கலியுக வரதானாக ஏழுமலை மீது நின்று நமக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அந்த திருப்பதி வெங்கடேச பெருமானை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக திருப்பதிக்கு யாத்திரை செல்கின்றனர். இலவச தரிசனத்தில் சிக்கிக்கொண்டால் கிட்டத்தட்ட பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. ஆனால் ஓரிரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய வழியுள்ளது. அது தான் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்! ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தற்போது வெளியாகின்றன. அவற்றை எப்படி சுலபமாக புக் செய்வது என்று பார்ப்போம்!
மார்ச் 25 ஆம் தேதி அன்று டிக்கெட் வெளியீடு
உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சர்வ தரிசனம், ஆர்ஜித சேவா, VIP பிரேக் தரிசனம், சுப்ரபாத தரிசனம், திவ்ய தரிசனம் போன்ற பலவகை தரிசன டிக்கெட்டுகள் உண்டு. அவற்றில் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகின்றன. அவற்றை புக் செய்தால் போதும், நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் திருப்பதி பெருமாளை ஓரிரு மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம்.

சிரமமின்றி தரிசனம் செய்ய உதவும் டிக்கெட்
அனைவருக்குமே திருப்பதி செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. ஆனால் சர்வ தர்ஷனில் அவர்கள் நம்மை குடவுனில் மணி கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். அவர்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமலையை நோக்கி படையெடுக்கும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அல்லவா? ஆனால் இதில் சிக்கி கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்ய நமக்கு வேறு வழி உள்ளது. அது தான் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட். இதனை புக் செய்தால் போதும், அதிக நேரம் காத்திருக்காமல் சில மணி நேரங்களில் சுவாமி தரிசனம் செய்யலாம்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக் செய்வது எப்படி
1. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in/ பார்வையிடவும்.
2. புக்கிங் மார்ச் 25 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும், ஆகவே நீங்கள் ஒரு 5 நிமிடங்களுக்கு முன்னரே உங்கள் நல்ல இன்டர்நெட் கனெக்ஷன் உள்ள போன், கணினி, லேப்டாப் தயாராக வைத்துக் கொள்ளவும்.
3. மெய்நிகர் வரிசையில் காத்திருங்கள். டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்ய முயற்சிக்கும் பக்தர்களைப் பொறுத்து, காத்திருக்கும் நேரம் பொதுவாக 5-6 நிமிடங்கள் ஆகும்.
4. மொபைல் எண் போன்ற தேவையான உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட்டு, கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, 'Generate OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

5. செல்லுபடியாகும் 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, 'உள்நுழை' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
6. நீங்கள் பார்வையிட விரும்பும் தேதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய காலெண்டர் காண்பிக்கப்படும். தேதியைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் தரிசனம் செய்ய விரும்பும் நேரத்தை எடுக்க வேண்டும்.
7. அதில் பச்சை நிறம் காலியாக இருப்பதையும், சிகப்பு நேரம் புக்கிங் முடிந்து விட்டதையும் குறிக்கும். பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற யாத்ரீகர்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தவும்.
8. பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற யாத்ரீகர்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தவும்.
9. பின்னர் பேமென்ட் கேட்வே மூலம் (டெபிட்/கிரெடிட்/GPay/UPI) மூலம் பணம் செலுத்தவும்.
10. தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். தரிசனத்திற்கு எடுத்துச் செல்ல டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications





