» »சந்தனத்தால் அடிக்கும் மக்கள்! அவர்களை கோடீஸ்வரனாக்கும் தெய்வம்! எங்கே தெரியுமா?

சந்தனத்தால் அடிக்கும் மக்கள்! அவர்களை கோடீஸ்வரனாக்கும் தெய்வம்! எங்கே தெரியுமா?

Written By: Sabarish

PC : Thejas Panarkandy

சைவம் காக்கும் சிவன்

இந்தியாவில் சைவ மதத்தினரின் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் சிவன். தென்னகத் தலைவன், தமிழ் குடிமகன்களின் கடவுள் என பல்வேறு சிறப்புகளை சிவன் பெற்றுள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி, பேரூழியில் அனைத்தையும் அழிப்பவ சிவனாவார். சிவனின் இடப்புறத்திலிருந்து திருமாலும், வலது புறத்திலிருந்து பிரம்மனும் தோன்றினார்கள் என்று வேதவியாசர் கூறுகின்றார். பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்றும் புராணங்கள் வாயிலாக தெரியவருகிறது.

வரலாற்றில் சிவன்

வரலாற்றில் சிவன்

PC : wikipedia

தமிழகர்களின் ஆதியான சிந்து சமவெளி நாகரி காலகட்டத்தில் கண்டறியப்பட்ட தியானத்திலுள்ள பசுபதி முத்திரையே சிவவழிபாட்டின் ஆரம்பமாக உள்ளது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதுபோல் உள்ள அந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது. அக்னி, வாயு, இந்திரன், பிரஜாபதி போன்ற வேதக்கடவுள்களே பிற்காலத்தில் சிவனாக வளர்ந்ததாகவும் சங்ககால ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

இந்தியாவில் சிவன் வழிபாடு

இந்தியாவில் சிவன் வழிபாடு

PC : Yosarian

இந்தியாவில் சிவன் வழிபாடு பெரும்பாலும் லிங்க வடிவிலேயே உள்ளன. வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் மட்டுமே சிவனின் உருவ வழிபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பல தோற்றங்களைக் கொண்ட சிவன் வேண்டியதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஆதிகாலம் முதல் பரவலாக நிலவிவருகிறது.

அடித்துக் கேட்டால் வேண்டியதை கொடுக்கும் லிங்கம்

அடித்துக் கேட்டால் வேண்டியதை கொடுக்கும் லிங்கம்

PC : Claude Renault

கோவில் வழிபாடுகளில் கடவுளுக்கு ஆடை, அன்னதானம், கிடாவெட்டு என பல்வேறு முறைகளில் படையல் வைத்து வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்பது தொன்நம்பிக்கை. இதைத்தான் நாம் பெரும்பாலான கோவில்களில் பார்த்திருப்போம். ஆனால், கோவை அருகே உள்ள சிவன் கோவிலில் சந்தனக் கட்டையால் அடித்துக் கேட்டால் வேண்டியது விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தக் கோவிலைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

எப்படிச் செல்வது

எப்படிச் செல்வது

PC : Map

கோவையில் இருந்து 81 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது உடுமலைப் பேட்டை. கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக உடுமலையை அடைய தொடர் பேருந்து வசதிகளும், தற்போது ரயில் சேவையும் உள்ளது. தனியார் பேருந்து அல்லது ரயில்கள் மூலம் சென்னையில் இருந்து திருப்பூரை அடைந்து பின் உடுமலையை அடையலாம்.

சென்னை- உடுமலை

சென்னை- உடுமலை

PC : Map

சென்னையில் இருந்து உடுமலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வரவிரும்புவோர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சகாப்தி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், மட்கோன், கோயம்புத்தூர், கொச்சுவேளி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாகவும், எக்மோரில் இருந்து வருவோர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர் மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மூலமாக திருப்பூரை வந்தடையலாம். திருப்பூரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உடுமலை உள்ளது.

இயற்கைசூழ்ந்த வனக் கோவில்

இயற்கைசூழ்ந்த வனக் கோவில்

PC : Kkan051

பழனி - கோவை நெடுஞ்சாலையில் உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமூர்த்தி அணை. இந்த அணையை ஒட்டி அமையப்பெற்றுள்ளதுதான் அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில். மலையடிவாரத்தில் திருமூர்த்தி கோவில் என புகழ் வாய்ந்த கோவிலாக இது உள்ளது.

தல அமைப்பு

தல அமைப்பு

PC : Hayathkhan.h

திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள இந்த சிவன் கோவிலினை ஒட்டி வற்றாத நீரோடை ஓடுகிறது. இந்தக் கோவிலின் அருகில் உள்ள மலையேற்றத்தில் பஞ்சலிங்க அருவி என அழைக்கப்படும் அருவியொன்றும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திலுக்கிறது.

