Search
  • Follow NativePlanet
Share
» »டாப் 7 இந்திய அதிசயங்கள்

டாப் 7 இந்திய அதிசயங்கள்

உலக அதிசயங்களை பற்றி நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு இந்தியாவில் இருக்கும் அதிசயங்களை பற்றி நமக்கு தெரியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்றும் கூட நம்மால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு அறிவியல் மற்றும் கணித நுட்பத்துடன் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இத்தனை நாளும் அவற்றின் பெருமை பற்றி தெரியாமலேயே இருந்திருக்கிறோம். வாருங்கள், உலக அதிசயங்களுக்கு நிகராக இந்தியாவில் இருக்கும் அதிசய கட்டிடங்களை பற்றி அறிந்து கொள்வோம்.

காதலர் தின சிறப்பு சலுகையாக உள்நாட்டு விமானங்களில் 2000ரூ சிறப்பு தள்ளுபடி பெற்றிடுங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

ஒவ்வொரு தமிழனும் கர்வம் கொள்ளவேண்டிய பெருமை தாங்கி முக்கூடல் நகரில் வானுயர்ந்து நிற்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தமிழர் கட்டிடக்கலையின் உச்சம். இக்கோயிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. 1310ஆம் வருடம் மாலிக்கபூர் என்ற அரசனால் முற்றிலும் அழிக்கப்பட்ட இக்கோயில் பின்னர் வந்த திருமலை நாயக்கரால் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு நாம் தற்போது பார்க்கும் தோற்றத்தை அடைந்திருக்கிறது.

Photo:Denis

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

புவியியல் ரீதியாகவும் மதுரை நகரின் மையமாக இருக்கும் இக்கோயில் தான் உலகத்திலேயே மிக நீளமான கற்களால் ஆன கூரையை உடைய கட்டிடம் என்ற பெருமையும் கொண்டுள்ளது. சங்க கால தமிழ் இலக்கியங்களில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி தாமரை மலரில் இதழ்கள் அமைந்திருப்பதை போல வீதிகள் அமைந்திருந்ததாம். இப்படி பார்க்கும் போது ஹரப்பா, மொஹஞ்சதாரோ சிந்து சமவெளி நாகரிகத்தை காட்டிலும் தமிழர் நாகரிகம் மேம்பட்டதாய் இருந்திருக்க வேண்டும்.

Photo:Fabio Campo

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

இக்கோயிலின் மூலவர் பார்வதி தேவியின் ரூபமான மீனாட்சி அம்மன் உடையார் சுந்தரேஸ்வரருடன் வீற்றிருக்கிறார். கையில் கிளியுடன் பச்சை பட்டுடுத்தி மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும் அழகு விவரிக்க முடியாததாகும்.

இக்கோயில் வளாகத்தில் உள்ள நான்கு வாயிற் கோபுரங்களும் ஒரே போல கட்டப்பட்டிருக்கின்றன. அதே போன்று இக்கோயிலினுள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சில தூண்களை தட்டினால் இசை ஒலிக்கிறது. இது போன்ற பல அறிவியலுக்கும் விளங்காத புதிர்கள் இதனுள் இருப்பதாலேயே இந்தியாவின் அதிசயங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்ந்தேடுக்கபப்ட்டிருக்கிறது.

photo:Esme Vos

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

எப்படி அடைவது மதுரையை :

பெங்களுரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. ரயில் மார்க்கமாகவும் சென்னை, மும்பை, கொல்கத்தா,மைசூர், மற்றும் நகரங்களுடனும் சிறப்பான ரயில் சேவைகளால் மதுரை மாநகரம் இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சி மற்றும் பெங்களூரிலிருந்து தனியார் சொகுசு போக்குவரத்து சேவைகளும் அதிக அளவில் மதுரைக்கு இயக்கப்படுகின்றன.

Photo:Arian Zwegers

கோம்மடீஸ்வரா சிலை, கர்நாடக :

கோம்மடீஸ்வரா சிலை, கர்நாடக :

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் ஷரவணபெலகோலா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த சிலை தான் உலகத்திலேயே ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிக உயரமான சிலையாகும்.57 அடி உயரமுள்ள இந்த சிலை போதன்பூர் அரசனின் மகனான 'பாஹுபலி' என்பவருடையதாகும்.

