Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூருவில் இருக்கிறீர்களா?. புத்தகம் வாசிக்க பிடிக்குமா?. இந்த கட்டுரை உங்களுக்கானதே!

பெங்களூருவில் இருக்கிறீர்களா?. புத்தகம் வாசிக்க பிடிக்குமா?. இந்த கட்டுரை உங்களுக்கானதே!

By Naveen

நீங்கள் பெங்களூரு வாழ் தமிழரா?. புத்தகம் வாசிக்க பிடிக்குமா உங்களுக்கு?. இரைச்சல் மிகுந்த இந்நகரில் ஆசுவாசமாக அமர்ந்து நீண்ட நேரம் வசிக்க ஓரிடம் கிடைக்காத என்று ஏங்குகிறீர்களா?. அப்படியென்றால் வாருங்கள் பெங்களூருவில் இருக்கும் ஐந்து 'புக்-கபே'க்கள் பற்றி தெரிந்துகொள்வோம். இங்கே வேண்டிய உணவை ஆர்டர் செய்து ருசித்தபடியே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து புத்தகம் படிக்கலாம்.

1. கபே டெர்ரா(Café Terra) - கோரமங்களா:

பெங்களூருவில் இருக்கிறீர்களா?. புத்தகம் வாசிக்க பிடிக்குமா?. இந்த கட்டுரை உங்களுக்கானதே!

பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோரமங்களாவில் உள்ள கபே டெர்ரா காமிக்ஸ் புத்தக பிரியர்களின் சொர்க்கம் எனலாம். வசதியான இருக்கைகள் கொண்ட இந்த கபேயில் அமர்ந்தபடி இங்குள்ள பல அரிய காமிக்ஸ்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாசித்து மகிழலாம். இங்கே கிடைக்கும் வெளிநாட்டு காலை நேர உணவுகள் பெங்களூரு உணவுப்பிரியர்களிடையே மிகவும் பிரபலமாகும்.

2. அட்ட கலாட்டா(Atta Galatta) - கோரமங்களா:

பெங்களூருவில் இருக்கிறீர்களா?. புத்தகம் வாசிக்க பிடிக்குமா?. இந்த கட்டுரை உங்களுக்கானதே!

கன்னட நூல்கள் மட்டுமே இருக்கும் சிறிய கடையாக ஆரம்பிக்கப்பட்ட அட்ட கலாட்டா இப்போது பெங்களூரு புத்தக பிரியர்களின் வேடந்தாகலாக வளர்ந்துள்ளது. கன்னட நூல்கள் மட்டுமில்லாது ஆங்கில நூல்களும் இங்கே படிக்கக்கிடைக்கின்றன. புத்தக அறிமுக விழாக்கள், ஆசிரியருடன் உரையாடுதல் போன்றே வாசிப்பு சார்ந்த விஷயங்கள் ஏதேனும் எப்போதும் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. பர்கர், சான்ட்விச், காபி, பிசா என இங்கு கிடைக்கும் விதவிதமான உணவுகளை சுவைத்தபடியே புத்தகங்களுடன் டேடிங் செய்ய அற்புதமான இடம்.

3. லேநின் ட்ரீ ஆர்ட் கபே(Leanin' Tree Art Café) - பசவனகுடி:

பெங்களூருவில் இருக்கிறீர்களா?. புத்தகம் வாசிக்க பிடிக்குமா?. இந்த கட்டுரை உங்களுக்கானதே!

மரத்தடியே அமர்ந்து புத்தகம் படித்தபடியே சுவையான உணவுகளையும் சுவைக்கும் வாய்ப்புக்கிடைத்தால் எப்படியிருக்கும்?. இது அத்தனையும் கிடைக்கும் இடம் தான் பசவனகுடியில் இருக்கும் லேநின் ட்ரீ ஆர்ட் கபே ஆகும். இங்கே புத்தகங்கள் மட்டுமில்லாமல் ரவிவர்மாவின் ஓவியங்களும் இருக்கின்றன. ரிலாக்ஸ்டாக சில மணிநேரம் செலவிட நினைப்பவர்கள் இங்கே நிச்சயம் செல்ல வேண்டும்.

4. பிலமேங்கோ(Flamenco) - ஜெயநகர்:

பெங்களூருவில் இருக்கிறீர்களா?. புத்தகம் வாசிக்க பிடிக்குமா?. இந்த கட்டுரை உங்களுக்கானதே!

இத்தாலிய உணவுகளை சுவைத்தபடி எஸ்.ராவையே, சாரு நிவேதிதாவையோ அல்லது உலகம் தமிழரான ஏ.கே.செட்டியாரின் நூல்களையோ படிக்க ஆசையா?. அப்படியென்றால் ஜெயநகரில் இருக்கும் பிலமேங்கோ கபேவுக்கு வாருங்கள். அதிசுவையான இத்தாலிய உணவுகளான பாஸ்தாவையோ, பிசாவையோ சுவைத்தபடியே புத்தகங்களுக்குள் சஞ்சரித்திடுங்கள்.

5. கபே ஆன் கேன்வாஸ்(Coffee on Canvas) - கோரமங்களா:

பெங்களூருவில் இருக்கிறீர்களா?. புத்தகம் வாசிக்க பிடிக்குமா?. இந்த கட்டுரை உங்களுக்கானதே!

கையில் புத்தகம் எதுவும் இல்லை. ஆனால் வாசிக்க வேண்டும் போல உள்ளது என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா?. அப்படியென்றால் கோரமங்களாவில் உள்ள கபே ஆன் கேன்வாஸுக்கு செல்லுங்கள். சுவையான உணவுகள் மற்றும் ஜூஸ்கள் மட்டுமில்லாமல் அற்புதமான புத்தக கலெக்ஷனும் இங்குள்ளது. விரும்பிய புத்தகத்தை எடுத்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படிக்கலாம்.

என்ன இப்போதே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும் போல உள்ளதா?. இதுபோல உங்களுக்கு சென்னையிலோ, கோயம்பத்தூரிலோ ஏதேனும் 'புக்-கபே' பற்றி தெரியுமென்றால் கமெண்டில் அவற்றைப்பற்றி பகிர்ந்திடுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X