» »நித்யானந்தா ஆசிரமத்தில் சிவராத்ரி அன்று என்ன நடக்குது தெரியுமா?

நித்யானந்தா ஆசிரமத்தில் சிவராத்ரி அன்று என்ன நடக்குது தெரியுமா?

By: Udhaya

சிவராத்திரி என்பது இந்துக்களுக்கான பண்டிகை என்று பெரும்பாலும் பேசப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறது. இந்துக்களின் கடவுள் என்று சொல்லப்படும், சைவ கடவுளான சிவபெருமானின் புனித தினமாக இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். நாடுமுழுவதும் இந்த விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு சிவன் கோயில்களில் இது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். கோயில்களில் மட்டுமல்லாது, மடங்களிலும், ஆசிரமங்களிலும் இது கொண்டாடப்பட்டு வருகிறது. நித்யானந்தா ஆசிரமத்தில் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அது எப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள். 

நித்யானந்த ஆசிரமம்

நித்யானந்த ஆசிரமம்

நித்யானந்த ஆசிரம இணையத்தின் தரவுகளின் படி, இந்த ஆசிரமம், மக்களின் குறைகளை நிறைகளாக்க, குருவின் தலைமையில் ஒன்றிணைந்து வாழும் ஆன்மீக புனித தலம் என்று அழைக்கப்படுகிறது.

தியானமும், மனத்தைக் கட்டுபடுத்தும் கலையும் இங்குள்ளவர்களுக்கு கைவந்தகலையாக சொல்லித்தரப்படுகிறது. தொடர் பயிற்சிகளின்மூலம் ஆன்மீக அறிவை வளர்ப்பதே இவர்களின் நோக்கம் என்று கூறுகிறார்கள் நித்யானந்தாவின் சீடர்கள்.

Official site

 நித்யானந்த தியானபீடம் எங்குள்ளது

நித்யானந்த தியானபீடம் எங்குள்ளது

கர்நாடக தலைநகரம் பெங்களூருவில் மைசூர் சாலையில்,கள்ளுகோபஹல்லி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆசிரமத்தின் தலைமை பீடம்.

இது பெங்களூரு மத்திய பேருந்து நிலையமான மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 275ல் சென்றால் 1 மணி நேரத்துக்கும் சற்று அதிகமான நேரத்தில் சென்று அடையமுடியும்.

மெஜஸ்டிக் நிலையத்திலிருந்து 225சி , 226ஒய் முதலிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Official site

எப்படி இணைவது

எப்படி இணைவது


இந்த ஆசிரமத்தில் இணைவதற்கான செயல்முறைகள் அவர்களது அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ளது. மேலும் இது ஆசிரமம் என்றாலும், சில சுற்றுலா அம்சங்கள் நிறைந்த பல இடங்கள் இதன் அருகாமையில் காணப்படுகின்றன.

Official site

வைத்ய சரோவர் ஆனந்த லிங்கம்

வைத்ய சரோவர் ஆனந்த லிங்கம்

21 அடி உயர ஆனந்த லிங்கம் இந்த ஆசிரமத்துக்கு மிக அருகிலேயே உள்ளது. இது ஒரு தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல அமைந்துள்ளது. இதன் நான்கு புறமும் நீரூற்று அமைக்கப்பட்டு சிவலிங்கத்தின் மேல் நீர் விழுவது போல காட்சியளிக்கிறது.

இது நவபாசான சிலை என்று கூறப்படுகிறது. நவபாசானம் என்பது ஒன்பது வகையான மூலிகைகளால் உருவாக்கப்பட்டது என்று பொருள். மேலும் இது 1008 அரிய மூலிகைகளையும் உள்ளடக்கியது என்றும் நம்பப்படுகிறது.

இந்த குளத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கி பிறவி பலனை அடையலாம் என்றும் நம்பப்படுகிறது.

