Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிலேயே பணக்கார கோயில் எது – நீங்கள் நினைக்கும் கோயில் முதலிடத்தில் இல்லை!

இந்தியாவிலேயே பணக்கார கோயில் எது – நீங்கள் நினைக்கும் கோயில் முதலிடத்தில் இல்லை!

இந்தியா எத்தனயோ ஆயிரம் ஆயிரம் கோயில்களுக்கு தாயகமாக உள்ளது. அவற்றில் நம்பர் 1 பணக்கார கோயில் எதுவென்று நமக்கு எண்ணம் எழத் தோன்றும். பழங்கால நகைகள், வைர வைடூரியங்கள், கோயில் நிலங்கள், நன்கொடைகள், காணிக்கைகள் என இந்திய கோயில்கள் பலவும் லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்துள்ளன. பணக்கார கோயில் என்றாலே நாம் திருப்பதி என்று தான் நினைப்போம், ஏனென்றால் அங்கு கொட்டும் காணிக்கை அப்படி, ஆனால் இந்தியாவிலேயே நம்பர் 1 பணக்கார கோயிலாக இருப்பது திருப்பதி கிடையாது தெரியுமா மக்களே!

jaganth temple orisaa

பூரி ஜெகநாதர் கோவில், ஒரிசா

இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பது பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலாகும். இந்தியாவின் முக்கியமான யாத்திரை மையமான இந்தக் கோவில், சார் தாம் யாத்ராவின் புனிதத் தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஜெகநாதர் கோயிலின் வங்கி வைப்பு 50 கோடிக்கும் மேல் உள்ளது. சுனா பேஷா விழாவின் போது தெய்வங்கள் 209 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்படுவது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. ஜகந்நாதரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் 30,000 ஏக்கர் நிலம் இதற்கு சொந்தமானது.

Madurai meenatchi temple

மதுரை மீனாட்சி கோவில், தமிழ்நாடு

வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமான மீனாட்சி அம்மன் கோவில் தினமும் சுமார் 20 முதல் 30 ஆயிரம் பக்தர்களை வரவேற்கிறது. இந்த கோவிலுக்கு 60 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் வைரம் ஆண்டுதோறும் காணிக்கையாக கிடைக்கிறது. இரண்டு தங்க விமானங்கள், கோயிலின் சுற்றுப்புறத்தில் சுமார் 33,000 சிற்பங்கள், கோவிலைச் சுற்றியுள்ள ஏராளமான நிலங்கள், கடைகள் ஆகியவை அனைத்தும் இக்கோவிலுக்கு சொந்தமாகும்.

Shirdi

சாய்பாபா கோவில், ஷீரடி

1922 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அழகிய ஆலயம் உலகின் தலைசிறந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். மத வேறுபாடின்றி இந்தக் கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்பதால் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான யாத்ரீகர்கள் இங்கு வருகை தருகின்றனர். இந்த கோவிலில் தோராயமாக ரூ .32 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், ரூ.6 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நாணயங்களும் உள்ளன. இந்த கோவிலுக்கு கிடைக்கிறது.

siddhi vinayak temple

சித்திவிநாயகர் கோவில், மும்பை

மும்பையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் கோவில், நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். இங்கு தினமும் 25 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை பார்வையாளர்கள் குவிகின்றனர். விநாயகப் பெருமான் தங்கக் கூரையின் கீழ் அமர்ந்துள்ளார், மேலும் கோவிலில் இதுவரை 67 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 158 கிலோ தங்கக் காணிக்கைகள் குவிந்துள்ளன. ஆண்டுதோறும் 125 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை இக்கோவில் காணிக்கையாகப் பெறுகிறது. இங்குள்ள பலத்த பாதுகாப்பு பெட்டகங்கள் கணக்கற்ற வைர வைடூரிய நகைகளைக் கொண்டுள்ளது.

vaishnodevitemple1

வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு & காஷ்மீர்

இந்தியாவின் பழமையான மற்றும் பணக்கார கோவில்களில் ஒன்றான மாதா வைஷ்ணோ தேவியின் சன்னதிக்கு உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு மில்லியன் யாத்ரீகர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர், மேலும் இது திருப்பதிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் இரண்டாவது கோவிலாகும். இந்துக்களின் ஆழமான வேரூன்றிய மத நம்பிக்கைகளின் மையமான இந்த கோவில் ஆண்டு தோறும் சுமார் 500 கோடியை வருமானமாகப் பெறுகிறது. ஏற்கனவே 1.2 டன் தங்கம் சொத்தாக உள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கிலோ தங்கம்நன்கொடையாக வந்துக் குவிந்துள்ளது.

