Search
  • Follow NativePlanet
Share
» »வேலூரில் சுற்றிப் பார்க்க இப்படி ஒரு இடங்களா? இதுவரை தெரியாம போச்சே...

வேலூரில் சுற்றிப் பார்க்க இப்படி ஒரு இடங்களா? இதுவரை தெரியாம போச்சே...

வேலூரில் புகழ்பெற்ற விஷயங்கள் என கேட்டால் வேலூர் கோட்டை, கல்வி நிறுவனங்கள், உயர்தர சிகிச்சைக்கான மருத்துவமனைகள் தான் பலருக்கும் தெரியும். ஆனால் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு, பாரம்பரியம் மிக்க கலாச்சார மையங்கள், கோவில்கள், வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் என பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இந்தியாவின் வரலாற்று நகரம் என போற்றப்படும் வேலூரில் அவசியம் சென்று பார்க்க வேண்டிய டாப் 7 இடங்களை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Top 7 tourist places in Vellore for photography lovers

1. வேலூர் கோட்டை

பண்டைய வரலாறு, கட்டிடக்கலை அழகு ஆகியவற்றிற்கு புகழ்பெற்றதாகும். 16ம் நூற்றாண்டில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது இந்த கோட்டை. திராவிட மற்றும் கோதிக் பாணியில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது.இதன் பிரம்மாண்ட சுவர்கள், அகழிகள், ஜலகண்டேஸ்வரர் கோவில் ஆகியவை கட்டிடக் கலைஞர்களையும் புகைப்பட பிரியர்களையும் ஈர்க்கும் இடமாக உள்ளது.

2. ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூர் கோட்டை வளாகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த கோவில் இந்தியாவின் தலைசிறந்த கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாகும். மிகவும் நுக்கமான சிற்பங்களுக்கு பெயர் பெற்றது இந்த கோவில். இந்த கோவிலில் கோபுரங்கள், வாசல்கள், இந்து மதத்தை பல்வேறு அம்சங்களை சித்தரிக்கும் தூண்கள் ஆகியவை நம்முடை கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள, தெய்வீகத்தை உணர ஏற்ற இடமாகும்.

Top 7 tourist places in Vellore for photography lovers

3. ஸ்ரீபுரம் பொற்கோவில்

ஸ்ரீபுரம் பொற்கோவில் அல்லது தங்கக்கோவில் அதிசயிக்க வைக்கும் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டதாகும். சுற்றிலம் பச்சை புல்வெளிகளால் சூழப்பட்ட இக்கோவில் சுற்றலா பயணிகளையும், பக்தர்களையும் ஈர்த்து வருகிறது. இங்குள்ள தங்க இலை வேலைப்பாடுகள், குறிப்பாக சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது இந்த கோவிலின் மீது பட்டு ஜொலிப்பது பார்ப்பதற்கே அத்தனை அற்புதமான உணர்வை தரும். காலை மற்றும் மாலை வேளையில் இந்த கோவிலை பார்ப்பது மறக்க முடியாத அனுபவத்தை தருவதாகும்.

4. அமிர்தி விலங்கியல் பூங்கா

இயற்கை விரும்பிகள், புகைப்பட பிரியங்கள், வன விலங்கு பிரியர்களை அதிகம் ஈர்க்கக் கூடிய இடம் அமிர்தி விலங்கியல் பூங்கா. இங்குள்ள அடர்ந்த காடுகள் மயில்கள், மான்கள், பல விதமான பறவைகள், ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் மரங்கள் ஆகியவை சுற்றலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. புதரான பாதைகளில் நடந்து சென்று இயற்கையை ரசிக்கும் அனுபவமும் இங்கு கிடைக்கும். விலங்குகளை இயற்கை வாழ்விடங்களின் பின்னணியில் போட்டோ எடுத்து மகிழ ஏற்ற இடம் இந்த விலங்கியல் பூங்கா.

5. புங்கனூர் ஏரி பூங்கா

அமைதியை விரும்புபவர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் புங்கனூர் ஏரி பூங்கா. மனதிற்கு இதமாக இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை சுற்றி பார்த்தபடி ஏரியை சுற்றி வருவது, பல வண்ணங்களில் அமைந்த அழகான தோட்டங்களை காண்பது என சுற்றுலாவை அழகானதாக மாற்றி விடக் கூடிய அற்புதமான இடம். போட்டோ, வீடியோ என வித விதமான படங்களை சுட்டுத்தள்ள ஏற்ற இடம் இதுவாகும்.

Vellore for photography lovers

6. செயிண்ட் ஜான்ஸ் சர்ச்

வேலூரில் உள்ள மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களில் செயிண்ட் ஜான்ஸ் சர்ச்சும் ஒன்று. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டதாகும். வேலூரில் கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக இந்த சர்ச் திகழ்கிறது. நவகோதிக் பாணி கட்டிடக்கலையில் இந்த தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அமைதியான சூழல் அனைத்து மதத்தவர்களையும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது.

7. வைனு பாப்பு ஆய்வகம்

வேலூரில் உள்ள காவலூர் மலையில் அமைந்துள்ளது இந்த வைனு பாப்பு ஆய்வகம். இரவு நேரத்தில் வானத்தில் கண்கவரும் அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடம். இரவில் இங்கு வரும் புகைப்பட கலைஞர்கள் தங்களின் தொலைநோக்கு லென்ஸ்களை பயன்படுத்தி நட்சத்திரங்கள், கிரகங்கள், வானியல் செயல்பாடுகளை படம்பிடிக்க இதை சிறந்த இடமாக பயன்படுத்துகிறார்கள்.

More News

    Read more about: vellore tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+