Search
  • Follow NativePlanet
Share
» »கேரளா- தமிழ்நாட்டு பாடர்ல இப்படி நான்கு அணைகளா ?

கேரளா- தமிழ்நாட்டு பாடர்ல இப்படி நான்கு அணைகளா ?

கேரளா, அணைகள் என்ற சொற்களைக் கேட்டாளே சமீபத்தில் மழையால் அம்மாநிலத்தில் ஏற்பட்ட பேரிழப்பே நிச்சயம் நினைவுக்கு வரும். கேரளத்தையே ஒட்டுமொத்தமுமாக திருப்பிப் போட்ட கன மழையால் சிதைந்த கேரளம் தற்போது மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது. ஆனால், இந்த பேரிடருக்குக் காரணம், முல்லைப் பெரியார் அணையும், இடுக்கி அணையுமே என்றே வாதம் பரவலாக உள்ளது. ஒரு வேலை இதே நிலை தமிழகத்திற்கு வந்தால் ?. இந்த கேள்விக்கான தேடலே இக்கட்டுரையின் கரு. கேரள - தமிழக எல்லையில் உள்ள அடுத்தடுத்த நான்கு அணைகள், என்னவாகும் கொங்கு மண்டலம். வாங்க பார்க்கலாம்.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

தமிழகத்தில் செலுமையான பகுதிகள் என்றாலே சட்டென சொல்லி விடலாம் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, வால்பாறை, தாராபுரம் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளை. காரணம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இப்பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், பருவ மழை பொய்த்த காலங்களிலும் கூட மேற்கு மலைத் தொடரின் குழுமையான சீதோஷன நிலை இப்பகுதியை செழிப்பாக வைத்திருக்க உதவுகிறது.

100 கிமீ 4 அணைகள்

100 கிமீ 4 அணைகள்

குறிப்பாக, கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஏராளமான அணைகள், தடுப்பணைகள் இருந்தாலும், 100 கிலோ மீட்டர் தொலைவிற்குள் வரும் அடுத்தடுத்த நான்கு அணைகள் பிரம்மாண்டத்தின் உச்சம் தான். ஆம், கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழியார் அணை, திருமூர்த்தி அணை, அமராவதி அணை, பாலாரு அணை என ஒரே நேர்கோட்டில் நான்கு அணைகள் இப்பகுதிகள் முழுவதையும் செழிப்பாக வைக்கிறது.

ஆழியார் அணை

ஆழியார் அணை

கோம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது ஆழியார் அணை. வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கில் 1962-யில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் மூலம் பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள பகுதிகள் பாசன வசதி பெருகின்றன. சுமார் 81 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையின் கீழே சுற்றுலாப் பயணிகள மகிழ்விக்கும் வகையிலான பூங்காவும், அணையில் படகு சவாரியும் உள்ளது.

Manojtr5664

இணைப்பு அணைகள்

இணைப்பு அணைகள்

ஆழியார் அணையானது பல இணைப்பு அணைகளையும் கொண்டுள்ளது. வால்பாறையில் உள்ள சோலையாறு அணை, பரம்பிக்குளம் அணை, நீரார் அணை உள்ளிட்டவற்றின் மூலமும் நீர் வரத்தைப் பெருகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது திருமூர்த்தி அணைக்கு கிடைமட்ட கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

Dilli2040

அருகே உள்ள சுற்றுலா அம்சம்

அருகே உள்ள சுற்றுலா அம்சம்

ஆழியார் பகுதி வெறும் அணைக்கு மட்டும் பிரசித்தம் பெற்றதாக இல்லாமல், அருகே சுட சுட மீன் கடைகள், அறிவுத் திருக்கோவில், மீன் காட்சியகம், வால்பாறை சாலையில் குரங்கு அருவி, தேயிலைத் தொட்டங்களும், சோலை வனக் காடுகளும் நிறைந்த வால்பாறை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா அம்சங்கள் காணப்படுகின்றன.

Jaseem Hamza

திருமூர்த்தி அணை

திருமூர்த்தி அணை

ஆழியார் அணையில் இருந்து ஆனைமலை- பூலாங்கிணறு சாலையில் சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமூர்த்தி அணை. உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் பயணித்தாலும் இந்த எழில் கொஞ்சும் அணையை அடைந்து விடலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இந்த அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் உடுமலை மட்டுமின்றி பொள்ளாச்சி, தாராபுரம் பகுதிகளிலும் பல ஏக்கர் கணக்கான விவசாய நிலங்கள் பயணடைகின்றன.