தொட்ட ஆலத மர

தொட்ட ஆலத மர


கன்னட மொழியில் 'தொட்ட ஆலத மர' என்று அழைக்கப்படும் இந்த இராட்சஸ ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலமரம் பெங்களூரின் கெட்டோஹள்ளி என்ற கிராமப்பகுதியில் 3 ஏக்ரா இடத்தை அடைத்துக்கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இது 2000-ல் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது பல்வேறு மரங்கள் போல் தோற்றமளிக்கிறது. பெங்களூர்வாசிகளுக்கு மிகச் சிறந்த பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வரும் இந்த ஆலமரம் இருக்கும் இடத்திற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்தும், கே.ஆர். மார்க்கெட் பேருந்து நிலையத்திலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சுற்றுலாத் துறை இந்த இடத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு உணவகமும் ஏற்படுத்தியுள்ளது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

பெங்களூவிலிருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலமரம். பெங்களூருவின் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

முக்தம்மா கோயில், முக்தி நாக கோயில், முக்காத்தம்மா கோயில், கங்கம்மா கோயில், சனீஸ்வரா கோயில் ஆகியன இதற்கு அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களாகும்.

அருள்மிகு நித்யானந்தேஸ்வரா கோயில், பிலாடி

அருள்மிகு நித்யானந்தேஸ்வரா கோயில், பிலாடி

இந்த கோயில் நித்யானந்தேஸ்வரா கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது மைசூரு சாலையில் பிலாடி எனும் இடத்திலேயே அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு செல்பவர்கள் அதிக காஸ்மிக் எனர்ஜியை உணரலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது மனம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவல்ல புனித தலம் என்றும் நம்பப்படுகிறது. இதுவும் நித்யானந்தா ஆசிரமத்துக்கு அருகிலுள்ள கோயில் ஆகும்.

Official site

சுற்றிலும் அமைந்துள்ள கோயில்கள்

சுற்றிலும் அமைந்துள்ள கோயில்கள்


இந்த பகுதியைச் சுற்றிலும் எண்ணற்ற கோயில்களும், ஆன்மீகத் தளங்களும் அமைந்துள்ளன. மாயம்மா கோயில், கோபாலசாமி கோயில், பசவா கோயில், சன்னப்புராதோடி கோயில், மகாதேஸ்வரா சாமி கோயில் என நிறைய கோயில்கள் இந்த பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன.

ராமநகரம்

ராமநகரம்

பட்டு நகரம் என்று அழைக்கப்படும் ராமநகரம் பெங்களூரிலிரிந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ராமநகர மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கி வருகிறது. இது ஆசிரமத்திலிருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் மற்ற பகுதிகளை போலவே இதுவும் சோழ, மைசூர் மன்னர்களால் ஆளப்பட்ட நகரமே. எனினும் அமிதாப் பச்சன் நடித்த வெற்றிப் படமான ஷோலே இங்கு படம் பிடிக்கப்பட்ட பிறகுதான் ராமநகரம் புகழ் பெறத் ஆரம்பித்தது. சிவராமகிரி, சோமகிரி, கிருஷ்ணகிரி, யாத்ர ஜாகிரி, ரெவென்ன சித்தேஸ்வரா, சிடிலக்கல்லு, ஜால சித்தேஸ்வரா ஆகிய ஏழு கம்பீரமான மலைக் குன்றுகளாலும் ராமநகரம் சூழப்பட்டுள்ளது. ராமநகரத்தின் குன்றுகளில் காணப்படும் மஞ்சள் கழுத்து குயில்களும், நீண்ட மூக்கு கழுகுகளும் இயற்கை காதலர்களுக்கு காணக் கிடைக்காத காட்சியாக நிச்சயம் அமையும். கன்னட பாரம்பரிய கிராமிய கலைகளை பயிற்றுவித்து வரும் ஜனபத லோக்கா அமைப்பு ராமநகரத்தில் தான் இயங்கி வருகிறது.

