமைதியில் திளைக்க வாய்ப்பளிக்கிறது. டம்தாங் முதல் டெண்டாங், பெமாயாங்ஸ்டே முதல் சங்கச்சோலிங், டாராப் வில்லேஜ், ஹில்லே டு வர்சி, மற்றும் ரவாங்லா முதல் மேனம் ஹில் டாப் ஆகியவை சிக்கிமில் உள்ள பிரபலமான குறுகிய மலையேற்றங்கள் ஆகும்.

tigersafariinmadhyapradesh1

மத்தியப் பிரதேசத்தில் டைகர் சஃபாரி

மத்தியப் பிரதேசத்தின் காடுகளில் புலிகளின் சஃபாரியை அனுபவிப்பது இந்தியாவில் மறக்க முடியாத சாகச நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எண்ணற்ற பசுமையான காடுகளாலும், செழுமையான வனவிலங்குகளின் தொகுப்புடனும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேசத்தில் ராயல் பெங்கால் புலிகள், வெள்ளைப்புலிககளை நீங்கள் கண்டு ரசிக்கலாம். கன்ஹா, பாந்தவ்கார், பன்னா, பென்ச் போன்ற தேசிய பூங்காக்களில் இன்னும் பல அற்புதமான பறவைகளைக் காணும் சிலிர்ப்பு உங்களை இந்திய வனவிலங்குகளின் மீது காதல் கொள்ளச் செய்யும். சஃபாரி பயணங்களை ஆன்லைனில் எளிதாக முன்பதிவு செய்யலாம்.

இந்த செயல்பாடுகளை எல்லாம் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செய்தால் எவ்வளவு நியாபகரமானதாக இருக்கும் அல்லவா!

More News

    Read more about: rishikesh goa
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+