கோவில் வரலாறு

கோவில் வரலாறு

PC : amanalingeswarartemple

தென்தமிழகத்தில் மிகவும் பிரசிதிபெற்றது திருமூர்த்தி மலை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளது இங்குள்ள அணையும், அமணலிங்கேஷ்வரர் கோவிலுமே. கைலாயத்தில் நடைபெற்ற இறைவனின் திருமண கோலத்தை குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே பஞ்சலிங்கம் என கூறப்படுகிறது. கைலாயக் காட்சியை இறைவன் திருமூர்த்தி மலையிலும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக காட்சியளிக்கின்றனர்.

என்ன சிறப்புன்னு தெரியுமா ?

என்ன சிறப்புன்னு தெரியுமா ?

PC : amanalingeswarartemple

அமணலிங்கேஷ்வரர் கோவிலில் உள்ள மும்மூர்த்திகளை வழிபடும் பக்தர்கள் சந்தனத்தை வாங்கி கடவுள் உருவச் சிலையின் மீது எறிந்து விசித்திரமாக வழிபடுகின்றனர். அவ்வாறு சந்தனத்தை தூக்கி எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்ற தொன்நம்பிக்கி இங்கு வரும் பக்தர்களது மனதில் நிலவிவருகிறது.

மகரிஷி மனைவி வழிபட்ட பஞ்ச லிங்கம்

மகரிஷி மனைவி வழிபட்ட பஞ்ச லிங்கம்

PC : amanalingeswarartemple

திருமூர்த்தி கோவில் மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. இங்குதான் அத்திரி மகரிஷியும் அவரது மனைவியும் பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்ததாக தொன்நம்பிக்கை உள்ளது. இன்றளவும் கூடு அவர்கள் இந்த பஞ்ச லிங்கத்தை அன்றாடம் வழிபடுவதாக கூறி திகைப்படையச் செய்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். பஞ்ச லிங்கத்தை அடுத்து சப்த கன்னியருக்கும் தனி சன்னதி உள்ளது.

குழந்தை பாக்கியம் அருளும் கன்னிமார்கள்

குழந்தை பாக்கியம் அருளும் கன்னிமார்கள்

PC : amanalingeswarartemple

நீண்ட ஆண்டுகள் குழந்தை இன்றி தவிக்கும் தம்பதியினர் இக்கோவிலை ஒட்டியுள்ள நீரோடையில் நீராடிவிட்டு சப்த கன்னிமார்களையும், இத்தலத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு வரடிக்கல்லை பிடித்தும் வேண்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும், திருமணம், வேலை, மனநிம்மதி உள்ளிட்டவையும் நல்லமுறையில் நடக்கும்.

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

PC : Pratheept2000

பொள்ளாச்சி, உடுமலையினைச் சுற்றிலும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், ஆழியார் அணை, சின்னார் வனவிலங்கு சரணாலயம், அறிவுத் திருக்கோவில், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, மாரியம்மன் கோவில், மாசாணியம்மன் திருக்கோவில், அழகுநாச்சி அம்மன் கோவில், மங்கீ ஃபால்ஸ், சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில், நெகமம், பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் உள்ளிட்டவை மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களாக உள்ளன.

ஆழியார் அணை

ஆழியார் அணை

PC : K.Mohan Raj

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆழியார் அணை. ஆழியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த ஆழியார் அணையின் மூலம் சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பயணடைந்து வருகின்றன. சுமார் 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள ஆழியார் அணை இப்பகுதியில் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.

சின்னார் வனவிலங்கு சரணாலயம்

சின்னார் வனவிலங்கு சரணாலயம்

PC : Marcus334

பொள்ளாச்சியில் அருகே அமைந்துள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை, புலிகள், யானைகள், தொப்பித்தலை குரங்குகள், நீலகிரி வரையாடுகள், தலை நரைத்த ராட்சத அணில்கள் உள்ளிட்ட 34 வகையான பாலுட்டிகள் காணப்படுகின்றன. மேலும், தூவானம் நீர்வீழ்ச்சி மற்றும் முழு சரணாலயத்தையும் பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் ஆகியவை இச்சரணாலயத்தின் கவரும் அம்சங்களில் முக்கியமானவை ஆகும்.

அறிவுத் திருக்கோவில்

அறிவுத் திருக்கோவில்

PC : Ramesh Vethathiri

ஆழியார் அணையின் எதிரே ஆடலியம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது அறிவுத் திருக்கோவில். இக்கோவில் விழிப்புணர்வுக்கான கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. யோக மன்னர் வேதாத்ரி மஹரிஷியால் நிறுவப்பட்ட இக்கோவில், தியான நிலையமாக செயல்படுகிறது. இங்கு, தியானம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நூல்கள் அதிகளவில் கிடைக்கின்றன.

இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா

இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா

PC : Marcus

ஆனைமலையில் அமைந்துள்ள, இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரின் வருகையால், 1961-ல் இப்பெயர் சூட்டப்பட்டது. இங்கு, சிவப்பு மரப் பறவை, புள்ளிப் புறா, மீசையுடன் கூடிய புல்புல், கறுப்புத் தலை ஓரியோல், ராக்கெட் வால் கரிச்சான் ஆகியவை உள்ளன. மேலும், இப்பூங்காவினுள் அமைந்துள்ள அமராவதி ஏரியில் முதலைகள் வாழ்கின்றன. நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், கண்ணைக் கவரும் ஆனைகந்தி ஷோலா, கரியன் ஷோலா, அணைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைகளைக் காண்பதற்காகவே, இங்கு கூடுகின்றனர்.

