Search
  • Follow NativePlanet
Share
» »முதல் முறையாக மும்பை போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு புறப்படுங்க

முதல் முறையாக மும்பை போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு புறப்படுங்க

வர்த்தக நகரமான மும்பை, இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று. மிகவும் நெருக்கமான, பரபரப்பான, குறுகலா பகுதிகளை கொண்ட நகரம் மும்பை. இங்கு பலதரப்பட்ட சமூகங்கள், கலாச்சாரங்களை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவின் செல்வ செழிப்பாக இந்த நகரம் ஏழு தீவுகளை ஒன்றிணைப்பதாகும். இங்கு முதல் முறையாக வருபவர்கள் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும், எவற்றை எல்லாம் செய்யலாம், எவற்றை எல்லாம் கண்டிப்பாக செய்யக் கூடாது என்பது போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

Mumbai

காலநிலை

மும்பை வெப்பமயமான நகரமாகும். வாகன மற்றும் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள ஊர் என்பதால் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் தான் மும்பை சென்று வருவதற்கும், அங்கு சுற்றி பார்த்து விட்டு வருவதற்கும் ஏற்ற காலங்களாகும்.

செய்ய வேண்டியவை :

* மும்பையில் பிக்பாக்கெட் திருடர்கள் அதிகம் என்பதால் உங்களின் பர்ஸ்களை முன்புறமாக வைத்துக் கொள்வது நல்லது. பொது இடங்களில் பர்ஸ்களை அடிக்கடி வெளியில் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* தெரியாதவர்களை நம்பி எதுவும் பேசாமல் இருக்க வேண்டும். நன்கு பழகிய இடத்திற்கு வருவது போல் உங்களை காட்டிக் கொள்ள வேண்டும்.

* உடலை முழுவதும் மூடுவது போன்ற ஆடைகளை அணிவது நல்லது. குறிப்பாக பெண்கள் இது போல் ஆடை அணிவதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும். கோவில்களிலும் முழுவதும் போர்த்திய ஆடையுடன் வருபவர்களையே அனுமதிப்பார்கள்.

Mumbai

செய்ய கூடாதவை :

* யாருடனும் வாக்குவாதம் செய்யக் கூடாது. குறிப்பாக ஆட்டோ டிரைவர்கள், மீன் விற்பவர்கள் உள்ளிட்ட உள்ளூர்வாசிகளிடம் வாக்குவாதம் செய்வதால் சில நேரங்களில் அவர்களால் நாம் தாக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

* மும்பையில் மாடுகள் தெய்வங்களுக்கு சமமாக கருதப்படுகின்றன. அதனால் மாட்டுக் கறி போன்ற உணவுகளை மறந்தும் ஓட்டல்களில் ஆர்டர் செய்து விடக் கூடாது. அங்கு மாட்டு இறைச்சி சாப்பிடுவதும் சட்டப்படி குற்றமாகும்.

* செருப்புகள் அணிந்து கோவில்களுக்குள் செல்ல கூடாது. அப்படி செல்வதால் பலரின் எதிர்ப்புகள், கோபத்திற்கும் நாம் ஆளாக வேண்டி இருக்கும்.

ருசிக்க வேண்டிய உணவு :

மும்பையில் சாலையோர உணவுக்கடைகள் மிக அதிகம். இங்கு வட பாவ் கடைகள் ஏராளம் உண்டு. மும்பை சென்றால் கண்டிப்பாக இதை சுவைக்க மறந்து விடாதீர்கள். ஒரு பிளேட் வெறும் ரூ.10 தான்.

பார்க்க வேண்டிய இடங்கள் :

1. கேட்வே ஆஃப் இந்தியா
2. மரைன் டிரைவ்
3. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல்
4. எலிஃபெண்டா குகைகள்
5. ஜூஹூ கடற்கரை
6. சித்தி விநாயகர் ஆலயம்
7. கொலாபா காஸ்வே
8. பாந்த்ரா வோர்லி கடல் இணைப்பு
9. திரைப்பட நகரம்
10. சஞ்சய் காந்தி தேசிய பூங்கா
11. ஹாலி அலி தர்கா
12. தோபி காட்
13. புளோரா நீரூற்று
14. டாக்டர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம்
15. வெர்சோவா கடற்கரை
16. வோர்லி கடல் முகம்
17. மணிபவன் காந்தி அருங்காட்சியகம்
18. இஸ்கான் கோவில்
19. பல்லார்ட் எஸ்டேட்
20. பங்காங்கா தொட்டி
21. நேரு கோளரங்கம்
22. செவ்ரி சதுப்புநில பூங்கா

தங்குவதற்கு ஏற்ற இடங்கள் :

கொலாபா, குஃபே பாரடே, வோர்லி, பந்த்ரா வெஸ்ட் போன்றவை முதல் முறையாக மும்பை வருபவர்கள் தங்குவதற்கு ஏற்ற பகுதிகளாக உள்ளன. அனைத்து சுற்றுலா தலங்கள், கடைகள், ஓட்டல்கள் ஆகியவை இந்த பகுதிகளில் அதிகம் இருப்பதாலும், போக்குவரத்திற்கு எளிதானதாக இருப்பதாலும் இந்த இடங்களையே அதிகமானவர்கள் தாங்கள் தங்குவதற்காக தேர்வு செய்கிறார்கள்.

போக்குவரத்து வசதி :

மும்பையில் உள்ளூர் ரயில், பஸ் ஆகியவை பயணிக்க மிகவும் ஏற்றவையாகும். மும்பையில் இருந்து உலகின் எந்த மூலைக்கும் பயணம் செய்வது எளிது. மும்பையில் இருந்து கோவா, கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பஸ் மற்றும் ரயில் வசதிகள் ஏராளமாக உள்ளன. அதே போல் விமான பயணமும் மும்பையில் இருந்து செல்வது கட்டணம் குறைவானதாகும். விமான பயணமும் மிகவும் எளிதானதாகும்.

More News

    Read more about: mumbai maharashtra
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+