Photo:Kumara Sastry

கோம்மடீஸ்வரா சிலை, கர்நாடக :

கோம்மடீஸ்வரா சிலை, கர்நாடக :

'ஆதிபுராணா' என்றஜைன மத குறிப்புகளின் படி போதன்பூர் அரசனின் மகனான 'பாஹுபலி' தன் ராஜ்ஜியம், சொத்து, குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு கடும் தவம் புரிந்து மோட்சம் அடைந்ததால் ஜைன மதத்தின் முக்கிய துறவிகளுள் ஒருவராக கோம்மடீஸ்வரா இருக்கிறார். இதனாலேயே கங்கா வம்சத்தின் படை தளபதியான சாமுண்டர்யாவால் 978-993ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் இந்த மிகப்பெரிய ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டுள்ளது.

Photo:Kumara Sastry

கோம்மடீஸ்வரா சிலை, கர்நாடக :

கோம்மடீஸ்வரா சிலை, கர்நாடக :

எங்கே அமைந்திருக்கிறது இந்த சிலை:

பெங்களுருவில் இருந்து 158 கி.மீ தொலைவில் ஹாசன் மாவட்டத்தில் சன்னராயபட்டனா என்ற இடத்திற்கு பக்கத்தில் ஷரவணபெலகோலா என்னும் இடத்தில் இந்த பாஹுபலி சிலை அமைந்திருக்கிறது. கர்நாடகாவின் முக்கிய ஆன்மீக ஸ்தலமான இங்கே நிச்சயம் ஒருமுறை சென்று இதன் பிரம்மாண்டத்தை பார்த்திடுங்கள்.

Photo:Kumara Sastry

கோனார்க் சூரிய கோயில் :

கோனார்க் சூரிய கோயில் :

கலிங்க தேசத்தின் பேரற்புதம் இந்த கோனார்க் சூரிய கோயில். சூரிய கடவுளை சிறப்பிக்கும் பொருட்டு கிழக்கு கங்கை வம்சத்தை சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவனால் 13ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மிகத்துல்லியமான கணித அளவுகளின் படி கட்டப்பட்ட கோயில் என்ற சிறப்பு இந்த சூரிய கோவிலுக்கு உண்டு.

photo:PARSHOTAM LAL TANDON

கோனார்க் சூரிய கோயில் :

கோனார்க் சூரிய கோயில் :

சூரிய பகவானின் தேர் போன்ற வடிவில் இருக்கும் இக்கோயிலில் வருடத்தின் 12 மாதங்களை குறிக்கும் பொருட்டு 3.மீ சுற்றளவு உள்ள 12 ஜோடி தேர் சக்கரங்களும், வாரத்தின் 7 நாட்களை குறிக்கும் வகையில் 7 குதிரைகளும் அத்தனை நேர்த்தியாக கற்களில் வடிக்கப்பட்டுள்ளன. இதன் துல்லியம் எந்த அளவுக்கு என்றால் ஓவ்வொரு நாளின் சூரிய உதயத்தின் போதும் சூரிய கதிர்கள் நேரடியாக கருவறையினுள் விழும்படி கட்டப்பட்டுள்ளது.

Photo:PARSHOTAM LAL TANDON

கோனார்க் சூரிய கோயில் :

கோனார்க் சூரிய கோயில் :

தற்போதிருக்கும் கோயிலுக்கு பின்புறம் 70.மீ உயரமுள்ள மிகப்பெரிய விமான கோபுரம் ஒன்று இருந்திருக்கிறது. அது பின்னர் காலப்போக்கில் சிதைந்து போயிருக்கிறது. அதேபோல கஜுராஹோவில் இருப்பது போன்ற மைதுன சிற்பங்களையும் இந்த கோயில் சுவர்களில் நாம் பார்க்கலாம்.

Photo:Dinudey Baidya

கோனார்க் சூரிய கோயில் :

கோனார்க் சூரிய கோயில் :

கோனார்க் சூரிய கோயிலை எப்படி அடைவது ?

ஒடிஷா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் சாலைப்போக்குவரத்து வசதிகளால் கொனார்க் நகரம் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து கொனார்க் மற்றும் பூரி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு பேருந்து சேவைகள் உள்ளன. பூரி மற்றும் புபனேஷ்வர் ரயில் நிலையங்கள் கொனார்க் நகரத்திற்கு அருகில் உள்ளன.