ஐயப்பன் கோவில், சபரிமலை

இந்தியாவின் பணக்காரக் கோயில்களில் ஒன்றான சபரிமலை ஆண்டுதோறும் சுமார் 100 மில்லியன் பக்தர்களை வரவேற்கிறது. மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் மாலை அணிந்து விரமிருந்து சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதனால் ஆண்டுதோறும் 300 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து காணிக்கையை குவிக்கின்றனர். பல்லாயிரக் கோடி சொத்து மதிப்புக் கொண்ட இக்கோவில் ஆண்டுதோறும் ரூ.218 கோடியை வருமானமாகப் பெறுகிறது.

Amritsar

பொற்கோவில், அமிர்தசரஸ்

சீக்கிய சமூகத்தின் மிகவும் பிரபலமான மத மையமான ஹர்மந்திர் சாஹிப் என்றழைக்கப்படும் பொற்கோவில் அதன் தங்க நிறம் மற்றும் பிரத்தியேகமான கட்டிடக்கலை அழகு காரணமாக உலகப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த கண்கவர் தங்க சன்னதி தங்கம் மற்றும் வெள்ளி விவரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் பிரகாசமான ஒளிரும் தங்க குவிமாடத்திற்காக இரவில் அழகாக இருக்கிறது. கோயிலின் விதானம் தூய தங்கத்தால் ஆனது. குரு கிரந்த் சாஹிப்பின் புனித புத்தகம் வைக்கப்பட்டுள்ள பலிபீடத்தில் விலையுயர்ந்த வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 40,000 பார்வையாளர்களை ஈர்க்கும் பொற்கோவில் ஆண்டுதோறும் ரூ.300 கோடியை வருமானமாகப் பெறுகிறது.

குருவாயூரப்பன் கோவில், குருவாயூர்

பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட குருவாயூரப்பன் கோயில் தென்னிந்தியாவின் துவாரகை என்று அறியப்படுகிறது. தென்னிந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றான இக்கோவிலுக்கு தினமும் சுமார் 40,000 முதல் 50,000 பேர் வந்து செல்கின்றனர். சுமார் 230 ஏக்கர் நிலத்தைசொத்தாகக் கொண்ட இக்கோவிலில் விலையுயர்ந்த தங்கமும் வெள்ளியும் வைர நகைகளும் உள்ளன. குருவாயூர் தேவசம் போர்டுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2.5 கோடி உண்டியல் வசூலுடன் சுமார் ரூ.400 கோடி கார்பஸ் உள்ளது. இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு 2500 கோடியாகும்.

திருமலை ஏழுமலையான் கோயில், ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமி கோயில், உலகின் மிகப்பெரிய மத யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும். தினசரி சராசரியாக 30,000 முதல் 2 லட்சம் பார்வையாளர்களைக் காணும் இக்கோவில் இந்தியாவிலேயே 2 ஆவது பணக்கார கோவிலாகும். 3000 கிலோ தங்கம் இருப்பில் உள்ள நிலையில், தினமும் வெங்கடேசப் பெருமாள் 500 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்படுகிறார். லட்டு விற்பனை, நன்கொடை, உண்டியல், ஊதுபத்தி மற்றும் டெண்டர்கள் மூலம் ஆண்டுதோறும் ரூ. 2,000 கோடியை வருமானமாகப் பெறும் இக்கோவிலின் நிகர சொத்து மதிப்பு 2 லட்சம் கோடியை தாண்டி நிற்கும் என்று கூறப்படுகிறது.

padmanabaswamy temple

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில், திருவனந்தபுரம்

திருவிதாங்கூர் முன்னாள் அரச குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்ட இக்கோவில் பணக்கார கோவில்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மிக சாதாரணமாக இருந்த இந்தக் கோவிளில் 2011 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி, கோவிலின் 5 ரகசிய பாதாள அறைகளில் சில அறைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட அறைகளில் இருந்து ரூ. 2,50,000 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த கோயில் உலகப் புகழ் பெற்றதோடு, அந்த ஆண்டு இந்தியாவின் பணக்கார கோவிலான திருமலையான் வெங்கடேசனை பின்னுக்கு தள்ளிவிட்டார். ரூ. 500 கோடி மதிப்புள்ள தங்க விஷ்ணு சிலை, விலைமதிப்பற்ற பழங்கால தங்க ஆபரணங்கள், தங்க கிரீடங்கள், விலையுயர்ந்த ஆபரணங்கள், வெள்ளி, வைரங்கள், வைடூரியங்கள், மாணிக்க மற்றும் மரகதங்கள் ஆகியவை அடங்கும். இதன் மூலம் இக்கோவில் இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பணக்கார கோவில்களில் இடம் பிடித்துள்ளது.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+