Search
  • Follow NativePlanet
Share
» »வருகின்ற 2025 புத்தாண்டு அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா – அப்போ இப்படி பண்ணுங்க!

வருகின்ற 2025 புத்தாண்டு அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா – அப்போ இப்படி பண்ணுங்க!

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அந்த ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் திருமலைக்கு சென்று பகவானின் ஆசி பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்து பாருங்களேன்! எவ்வளவு திவ்யமாக இருக்கிறது அல்லவா? அதற்கு உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது மக்களே! ஆம், 2025 ஜனவரிக்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு திருமலை திருப்பதியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகவுள்ளது!

புத்தாண்டு அன்று சுவாமி தரிசனம் செய்யலாமா?

புத்தாண்டு அன்று கோயிலுக்கு சென்று வழிப்பட்டால், அந்த வருடம் முழுக்கவும் நமக்கு நல்லபடியாக அமையும் என்பது நம்பிக்கை. இந்தியா முழுக்க எண்ணற்ற கோயில்கள் இருந்தாலும், திருப்பதி என்றாலே தனி பெருமை தான். புத்தாண்டு அதுவுமாக திருப்பதி ஏழுமலையானை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மனதார வேண்டி, திருவேங்கமுடையான் ஆசீர்வாதத்தை பெற நாங்கள் உங்களுக்கு வழி கூறுகிறோம். அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை புக் செய்வது எப்படி? ரூம் புக்கிங் செய்வது எப்படி? என்பது குறித்த தெளிவான தகவல்கள் கீழே!

2025 ஜனவரி மாதத்திற்கான டிக்கெட் வெளியீடு

கலியுக வரதானாக ஏழுமலை மீது நின்று நமக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அந்த திருப்பதி வெங்கடேச பெருமானை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக திருப்பதிக்கு யாத்திரை செல்கின்றனர். இலவச தரிசனத்தில் சிக்கிக்கொண்டால் கிட்டத்தட்ட பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. ஆனால் ஓரிரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய வழியுள்ளது. அது தான் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்! 2025 ஜனவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தற்போது வெளியாகின்றன.

Tirumala Tirupati Rs 300 special entry darshan

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக் செய்வது எப்படி

1. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) அதிகாரப்பூர்வ இணையதளமான tirupatibalaji.ap.gov.in. பார்வையிடவும்.

2. புக்கிங் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும், ஆகவே நீங்கள் ஒரு 5 நிமிடங்களுக்கு முன்னரே உங்கள் நல்ல இன்டர்நெட் கனெக்ஷன் உள்ள போன், கணினி, லேப்டாப் தயாராக வைத்துக் கொள்ளவும்.

3. மெய்நிகர் வரிசையில் காத்திருங்கள். டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்ய முயற்சிக்கும் பக்தர்களைப் பொறுத்து, காத்திருக்கும் நேரம் பொதுவாக 5-6 நிமிடங்கள் ஆகும்.

4. மொபைல் எண் போன்ற தேவையான உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட்டு, கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, 'Generate OTP' என்பதைக் கிளிக் செய்யவும். செல்லுபடியாகும் 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, 'உள்நுழை' விருப்பத்தை கிளிக் செய்யவும்.

5. நீங்கள் பார்வையிட விரும்பும் தேதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய காலெண்டர் காண்பிக்கப்படும். தேதியைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் தரிசனம் செய்ய விரும்பும் நேரத்தை எடுக்க வேண்டும்.

6. அதில் பச்சை நிறம் காலியாக இருப்பதையும், சிகப்பு நேரம் புக்கிங் முடிந்து விட்டதையும் குறிக்கும்.

7. பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற யாத்ரீகர்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தவும்.

8. பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற யாத்ரீகர்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தவும்.

9. தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். தரிசனத்திற்கு எடுத்துச் செல்ல டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

10. இதே முறையில், அக்டோபர் 24 அன்று மதியம் 3:00 மணிக்கு வெளியாகும் திருமலை ரூம் புக்கிங்கில், உங்களுக்கு ஏற்றவாறு ரூ.100, ரூ.1,000 அறைகளை புக் செய்து கொள்ள மறக்காதீர்கள்.

ஜனவரி 1 மட்டுமல்ல, ஜனவரி மாதம் முழுக்கவுமே நாம் அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தான் இருப்போம். 1, 2 ஆகிய தேதிகளில் உங்களுக்கு திருப்பதி செல்ல முடியவில்லை என்றாலும் கூட, உங்களுக்கு வசதியான தேதிகளில் புக் செய்து திருப்பதி சென்று வாருங்கள்! வாழ்வில் திருப்பம் வரட்டும்!

More News

    Read more about: tirupati travel guide tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+