தமிழ்நாட்டின் வடக்கு முனையான சென்னையில் இருந்து, தெற்கே உள்ள மூன்று கடல்கள் சந்திக்கும் இடமான கன்னியாகுமரி வரை செல்லும் சாலைப் பயணம் என்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். இந்த 700 கிலோமீட்டர் பயணத்தில் இயற்கை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ருசிகரமான உணவுகள் நிறைந்துள்ளன. வாருங்கள், இந்த அற்புதமான பயணத்தை எந்த வழியாக மேற்கொண்டால் சுவாரஸ்யமாக, மறக்க முடியாத அனுபவமாக மாற்ற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிறந்த பாதைகள்
தேசிய நெடுஞ்சாலை 32 (NH32): சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் சாலை நேரடியான மற்றும் பராமரிக்கப்பட்ட பாதை ஆகும். சென்னை - விழுப்புரம் - திருச்சி - மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி வழியாக இந்த தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
கடற்கரை சாலை: சென்னை - புதுச்சேரி - கடலூர் - காரைக்கால் - நாகப்பட்டினம் - ராமேஸ்வரம் - தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி. இது சற்று நீளமான பாதை என்றாலும், கடற்கரையோரமாகவே பயணிப்பதால் கடலின் அழகிய காட்சிகளும் கடலோர கிராமங்களும் நிறைந்துள்ளன.
மலைப்பாதை: சென்னை - வேலூர் - சேலம் - கொடைக்கானல் - தேனி - மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி. இந்த பாதையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய காட்சிகளைக் காணலாம்.

முக்கிய சுற்றுலா தலங்கள்:
சென்னை டூ மதுரை வரை (450 கிமீ)...
- மாமல்லபுரம் (60 கிமீ): உலக பாரம்பரிய தலமான கடற்கரைக் கோயில்கள், ஐந்து ரதங்கள், அர்ஜுனனின் தபஸ்.
- புதுச்சேரி (170 கிமீ): ஆன்மீக நகரமான அரோவில் மற்றும் அழகிய பிரெஞ்சு காலனி கட்டிடக்கலை.
- சிதம்பரம் (250 கிமீ): புகழ்பெற்ற நடராஜர் கோயில், ஆயிரம் கால் மண்டபம்.
- தஞ்சாவூர் (350 கிமீ): பெரிய கோயில், ராஜராஜ சோழன் கட்டிய பிரமாண்டமான சிவன் ஆலயம்.
- திருச்சி (380 கிமீ): மலைக்கோட்டை, தாயுமானவர் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோவில்

மதுரை டூ கன்னியாகுமரி வரை (250 கிமீ)...
- மதுரை: தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், அழகர்கோவில்
- ராமேஸ்வரம்: பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோயில், ராமர் பாலம், தனுஷ்கோடி
- திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில்
- குற்றாலம்: "தென்னிந்தியாவின் ஊட்டி" என அழைக்கப்படும் இந்த இடத்தில் அழகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
- கன்னியாகுமரி: மூன்று கடல்கள் சந்திக்கும் இடம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், குமரி அம்மன் கோவில், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காணும் கடற்கரை.
பயணத்திற்கான குறிப்புகள் :
- சிறந்த பயண காலம்: நவம்பர் முதல் பிப்ரவரி வரை. கோடை காலத்தில் (மார்ச் - ஜூன்) வெப்பநிலை 40°C ஐ தாண்டும்.
- பயண நேரம்: முழு பயணத்திற்கு குறைந்தபட்சம் 5-7 நாட்கள் ஒதுக்குங்கள். அவசரப்படாமல் ஒவ்வொரு இடத்தையும் ரசித்து பாருங்கள்.
- உணவு: சாலையோர உணவகங்களில் உண்பதை தவிர்க்காதீர்கள். வீட்டு சமையல் போன்ற சுவை உங்களை மயக்கும். முருங்கக்காய் சாம்பார், கருப்பட்டி அல்வா, பருப்பு பாயசம், கோழி சுக்கா, நெல்லை இருட்டுக்கடை அல்வா போன்ற உணவுகளை முயற்சிக்கவும்.
- தங்குமிடம்: முன்பதிவு செய்வது நல்லது. காலனி காலத்து அரண்மனைகள், பாரம்பரிய வீடுகள், நவீன ஹோட்டல்கள் என பல வகையான தங்குமிடங்கள் உள்ளன.
- கலாச்சார குறிப்புகள்: கோயில்களுக்குள் செல்லும்போது மரியாதையான உடைகளை அணிய வேண்டும். கோயில்களில் புகைப்படம் எடுக்க அனுமதி பெறுங்கள்.
பாதுகாப்பு குறிப்புகள் :
- எப்போதும் உங்கள் வாகனத்தில் போதுமான எரிபொருள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- குடிநீர் பாட்டில்கள், முதலுதவி பெட்டி மற்றும் அவசர தொலைபேசி எண்களை வைத்திருங்கள்.
- இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும்.
- சிறிய நகரங்களில் UPI மற்றும் டெபிட் கார்டுகள் எல்லா இடங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே ரொக்கப் பணம் வைத்திருங்கள்.
- தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து தெற்கு வரை செல்லும் இந்த பயணம் உங்களுக்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு, கலாச்சாரம், சமையல் கலை மற்றும் இயற்கை அழகை அனுபவிக்க வாய்ப்பளிக்கும். ஒவ்வொரு இடமும் தனித்துவமான அனுபவங்களை வழங்குகிறது.
- உங்கள் கார் ரேடியோவில் இளையராஜா பாடல்கள் ஒலிக்க விடுங்கள், நீண்ட சாலைகளில் சென்று கொண்டிருக்கும்போது வயல்வெளிகள், மலைகள், கடற்கரை மற்றும் பசுமையான நிலப்பரப்புகளின் அழகை ரசியுங்கள். வாழ்நாளில் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய பயணம் இது!



Click it and Unblock the Notifications