Photo:designadda

ஹர்மந்திர் சாஹிப் - பஞ்சாப் தங்க கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பஞ்சாப் தங்க கோயில் :

சீக்கியர்களின் புனித கோயிலாக கருதப்படும் பொற்கோயில் பஞ்சாபின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று. 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த கோயிலினுள்ளே தான் சீக்கியர்களின் புனித நூலான 'ஆதி கிரந்தம்' வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் பக்தி கீதங்கள் ஒலித்தபடியே இருக்கும் இக்கோயிலுக்குள் சர்வ மதத்தினரும் செல்லலாம்.

ஹர்மந்திர் சாஹிப் - பஞ்சாப் தங்க கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பஞ்சாப் தங்க கோயில் :

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்த கோயிலின் மேல்தளப்பகுதியை 400 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளால் போர்த்தினார். அதற்கு பிறகே இது தங்கக்கோயில் என்று அழைக்கப்படுகிறது .

ஹர்மந்திர் சாஹிப் - பஞ்சாப் தங்க கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பஞ்சாப் தங்க கோயில் :

ஹர்மந்திர் சாஹிபினுள் செல்லும் அனைவரும் தங்கள் தலையை துணியால் மூடியிருக்க வேண்டும். அதே போன்று காலனி அணிந்திருக்கவோ, எவ்விதமான போதை பொருட்களை உட்கொண்டிருக்கவோ கூடாது. பரவசமூட்டும் தெய்வீக அனுபவத்தை பெறவும், சீக்கியர்களின் மத வழக்கங்களை அறிந்து கொள்ளவும் இந்த பொற்கோயிலுக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.

நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் :

நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் :

இந்தியர்களின் நாகரீக வளர்ச்சிக்கும், அறிவின் வீச்சுக்கும் மிக சிறந்த உதாரணமாக திகழ்வது பீகாரில் இருக்கும் நாலந்தா பல்கலைக்கழகம் ஆகும். பீகார் தலைநகரான பாட்னாவில் இருந்து 95 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த பல்கலைக்கழகம் 5ஆம் நூற்றாண்டில் இருந்து 12ஆம் நூற்றாண்டு வரை செயல்பட்டிருக்கிறது.

Photo:Hideyuki KAMON

நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் :

நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் :

வான சாஸ்திரம், தனுர்வேதம், அர்த்தசாஸ்திரம், மருத்துவம் என ஏராளமான பாடப்பிரிவுகள் இருந்துள்ளன. சீனா, திபெத், கொரியா, மத்திய ஆசிய என பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து இங்கே பாடம் படித்திருக்கின்றனர். 10,000 மாணவர்களும், 2000 ஆசிரியர்களும் இங்கே தங்கி கல்வி கற்றும், போதித்தும் உள்ளனர். அரிய சுவடிகள் அடங்கிய நூலகமும் இங்கே இருந்துள்ளது.

Photo:Parthiv Haldipur

நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் :

நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் :

1200ஆம் ஆண்டு வாக்கில் முகம்மது பின் கில்ஜி என்ற துருக்கிய படைத்தளபதியால் சூறையாடப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது நாலந்தா பல்கலைக்கழகம். இன்று சென்றாலும் இதன் சிதலமடைந்த பகுதிகளை நாம் காண முடியும். உலகின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையே இந்தியாவின் தவிர்க்க முடியாத அதிசயங்களுள் ஒன்றாக இதுவும் திகழ காரணமாகிறது.

Photo:Wonderlane

நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் :

நாலந்தா பல்கலைக்கழகம், பீகார் :

எப்படி அடைவது ? :

நாலந்தா, சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ராஜ்கீர், பாட்னா, புத்தகயா, கயா மற்றும் இதர முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் நாலந்தாவை அடையலாம். பீஹார் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பாட்னாவிலுள்ள தனது தலைமையகத்திலிருந்து நாலந்தா மற்றும் இதர சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை ஏற்பாடு செய்கிறது.

