Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் வெனிஸ் - உதய்பூர்

இந்தியாவின் வெனிஸ் - உதய்பூர்

இரண்டாம் மகாராணா உதய் சிங் என்னும் மன்னரால் 1559ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் ராஜஸ்தானில் இருந்து 403கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மேவார் அரசின் தலை நகராக விளங்கிய இந்நகரம் 'மேவாரின் அணிகலன்' என்னும் புனைப்பெயருடன் அழைக்கப்பட்டிருக்கிறது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரிகள், அற்புதமாக கட்டப்பட்ட அரண்மனைகள், கோயில்கள் என ஒரு சிறந்த சுற்றுலாத்தலத்திற்க்கான அனைத்து அம்சங்களும் இங்கே உள்ளன.

உதய்பூர் அரண்மனை:

புகைப்படம்: Dennis Jarvis

ராஜஸ்தானில் உள்ள அரண்மனைகளில் வைத்து அளவில் மிகப்பெரியதாகவும், சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் அரண்மனையாகவும் இருக்கிறது இந்த உதய்பூர் அரண்மனை. ஒரு அரண்மனையாக இல்லாமல் மகாராணா உதய் சிங் மற்றும் அவருக்கு பின் வந்த அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட பல அரண்மனைகளின் வளாகமாகவே இந்த உதய்பூர் அரண்மனை இருக்கிறது. இந்த அரண்மனை வளாகத்தினுள் இருக்கும் ஜகதீஷ் மந்திர் என்கிற ஜெகன்னாதர் கோயில் இந்திய-ஆரிய கட்டிடக்கலையின் அற்புதக்கலவையாக விளங்குகிறது. மேலும் இதனுள்ளே அருங்காட்சியகம், பூந்தோட்டம், மன்னர் காலத்தில் வரையப்பட்ட நுணுக்கமான ஓவியங்களின் காட்சியகம் போன்றவை உள்ளன. யானை சவாரி செய்தபடி இந்த அரண்மனையில் உலா வருவது மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

ஷஹிளியோன்-கி-பாரி:

புகைப்படம்: Terry Feuerborn

உதய்புரில் உள்ள அழகு பொருந்திய மற்றொரு இடம் தான் ஷஹிளியோன்-கி-பாரி என்னும் தோட்டம். உதைபுரின் மகாராணிக்கு சேவை புரியவந்த 48 பணிப்பெண்கள் ஓய்வு எடுக்க உதய்பூர் அரசர் மகாராணா போபால் சிங் என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த தோட்டத்தினுள் தாமரைக்குளங்கள், பளிங்கு கல்லினால் செய்யப்பட்ட நடைபாதைகள், யானை வடிவிலான ஊற்று போன்றவை இருக்கின்றன. இந்த ஊற்றின் சிறப்பம்சம் யாதெனில் இந்த ஊற்றில் தண்ணீர் வரும் ஒவ்வொரு முகப்பின் வழியாகவும் வெவ்வேறு ஒலி எழுப்பும்படி இது வடிவமைக்கப்பட்டிருகிறது. இதனுள் அரசர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களடங்கிய சிறு அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. உதய்பூர் செல்லும் அனைவரும் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய இடம் இது.

பதெஹ் சாகர் ஏரி:

புகைப்படம் : Souvik Das Gupta

உதய்புரில் உள்ள ஏரிகளில் மிக அழகானதாக இது வர்ணிக்கப்படுகிறது. 1680களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியினுள் மூன்று சிறிய தீவுகள் உள்ளன. ஒரு தீவில் நேரு பூங்காவும், வனவிலங்கு காட்சியகமும் உள்ளது. மற்றறொரு தீவினுள் நவீனமான 'Water-Jet' நீருற்றுடன் கூடிய பூங்கா ஒண்டு அமைந்திருகிறது. மூன்றாவது தீவில் உதய்பூர் வான் ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் 'ஹர்ஷலி அமவஷ்ய மேளா' என்னும் திருவிழா இந்த ஏரியின் கரையில் கொண்டாடப்படுகிறது.

குலப் பாக்:

இந்தியாவின் வெனிஸ் - உதய்பூர்

புகைப்படம்: Ian Armstrong

உதைப்பூரின் மிகப்பெரிய தோட்டமான இந்த குலப் பாக் 1878ஆம் ஆண்டு மகாராண சாஜ்ஜன் சிங் என்பவரால் துவங்கப்படதாகும். இதனுள் இந்தியப்பெருங்கண்டத்தின் நான்காவது பெரிய வனவிலங்கு காட்சியகமும் அமைந்திருக்கிறது. கருஞ்சிறுத்தை, நெருப்புகோழி போன்ற அரியவகை விலங்குகள் இங்கு காட்சிக்கு கிடைக்கின்றன. மேலும் ஏராளமான வகையான ரோஜா மலர்கள் இந்த தோட்டத்தில் உள்ளன. இதனுள் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தில் கி.மு 3 நூற்றாண்டு முதல் கி.பி 17 நூற்றாண்டு வரையிலான பல்வேறு அறிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுடன் உதய்பூர் சென்றால் நிச்சயம் இங்கு சென்று வர வேண்டும்.

உதய்பூர்- எப்படி அடையலாம்?

உதய்பூர் அருகில் அமைந்திருக்கும் விமான நிலையம் மகாராணா பிரதாப் விமான நிலையம் ஆகும். இது உதைபுரில் இருந்து 20கி.மீ தொலைவில் உள்ளது. உதய்பூர் மும்பை, டெல்லி, ஜெய்பூர், இந்தூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பரவலாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

More News

    Read more about: udaipur city palace rajasthan
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+