மாரியம்மன் கோவில்

மாரியம்மன் கோவில்

PC : Prof tpms

பொள்ளாச்சி நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த மாரியம்மன் கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. மாசி தேர்த்திருவிழா, இங்கு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இங்கு வாரத்தின் எல்லா நாட்களிலும் பூஜைகள் செய்யப்படுகின்றன. இக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் வருகைக்காக திறந்து வைக்கப்படும்.

மாசாணியம்மன் திருக்கோவில்

மாசாணியம்மன் திருக்கோவில்

PC : (WP:NFCC#4)

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு வழிபட்டட்டுச் சென்றால் வேண்டிய காரியம் மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் அம்மனுக்கு உகந்த நாட்கள் என்பதால் இவ்விரு நாட்களிலும், பக்தர்கள் வருகை, இங்கு மிக அதிகமாக இருக்கும்.

அழகுநாச்சி அம்மன் கோவில்

அழகுநாச்சி அம்மன் கோவில்

PC : Terence Ong

அழகுநாச்சி அம்மன் கோவில் வள்ளியரச்சல் என்ற ஊரைச் சேர்ந்த மக்களால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு மூலக்கடவுளாக விளங்கும் அழகுநாச்சி அம்மன், கொங்கு வெள்ளாளக் கவுண்டர் என்ற சாதியினரின் குல தெய்வமாகும். இக்குலத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் குல தெய்வத்தின் திருவுருவச்சிலையோடு இவ்விடத்துக்கு வந்ததாகவும், அவர்கள் இளைப்பாறும் சமயத்தில், அச்சிலை மாயமாக மறைந்து போனதாகவும், அதனால், அவர்கள் தங்கள் குலதெய்வத்துக்கு இங்கேயே கோவில் எழுப்ப முடிவு செய்ததாகவும் நம்பப்படுகிறது. அவ்வாறு முடிவு செய்தபடியே, அவர்கள் அங்கேயே தங்கி, இந்தக் கோவிலை கட்டி பராமரித்து வந்துள்ளனர்.

மங்கீ ஃபால்ஸ்

மங்கீ ஃபால்ஸ்

PC : Marcus Sherman

ஆனைமலையில் அமைந்துள்ள மங்கீ ஃபால்ஸ் எனப்படும் குரங்கு அருவி இயற்கையாக அமைந்த நீர்வீழ்ச்சியாகும். பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் மலையேற்றத்துக்கான பாதை ஒன்று உள்ளது. இந்த அருவியின் கண்ணை கொள்ளை கொள்ளும் அழகினால், இது மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில்

சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில்

PC : Map

சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், பொள்ளாச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூலக்கல் கிராமத்தில் அமைந்துள்ளது. உள்ளூர் கிராமவாசி ஒருவரின் கனவில் அம்மன் வந்து, தனக்கு கோவில் ஒன்றை எழுப்பச் சொன்னதால் அவர் இக்கோவிலைக் கட்டியுள்ளார். இன்று வரை இக்கோயில், இப்பகுதியின் கலாச்சாரச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது.

சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

PC : Vanmeega

கொங்கு சோழர்களால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது சுப்பிரமணியசுவாமி கோவில். சிறப்பான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இக்கோவில், பழங்கால கட்டிடக்கலையில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்வதாக உள்ளது. சுப்ரமணியசுவாமியின் வழிபாட்டு தலமான இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசிதிபெற்றதாக உள்ளது.

நெகமம்

நெகமம்

PC : Challiyan

நெகமம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய பஞ்சாயத்து நகரமாகும். இவ்விறு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 14 கிலோ மீட்டர். பரந்து விரிந்து கிடக்கும் தென்னந்தோப்புகள், இவ்விடத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன. இங்கு போய், இதன் அழகைக் கண்டு ரசித்து வரலாம். குடும்பத்தினருடன் தோப்பில் அமர்ந்து உணவு சாப்பிடுவது மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். புது அனுபவமாகவும் இருக்கும்.

பொள்ளாச்சி ஐயப்பன் கோவில்

பொள்ளாச்சி ஐயப்பன் கோவில்

PC : Roney Maxwell

1970-ம் ஆண்டு கட்டப்பட்ட பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் சபரி மலை அய்யப்பன் கோயிலுடன் நிறைய ஒற்றுமைகள் கொண்டதாகக் காணப்படுகிறது. இக்கோவிலின், மூலவராக ஐயப்பன் இருந்தாலும், பிற தெய்வங்களின் சந்நிதிகளையும் காணலாம். ஏராளமான பக்தர்கள் இங்கு தினந்தோறும் நடைபெறும் வழக்கமான சடங்கு முறைகள், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, இங்கு வந்த வண்ணம் இருப்பர்.

Read more about: temple, travel