
டாப்ஸ்லிப், கோயம்புத்தூரிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு பகுதி. ஆழியாறு அருகே அமைந்துள்ள இயற்கையின் குழந்தை அது. அதிகம் மனித மாசு படாத, தீண்டாத ஒரு மலைப் பகுதி. அழகியலின் உருவாய் மொத்தமும் இருக்கும் டாப்ஸ்லிப்புக்கு அதன் புகைப்படங்களைப் பார்த்தாலே போகத் தோன்றும்.
பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ தூரம் பயணித்து அங்கிருந்து மலை ஏற்றம். சிறப்பான ஒரு சுற்றுலா. புகைப்படத்தை மட்டும் பாருங்கள். உடனே திட்டமிடுவீர்கள் டாப்ஸ்லிப் எப்போது செல்லலாம் என்று...

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 1
பச்சை பசேலென்று காட்சி தரும் புல்தரையும், பசுமை நிறைந்த மரங்களும், செடி கொடிகளும், அண்ணாந்து பார்க்கும் வெண்ணிற மேகங்களும் ஆகாயமும்....
Jaseem Hamza

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 2
பசும்புல் தரையும் அதில் மேயும் மான்களும் அழகிய காட்சியை அழகாய் நோக்கும் நீங்களும். இயற்கையின் அழகிய படைப்பான நம்மிடம் இயற்கை தன் படைப்பின் அழகை காட்ட அதை நாம் நம் புகைப்படக் கருவியில் சரியான கோணத்தில் படம் பிடிப்பதும் அழகுக்கு அழகு சேர்க்கும் கலைதானே...
Jaseem Hamza

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 3
சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் மரங்களும், அருகில் வானத்திடமிருந்து மண்ணின் மானம் காக்கும் வகையில் உடையாய் பரந்திருக்கும் புல்வெளியும். புற்கள் தாங்கும் வலியைத் தாங்கா மண் தன்னில் குத்தி வைக்கப்பட்டுள்ள பலகையும். பலகையில் புல்வெளியில் நடக்காதீர் எனும் வாசகமும்.. இயற்கைக்கு இயற்கை மேலுள்ள காதலை இயற்கையின் சிறந்த படைப்பான உங்களுக்காக... ப்ளீஸ் புல் தரை மீது நடக்காதீர்...
Jaseem Hamza

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 4
டாப் ஸ்லிப்பின் அழகை கண்டு காதலில் விழுந்த கற்கூட்டம் மொத்தமாய் தற்கொலை எண்ணத்தில் சரிந்து விழ, அதைத் தாங்கி பிடிக்க மரங்களும், செடிகளும் சுற்றி நின்று காதலை வளர்க்க, அருமையான இயற்கையின் மடியில் அனைவரும் இளைப்பாறும் அழகிய தருணம்.
SANKAR PS

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 5
வான் மேகம் மண்ணில் விழ தருணம் பார்த்து தயங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் காற்றும் தன் தேவையைத் தேடி மண்ணில் வந்து சாலைகளில் தேய, அருகாமை மரங்கள் தென்றலை பெற்று இன்னிசை பாடும் அழகிய நிகழ்வு இது. அருகில் சாலை கரடு முரடு ஆனாலும் புல்வெளிகள் மீது நடந்து மண்ணுக்கும் புல்லுக்குமான காதலில் கரடியாய் நுழைந்து விடாதீர்.. ப்ளீஸ்...
Jaseem Hamza

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 6
சொர்க்கத்துக்கு செல்லும் சாலைகள் கரடு முரடாகத்தான் இருக்குமோ என்னவோ. . சரி சரி வழியில் சொர்க்கத்தின் வரவேற்பு பலகைகளாய் புல் தரைகளும், அதில் மண்ணுடன் காதல் புரியும் பசுமை நிறை புற்களும்.
Jaseem Hamza

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 7
நம்மை அறியாத ஒரு முயலின் கண்களுக்கு சிக்கும் காட்சிகளுக்கு முன்னரே காதுகளுக்குள் அதிரும் ஒலி அதிர்ச்சி கிலியை ஏற்படுத்து, நம் வரவை எதிர்பார்த்து ஒரு வித அச்சத்துடன் நம்மை வரவேற்கும் அழகிய முயல் குட்டி..
Sreers04

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 8
டிரில் சென்று வந்து திகைப்பில் நிற்கும் மரங்களோ என்னவோ... இத்தனை வரிசையில் சிறப்பாக நின்று மழைகளையும், எப்போதாவது செல்லும் நம்மையும் வரவேற்கிறது. தென்றலின் காதல் இசை கேட்க காத்திருக்கும் இம்மரங்கள் நம் வரவையும் திருவிழாவாய் கொண்டாடும். தயவுசெய்து நெகிழி பைகளை இங்கு பயன்படுத்தாதீர்கள் என்று கெஞ்சி கேட்பது போலில்லை.
tshrinivasan

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 9
பச்சை அழகை நீலம் அழகா என்ற குழப்பத்தில் இடத்தைவிட்டே ஓடிவிட்ட மேகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பசுமை நிற மரம் செடி கொடிகள். தொலை தூர வானம் செய்வதறியாது விழித்து நிற்கும் பரிதவிப்பு நிகழ்வாய் இந்த காட்சி...
tshrinivasan

டாப்ஸ்லிப் அருமையான புகைப்படம் 10
பசுமையின் நிறைவாய் மான்களின் வயிற்றில் செல்லும் புற்கள்.
Thangaraj Kumaravel