Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண்ணாமலை சுற்றுலா – TTDCயின் கிரிவலம் பேக்கேஜ் புக் செய்வது எப்படி?

சென்னையிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண்ணாமலை சுற்றுலா – TTDCயின் கிரிவலம் பேக்கேஜ் புக் செய்வது எப்படி?

'நினைத்தாலே முக்தி தரும்' சிறப்பு வாய்ந்த ஸ்தலமான திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகும். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த புனிதமான மலையை பௌர்ணமி திருநாளில் வலம் வருவது ஏழு ஜென்ம பாவங்களை போக்கி, நல்வாழ்வுக்கு உண்டான பெரும் பலன்களை அளிக்கும்! கிரிவலம் அன்று மிகவும் கூட்டமாக இருக்குமே எப்படி செல்வது என்கிற கவலையா? TTDC நமக்காகவே ஒவ்வொரு மாதமும் சென்னையிலிருந்து கிரிவல சுற்றுலா பேக்கேஜ் இயக்குகிறது. சிரமமே இல்லாமல் சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்று, கிரிவலம் முடித்து, கஷ்டமே இல்லாமல் சென்னைக்கு திரும்பலாம் தெரியுமா?

எண்ணற்ற பலன்கள் வழங்கும் கிரிவலம்

அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும். பல ஆயிர ஆண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருந்து வருகிறது என புராணங்கள் கூறுகின்றன.

ttdconedaytourtothiruvannamalaigirivalam

ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் கிரிவலம்

திருவண்ணாமலையில் எந்த கிழமையில், எந்த நேரத்தில் கிரிவலம் சென்றாலும் உயர்வான பலன் கிடைக்கும். என்றாலும் பெளர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 14 கிமீ தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளிட்ட 99 கோவில்கள் உள்ளன. இந்த மலையை ஒருமுறை வலம் வந்து வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தங்களின் பாவங்கள், குறைகள் தீர பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

எப்படி கிரிவலம் செல்ல வேண்டும்?

பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென, மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல், பிறரிடம் தானம் வாங்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும்.

Thiruvannamalai girivalam on every full moon day from chennai

தானம் செய்ய மறக்காதீர்கள்

கிரிவலம் வரும்போது உங்களிடம் யாராவது யாசகம் கேட்டால் இல்லையென்று சொல்லாமல், உங்களால் முடிந்ததை வழங்குங்கள். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும். இவ்வாறாக கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.

சென்னை to திருவண்ணாமலை TTDC பேக்கேஜ்

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக TTDC சார்பில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று கிரிவலபேக்கேஜ் அழைத்து செல்லப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் சென்னையிலிருந்து திருவண்ணமலைக்கு சிறப்பு ஏசி பேருந்துகள் TTDC சார்பில் இயக்கப்படுகின்றன. இந்த கிரிவல பேக்கேஜை நீங்கள் புக் செய்தால் போதும், சென்னையிலிருந்து திருவண்ணமலைக்கு எந்த சிரமமும் இல்லாமல் சென்று, கிரிவலம் சுற்றி, கஷ்டமே இல்லாமல் சென்னைக்கு திரும்பலாம்.

TTDC கிரிவல பேக்கேஜின் தகவல்கள்

1. இந்த கிரிவல பேக்கேஜ் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று காலை 8:00 மணி அளவிலும் மதியம் 2:00 இரண்டு விதமாக இயக்கப்படுகிறது.

2. நீங்கள் டிக்கெட் புக் செய்த பின்னர், நீங்கள் தேர்ந்தெடுத்த நேரத்திற்கு ஏற்றார்போல ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே திருவல்லிக்கேணியில் உள்ள TTDC அலுவலகத்தை அடைய வேண்டும்.

3. அங்கிருந்து திருவண்ணாமலை நோக்கிய உங்களது பயணம் தொடங்குகிறது.

4. திருவண்ணாமலை அடைந்து அண்ணாமலையாரை வழிப்பட்ட பின்னர், மாலை கிரிவலத்தை துவங்கலாம்.

5. கிரிவலம் முடித்து அனைவரும் வந்த பின்னர், நீங்கள் அங்கிருந்து சென்னை அழைத்து செல்லப்படுவீர்கள்.

6. திருவல்லிக்கேணி TTDC அலுவலகத்தில் இருந்து கிளம்பும் உங்கள் யாத்திரை மறு நாள் காலை 6:00 மணியளவில் அதே இடத்தில் முடிவடைகிறது.

7. https://ttdconline.com/tourname.do என்கிற அதிகாரப்பூர்வ இணையத்தள முகவரியில் இதற்கான டிக்கெட்டுகளை இப்போதே புக் செய்யுங்கள்!

More News

    Read more about: thiruvannamalai travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+