சுற்றுலா

சுற்றுலா

ராமநகரம் பிரம்மாண்டமான மலைக் குன்றுகளால் சூழப்பட்டு, பெரிய பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதால் மலை ஏறுபவர்களுக்கு சிலுர்ப்ப்பூட்டும் சாகசப் பயணம் காத்திருக்கிறது. ராமதேவரபெட்டா, தென்கிங்கல்பெட்டா உள்ளிட்ட மலை ஏறும் இடங்கள் 1960-ஆம் ஆண்டிலிருந்தே பிரபலமானவை. சில இடங்கள் பழமை காரணமாக வலிமையற்று காணப்படுவதால் அங்கு மட்டும் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Vaibhavcho

 இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி

இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி

தோட்டத்து நகரத்தில் காணப்படும் பொழுதுப்போக்கு பூங்காவினுள் ஒன்றுதான் புதுமைமிக்க திரைப்பட நகரமாகும். இந்த திரைப்பட நகரமானது நகரத்தின் வெளிப்புறத்தில் மைசூருவிற்கு செல்லும் வழியில் 40 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த திரைப்பட நகரமானது கிட்டத்தட்ட 58 ஏக்கர்கள் காணப்பட 2008ஆம் ஆண்டு இது திறக்கப்பட்டது. இவ்விடமானது இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகிறது. முதலாம் பாகத்தில் பொழுதுப்போக்கு பூங்கா, அருங்காட்சியகம், சவாரிகள் என பலவும் காணப்படுகிறது. இரண்டாம் பாகமாக ஸ்டூடியோ மற்றும் திரைப்பட அகாடமி காணப்பட, திரைப்படங்களும், விளம்பரமென பலவும் இங்கே படம்பிடிக்கப்படுகிறது.

இங்கு நீர்வாழ் ராஜ்ஜியம், டைனோ பூங்கா, பேய் மாளிகை முதலியன முக்கியமாக காணவேண்டிய இடங்களாகும்.


PC: Rameshng

ரிசபாவதி அணைக்கட்டு

ரிசபாவதி அணைக்கட்டு

நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து பத்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அணைக்கட்டு. இதை 30நிமிட பயணத்தில் அடையலாம். இந்த அணை நீரானது மக்கள் உபயோகத்துக்கு உகந்ததாக அமைந்துள்ளது. குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் இந்த அணை நீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் இதற்கு அருகில் காலி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேய சாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

காலி ஆஞ்சநேயர் கோயில்

காலி ஆஞ்சநேயர் கோயில்

காலி ஆஞ்சநேய கோயில் 600 வருடங்கள் பழமையானதாகும். இது நித்யானந்தா பீடத்துக்கு சற்று தொலைவில் அமைந்திருந்தாலும், இந்த இடத்துக்கும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக சென்றடையலாம்.

வியாசர் என்பவரால், அமைக்கப்பட்டது இந்த கோயில் என்பது தொன்னம்பிக்கை.

உண்மையில் நித்யானந்தாவின் மடத்தில் என்னதான் நடக்கிறது?

உண்மையில் நித்யானந்தாவின் மடத்தில் என்னதான் நடக்கிறது?

காலை நான்கு மணிக்கு ஆகாடா எனும் பெயரில், யோகா மற்றும் உடற்பயிற்சி தியான நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடக்கின்றன.

பிரத்யாக்ஷா பாத பூசை எனும் பெயரில் ஒரு நிகழ்ச்சி தினமும் 6 மணிக்கு நடைபெறுகிறது.

காலை ஏழு மணிக்கு நித்யானந்தாவின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

எட்டுமணிக்கு நடைபெறும் ஷர்வ தர்ஷன் எனும் ஒரு சடங்கில் தனித்தனியாக அனைவரையும் ஆசீர் வதிக்கிறார் நித்யானந்தா.

காலை 10 30 மணிக்கு காலை பூசையும், மாலை 6.30 மணிக்கு மாலை பூசையும் நடைபெறுகிறது. இரவு எட்டுமணிக்கு குருபூசை நடைபெறுகிறது. இந்த பூசையில் நித்யானந்தாவின் சிஷ்ய பெண்கள் அவரை பூசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இரவு பத்துமணிக்கு பள்ளியறை பூசை நடைபெறுகிறது. இது தொடர்பான அனைத்து கருத்துக்களும் நித்யானந்த ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தே எடுக்கப்பட்டது.