Photo:Parthiv Haldipur

கஜுராஹோ, மத்திய பிரதேசம் :

கஜுராஹோ, மத்திய பிரதேசம் :

மிக மிக தவறாக புரிந்து கொள்ளப்படும் இடங்களில் கஜுராஹோ கோயிலும் ஒன்று. மைதுன சிற்பங்களால் நிறைந்திருக்கும் இக்கோயில் வெறுமனே ஆபாச சின்னமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. உண்மையில் அக்கால மக்கள் காதலையும் காமத்தையும் கொண்டாடுபவர்களாக இருந்திருக்கின்றனர். காதலர் தினத்தையே எதிர்த்துக்கொண்டிருக்கும் போது காமன் விழா, இந்திர விழா என கொண்டாடியிருக்கின்றனர்.

Photo:sabamonin

கஜுராஹோ, மத்திய பிரதேசம் :

கஜுராஹோ, மத்திய பிரதேசம் :

ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சந்தேளர்கள் என்ற அரச குலத்தை சேர்ந்தவர்களால் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு கோயிலாக இல்லாமல் 85 கோயில்களை உள்ளடக்கிய மிகப்பெரிய கோயில் வளாகமாக இருந்திருக்கிறது. பின்னர் நடந்த படையெடுப்புகளில் அவை அழிக்கப்பட்டு இன்று 20க்கும் குறைவான கோயில்களே எஞ்சியிருக்கின்றன. இந்த கோயில்களை பார்க்கும் போது இந்து - ஜைன மதங்களின் கூட்டு கலவையாகவே இவை கட்டப்பட்டிருக்கின்றன.

Photo:Arian Zwegers

கஜுராஹோ, மத்திய பிரதேசம் :

கஜுராஹோ, மத்திய பிரதேசம் :

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டர்பூர் மாவட்டத்தில் இந்த கஜுராஹோ கோயில் வளாகம் அமைந்திருகிறது. இங்குள்ள கற்சிற்பங்களில் காணப்படும் காதற்கலை சித்தரிப்புகளில் இயற்கையின் ஆதி அம்சமான நிர்வாணம் மட்டுமன்றி புராதன இந்திய நாகரிகத்தின் உளவியல் பார்வையும் பொதிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

Photo:Christopher Kray

கஜுராஹோ, மத்திய பிரதேசம் :

கஜுராஹோ, மத்திய பிரதேசம் :

எப்படி அடைவது ?

எல்லா போக்குவரத்து மார்க்கங்கள் மூலமாகவும் கஜூராஹோவுக்கு சுலபமாக பயணம் மேற்கொள்ளலாம். விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலைய வசதிகள் போன்ற அனைத்தையும் இந்த சுற்றுலாத்தலம் கொண்டிருக்கிறது.
இந்த வரலாற்றுத்தலத்தை இஷ்டம் போல் சுற்றிப்பார்க்க டாக்சிகள், ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவை வாடகைக்கு கிடைக்கின்றன. குளிர்காலம் அல்லது குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் கஜூராஹோவுக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

Photo:Christopher Kray

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

அதிசயங்களின் வரிசையில் தாஜ் மஹால் இல்லாமல் எப்படி?. சந்தேகமே இல்லாமல் உலகத்தில் இருக்கும் மிக அழகான கட்டிடம் என்றால் அது காதலின் சின்னமான இந்த தாஜ் மஹால் தான். முகலாய மன்னன் ஷாஹ் ஜெஹானால் கட்டப்பட்ட இந்த அற்புத கட்டிடம் ஐந்து நூற்றாண்டுகளை கடந்தும் அதே அழகுடன் ஜொலிக்கிறது.

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

மத்திய ஆசியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களால் இளைத்து இளைத்து கட்டப்பட்ட இந்த தாஜ் மஹால் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இதனுள்ளே முகலாய அரசர் ஷாஹ் ஜஹானின் விருப்பத்திற்குரிய மனைவியான மும்தாஜின் சமாதி அமைந்திருக்கிறது.

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

காதல் ஒருவரை எந்த எல்லைக்கும் அழைத்து செல்லும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த தாஜ் மஹால் ஆகும். இங்கு நாம் கடிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால் தற்போதிருக்கும் தாஜ்மஹாலுக்கு எதிரில் கிரனைட் கற்களால் கருப்பு தாஜ்மஹால் ஒன்றையும் கட்ட நினைத்து அதற்காக அஸ்திவாரத்தையும் போட்டிருக்கின்றனர். ஏதோ காரணத்தினால் அதி கை கூடவில்லை.

More News

Read more about: wonders tajmahal madurai punjab
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+