» »இந்தியாவின் டாப் 10 மிக கவர்ச்சியான திருமண மாளிகைகள் எவை தெரியுமா?

இந்தியாவின் டாப் 10 மிக கவர்ச்சியான திருமண மாளிகைகள் எவை தெரியுமா?

Posted By: Udhaya

LATEST: மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

நீங்கள் உங்கள் திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்துகொள்ள ஆசைப்படுவீர்கள். அல்லது மிக பிரம்மாண்டமாக செய்யவிரும்புவீர்கள்.

சுற்றுலாத்தளங்களில் திருமணம் செய்துகொண்டால் எப்படி இருக்கும் கொஞ்சம் சிந்தித்து பாருங்க.

இதோ இந்த கட்டுரையில் இந்தியாவின் டாப் 10 மிக கவர்ச்சியான திருமண மாளிகைகள் குறித்து காண்போம்.

உமைத் பவன் மாளிகை, ஜோத்பூர், ராஜஸ்தான்

உமைத் பவன் மாளிகை, ஜோத்பூர், ராஜஸ்தான்

உமைத் பவன் அரண்மனை இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாகும்.

இந்த மாளிகையின் 347 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுகிறது.

en.wikipedia.org

தாஜ் ராம்பாக் மாளிகை, தாஜ் விடுதி, ஜெய்ப்பூர்

தாஜ் ராம்பாக் மாளிகை, தாஜ் விடுதி, ஜெய்ப்பூர்

ராம்பாக் மாளிகை, ஜெய்ப்பூர் மகாராஜாவினால் கட்டப்பட்டது. அது தற்போது சொகுசு விடுதியாக செயல்படுகிறது. ஜெய்ப்பூரிலிருந்து 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த

இடம்.

உங்கள் திருமணத்தை இந்த மாளிகையில் செய்தால் எப்படி இருக்கும். சும்மா அதிருமில்ல...

Sunnya343

சிட்டி மாளிகை, லால் காட், உதய்ப்பூர்

சிட்டி மாளிகை, லால் காட், உதய்ப்பூர்


ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் அமைந்துள்ள இந்தியாவின் மிக பிரம்மாண்டமான மாளிகைகளுள் ஒன்று இந்த சிட்டி மாளிகை.

இதன் கட்டுமானம் 1553ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் மகாரானா உதய் சிங் என்பவர் இந்த மாளிகையை கட்டினார்.

Henrik Bennetsen

அந்தி மாலை நேரத்தில் கேரள நதிகளினோரம்

அந்தி மாலை நேரத்தில் கேரள நதிகளினோரம்

அந்தி சாயும் நேரம், கடற்கரை அல்லது நதியோரத்தில் மனமினைந்து மணவிழா காணும் இருவரும் ஒருவரையொருவர் கரம்பிடித்து மகிழ்ந்து இல்லற வாழ்வில் நுழைய தகுந்த இடம்

கேரளம் அல்லாமல் வேறேது.

P.K.Niyogi

மே டி டியஸ் தேவாலயம், சாலிகவோ, கோவா

மே டி டியஸ் தேவாலயம், சாலிகவோ, கோவா

சாலிகவோ வடக்கு கோவாவில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

இந்த இடம் போர்வோரிம், குர்ரிம், சங்கோல்டா, கண்டோலிம் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றி கொண்டுள்ளது.

Anurag Jain

ஜேட் அறை, ஃபலக்னபா மாளிகை, ஹைதராபாத்

ஜேட் அறை, ஃபலக்னபா மாளிகை, ஹைதராபாத்

பாலாக்ணுமா அரண்மனை ஹைதராபாத்திலுள்ள அழகான இடங்களில் ஒன்றாகும். இது பைஹா ஹைதராபாத் மாநிலத்தினைச் சேர்ந்தது, பின்னர் நிசாம்களுக்கு சொந்தமானதாக

இருந்தது.

32 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட இந்த பேலஸ் சார்மினாரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனைக் கட்டியவர் நவாப் விகர்-உல்-உமர் ஆவார். இவர் ஆறாவது

நிசாமின் மாமா மற்றும் நவாப் மிர் மஹபூப் அலி கான் பஹதூரின் சொந்தம் ஆவார்

Bernard Gagnon

நீம்ரானா கோட்டை, டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை

நீம்ரானா கோட்டை, டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை


நீம்ரானா கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இது தலைநகர் டெல்லியிலிருந்து 122கிமீ தொலைவிலும், ஜெய்ப்பூரிலிருந்து 150கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.


RunningToddler

தாஜ்மஹால், ஆக்ரா

தாஜ்மஹால், ஆக்ரா


உங்கள் காதல் மனம் உருக, காதலியுடன் கைக்கோர்த்து காதலின் சின்னமான தாஜ்மஹாலின் முன் திருமணம் செய்துகொண்டால் எப்படி இருக்கும் யோசிங்க!

mahesh3847

ஹாவ்லாக் தீவு, அந்தமான்

ஹாவ்லாக் தீவு, அந்தமான்


தீவுகளில் திருமணம செய்துகொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத ஒரு இடம் இந்த ஹாவ்லாக் தீவு.

அந்தமான் தீவில் அமைந்துள்ள இந்த பகுதி திருமணம் செய்வதற்கு சிறந்த இடமாகும்.

Harvinder Chandigarh

லட்சுமி விலாஸ் மாளிகை, குஜராத்

லட்சுமி விலாஸ் மாளிகை, குஜராத்

இந்த மாளிகை குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ளது.

மகாராஜா சாயாஜிராவ் கட்டிய இந்த மாளிகையில் உங்கள் திருமணம் நடைபெற்றால் எப்படி இருக்கும் சொல்லுங்க!

Bracknell

30 வயதுக்குள் பார்க்க வேண்டிய அந்த 8 இடங்கள்!!!

Read more about: travel