» »மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4

மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4

Written By: Sabarish

கடந்த மூன்று நாட்களாக வரும் தமிழ்புத்தாண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் மாற்றம், எந்த கோவிலுக்குச் சென்றால் செல்வமிக்கவராக, நோய்நொடி அன்டாதவராக உருவெடுக்கலாம் என பார்த்து வந்தோம். அந்த வகையில் முதல் 9 ராசி நண்பர்களும் செல்ல வேண்டிய கோவில்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் என பார்த்து முடித்த நிலையில் இன்று இறுதியாக உள்ள மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் எந்தக் கோவிலுக்குச் சென்றால் இதுவரை காணாத உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் செல்வத்தை அள்ளி வரலாம் என பார்க்கலாம் வாங்க...

வீரராகவப் பெருமாள் - மகரம்

வீரராகவப் பெருமாள் - மகரம்


மகர ராசி உடையோரே உங்களது ராசியில் குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத வகையில் தொழிலில் லாபம் பார்ப்பீர்கள். இறுப்பினும், ஏப்ரல் 14 முதல் 2019 பிப்ரவரி வரை ராசிக்குள் கேது நுழைவதால் தேவையற்ற வம்புகள், வீன் சலசலப்பு வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து தப்பிக்க, தேடி வரும் பொற்செல்வத்தை தக்கவைக்க மதுரையில் உள்ள வீரராகப் பெருமாளை வழிபட்டு வருவது யோகத்திற்கு வழிவகுக்கும்.

Ssriram mt

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


மதுரை மாவட்டத்தில் சித்ராபவுர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக் காண கோடி வரத்திற்கு ஈடாகும். மேலும், இக்கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் வீரராகவராகவும், ஓய்வெடுக்கும் ரூபத்தில் ராங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார்.

Ssriram mt

திருவிழா

திருவிழா


பெருமாளுக்கு உகந்த நாட்களான சித்ராபவுர்ணமி, ஆடி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மாபெரும் அளவிலான திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், சித்ராபவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி வழிபாடுகள் உலகப் புகழ்பெற்றவை.

Military karthick

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.

Nsmohan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து திருநெல்வேலி சிறப்பு ரயில், மதுரை வார ரயில், சுருவாயூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சிறப்பு ரயில், திருச்செந்தூர் ரயில் என பல ரயில் சேவைகள் உள்ளன. மேலும், மதுரை விமான நிலையம் வீரராகவப் பெருமாள் கோவிலின் அருகேயே அமைந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக எளிதில் கோவிலை அடையலாம்.

SarThePhotographer

மல்லிகார்ஜூனேசுவரர் கோவில் - கும்பம்

மல்லிகார்ஜூனேசுவரர் கோவில் - கும்பம்


குரு, கேது, ராகு என ஒட்டுமொத்த சக்கரமும் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வருடம் இந்த தமிழ்புத்தாண்டு. பொருட்செல்வம் மட்டுமில்லைங்க, மக்கள் செல்வமும், நோய்நொடியற்ற வாழ்க்கைச் செல்வமும் வந்து குவியப் போகுது. இந்த வருடத்தை மேலும், மகிழ்விக்க, அவ்வப்போது ஏற்படவுள்ள சிறுசிறு இன்னல்களை துரத்தியடிக்க தர்மபுரியில் அமைந்துள்ள மல்லிகார்ஜூனேசுவரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று புத்தாடை சாற்றி வழிபட்டு வருவது சிறந்தது.

Srinivas Chidumalla

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


எந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத வகையில் மூலவரான மல்லிகார்ஜூனேசுவரரைக் காட்டிலும், தாய்மையின் சிறப்பை போற்றும் வகையில் காமாட்சி அம்மையாரின் திருஉருவம் உயரமாக காட்சியளிக்கிறது. மேலும், சுமார் மூன்று டன் எடையுள்ள இரண்டு தொங்கும் தூண்கள் இந்த சிவத்தலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vjvikram

திருவிழா

திருவிழா


மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு இக்கோவிலில் சிறப்பு பெற்றதாக உள்ளது. தமிர்புத்தாண்ட தினத்தன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சூழ மாபெரும் அளவிலான தீபாராதனை வழிபாடு நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி சன்னதியில் உள்ள பைரவருக்கு காலபைரவர் ஜெயந்தி தினங்களன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகம், அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்படுகின்றன.

Klsateeshvarma

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ், டாடா எக்ஸ்பிரஸ், வெஸ்ட் காஸ்ட் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஏராளமான ரயில் சேவைகள் தர்மபுரிக்கு செல்ல உள்ளன.

Karthikeyangopinathan

சுருளிவேலப்பர் திருக்கோவில்- மீனம்

சுருளிவேலப்பர் திருக்கோவில்- மீனம்


இந்த தமிழ்புத்தாண்டு உங்களுக்கான ஜாக்பாட் வருசங்குறதுல எந்த மாற்றமும் இல்லை. காரணம் பத்தாம் வீட்லேயே சனிபகவான் குடிகொண்டுள்ளார். தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் இந்த வருசத்துல தொழில் முன்னேற்றம், செல்வாக்கு அதிகரிப்பு, நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் என கூறைய பிச்சுக்கிட்டு வரப்போகுது வரம் உங்களுக்கு. இந்த அதிகப்படியான வாய்ப்புகளை தட்டிப் பறிக்க நினைக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் ஆதிக்கம் உங்களை விட்டு விலக தேனி மாவட்டத்துல உள்ள ஸ்ரீசுருளிவேலப்பரை வணங்குவது கட்டாயம்.

Ssriram mt

சிறப்பு

சிறப்பு


குகைக்குள்ள இருந்தபடியே அருள்பாலிக்கும் முரகள் உள்ள இத்தலத்தில் குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த உடன் விபூதி தோன்றுகிறது. அதுமட்டுமா, இத்தலத்தின் அருகே உள்ள ஓடை நீரில் விழுந்த இலை கல்லாக மாறுவதும், மாமரத்தின் அடியில் இருந்து வற்றாத ஊற்று நீர் பொங்கி வழிவதும் என இன்னும் ஏராளமான மர்ம நிகழ்வுகளும் நடக்கிறது.

Kramasundar

திருவிழா

திருவிழா


சித்திரைத் திருநாள், ஆடிப் பெருக்கு, தைப்பூசம், அம்மாவாசை, பங்குனி என முருகனுக்கு உகந்த இந்த நாட்களில் விமர்சையாக விழா கொண்டாடப்படுகிறது. பிற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இக்கோவிலின் நடை திறந்த நிலையில் உள்ளது.

Summer yellow

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து விழுப்புரம், திண்டுக்கல் வழியாக தேனியை அடைந்து சுருளிமலைக்கு செல்லலாம். ரயில் பயணத்தைக் காட்டிலும் இருசக்கர, அல்லது காரில் சுருளியை அடைவது சிறந்த சுற்றுலாவாகவும் அமையும். சுற்றியுள்ள அருவிகளும், பசுமைக் காடுகளும், ஆன்மீகத் தலமும் இப்பயணத்தை இன்னும் மேன்மையடையச் செய்யும்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்