பொழுதுபோக்கு அம்சங்கள்

பொழுதுபோக்கு அம்சங்கள்

திருமூர்த்தி அணைக்கு பயணம் செய்ய விரும்புவோர் அனைவருக்கும் இலவச இணைப்பாக வருகிறது திருமூத்தி மலையின் பசுமை தரிசனம். மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில் காணும் இடமெல்லாம் பசுமைச் சூழ வீற்றிருக்கும் அணை இயற்கை விரும்பிகளுக்கு வரப்பிரசாதமே. அணையைத் தவிர்த்து, அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி, படகு சவாரி என பல சுற்றுலா அம்சங்களும் இங்கே காணப்படுகின்றன.

amanalingeswarartemple

அமணலிங்கேஸ்வரர் கோவில்

அமணலிங்கேஸ்வரர் கோவில்

அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் திருமூர்த்தி அணையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்துள்ள வழிபாட்டுத் தலமான அமணலிங்கேஸ்வரர் கோவில் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

amanalingeswarartemple

பஞ்சலிங்க அருவி

பஞ்சலிங்க அருவி

கோவிலின் அருகாமையிலேயே அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவி. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வழிந்தோடி வரும் சிற்றாருகள் இங்கு பஞ்சலிங்க அருவிகளாக கொட்டும். பருமலைக் காலங்களில் இந்த அருவியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் அமணலிங்கேஷ்வரர் கோவில் வளாகமே மூழ்கும் நிலை ஏற்படும். கோடை காலத்தில் இங்கே பயணிப்பது சிறந்த அனுபவத்தை தரும்.

amanalingeswarartemple

அமராவதி அணை

அமராவதி அணை

உடுமலையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், திருமூர்த்தி அணையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது அமராவதி அணைக்கட்டு. ஆனமலை அடுத்து தமிழக - கேரள எல்லையில் அமராவதி டிவிசனுக்கு உட்பட்ட மலைப் பகுதியில் வழிந்தோடிவரும் நீரோடை அமராவதி ஆறாக உருப்பெருகிறது. இதன் குக்கே கட்டப்பட்ட ஆழமான ணைதான் அமராவதி அணை. தமிழக முதலமைச்சராக காமராஜர் இருந்த போது 1957 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. செங்குத்தான இந்த அணை 9.31 கிலோ மீட்டர் பரப்பும், 33.53 மீட்டா் ஆழமும் கொண்டுள்ளது.

Marcus334

நல்லதங்காள் ஓடை அணை

நல்லதங்காள் ஓடை அணை

நல்லதங்காள் அணையானது அமராவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றாகும். பழனி மலைத் தொடாின் வடக்கு சாிவில் உற்பத்தி ஆகி 32 கிலோ மீட்டர் பயணித்து திருப்பூா் மாவட்டத்திற்குள் நுழைகிறது. ஆறு கிராமங்களில் சுமார் 4500 ஏக்கா் பரப்பளவில் நீா்ப்பாசனம் மேற்கொள்ள ஏதுவாக தாராபுரம் வட்டத்தின் கொன்னிவாடி கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் அருகே நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே 2007 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. 3300 மீட்டா் நீளம் கொண்ட களிமண் அணையான இந்த அணையில் கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 150 மீட்டா் நீளத்திற்கு கல் கட்டமைப்பு உள்ளது. இதன் மூலம் 223 மில்லியன் கன அடி நீர் சேமிக்க முடியும்.

Sksiddhartthan

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

அமராவதி அணைப் பகுதியில் சுற்றுலா அம்சங்களும் அதிகளவில் உள்ளன. அவற்றுள், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம், முதலைப் பண்னை, படகு சவாரி, மூணார் சாலை உள்ளிட்டவை பிரசித்தம் பெற்றவை. குறிப்பாக, வார இறுதி நாள் விடுமுறையில் சிற்றுலா செல்ல விரும்வோர் தாராளமாக அமராவதி அணைப் பகுதிக்கு செல்லாம்.

Amaravathi Gardens

முதலைப் பண்னை

முதலைப் பண்னை

1976-ல் திறக்கப்பட்ட இந்த முதலைப்பண்ணை அமராவதி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. பெரிய அளவிலான தொட்டிகளுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த முதலைகள் நன்கு வளர்ந்த பின் அமராவதி வனப்பகுதிக்குள் விடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு காட்டுப் பகுதியில் விடப்பட்ட முதலைகள் அமராவதி அணை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் அதிகளவில் உலாவுவயும் பயணிகள் காண முடியும்.

Mouneshwar123

பாலாறு அணை

பாலாறு அணை

பாலாறு அணையானது திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் ரெங்க மலைக்கும், குட்டிக்கரடுக்கும் இடையே அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும். அமராவதி அணையில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், பழனியில் இருந்து 12.5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் பாலாறு மற்றும் பொருந்தலாறு ஆகிய இரு ஆறுகளுக்கும் இணையும் பகுதியில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

Jaseem Hamza

இரு அணைகள் இணைப்பு

இரு அணைகள் இணைப்பு

கொடைக்கானல் ஏரியின் உபரி நீர், வில்பட்டி, வடகவுஞ்சி ஆகிய கிராமப் பகுதியில் உருவாகும் இந்த ஆறு பாலாறு அணைப்பகுதியிலும், கொடைக்கானல் வட்டம் மன்னவனூர், கிளாவரை, பூம்பாறை ஆகிய மலைப் பிரதேசங்களில் உருவாகும் ஆறு பொருந்தலாறு அணைப்பகுதியிலும் வந்து சேர்கிறது. இந்த இரு அணைப் பகுதியையும் இணைத்து ஒரே அணையாக பாலாறு அணை உள்ளது. பாலாறு பொருந்தலாறு அணை என்றே இது அறியப்படுகிறது.

KARTY JazZ

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more