» »உலக பயணிகளைக் கவர்ந்திழுக்கும் 5000 அடி உயர பசுமை டிரெக்கிங்க் - அப்பப்பா எவ்ளோ பச்சை!

உலக பயணிகளைக் கவர்ந்திழுக்கும் 5000 அடி உயர பசுமை டிரெக்கிங்க் - அப்பப்பா எவ்ளோ பச்சை!

Written By: Udhaya

குமார பர்வதமலை டிரெக்கிங் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா. டிரெக்கிங் மீது ஆசை கொண்டவர்களுக்கு பெரும்பாலும் இது அறியப்பட்ட பெயராகத்தான் இருக்கும். இல்லையென்றால் புஷ்பகிரி மலை என்ற பெயரில் அறியப்பட்டிருக்கலாம். பெங்களூருவிலிருந்து அருகிலுள்ள இந்த மலைக்கு ஒரு சிறப்பு டிரெக்கிங் பயணம் செய்யலாமா?

இதற்கான காலம் இரண்டு முழு நாட்கள். தங்கும் வசதி உட்பட மற்ற பல வசதிகள் இங்கு கிடைக்கின்றன. சரி பயணத்தை தொடங்கலாமா..

சென்னை - பெங்களூரு

சென்னை - பெங்களூரு

சென்னையிலிருந்து பெங்களூரு விமானம் மூலம் 50 நிமிடத்திலும், பேருந்துகள் மூலம் ஏறக்குறைய 5 முதல் 6 மணி நேரங்களிலும் வந்தடையும் தொலைவில் அமைந்துள்ளது.

ரயில்கள் மூலம்

ரயில்கள் மூலம்


பெங்களூருவுக்கு சென்னையிலிருந்து தினசரி ரயில் வசதிகளும் உள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து பெங்களூரு சிட்டி சந்திப்பு நிலையத்துக்கு சதாப்தி விரைவு வண்டி, கவுகாத்தி விரைவு வண்டி, டிப்ருகர்க் விரைவு வண்டி, பசவா விரைவு வண்டி ஆகியன உள்ளன.

யஸ்வந்த்பூருக்கு மதியம் இரண்டு நாற்பது மணிக்கு யஸ்வந்த்பூர் விரைவு வண்டி செல்கிறது. மேலும் வாரணாசி விரைவு வண்டி, காமாக்யா விரைவு வண்டி, முஷாப்பூர் விரைவு வண்டி ஆகியன உள்ளன.

சுய வாகனத்தில்...

சுய வாகனத்தில்...

ஒருவேளை பெங்களூருவுக்கு சுய வாகனத்தில் வந்தால், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் -ஓசூர் - பெங்களூர் வழித்தடத்திலும், திருவள்ளூர் - திருத்தணி - சித்தூர் - கோலார் - பெங்களூர் என இன்னொரு வழித்தடமும் உள்ளது.

பெங்களூருவிலிருந்து குமார பர்வதா மலை

பெங்களூருவிலிருந்து குமார பர்வதா மலை

பின் பெங்களூருவிலிருந்து பர்வதா மலைக்கு செல்லவேண்டுமென்றால், தேவராஜ் சாலையைத் தேர்ந்தெடுத்து பின் சாங்க்கி நெடுஞ்சாலை முதல் சிவி ராமன் சாலை வரை பயணிக்கவேண்டும். கொண்டன்தாரம்புராவை அடைந்தபிறகு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 75ஐத் தொடர்ந்து ஷெட்டிஹல்லி வரை பயணிக்க.... இதற்கு 2 மணி நேரங்கள் ஆகும்.

மாநில நெடுஞ்சாலை எண் 8ஐத் தொடர்ந்து சென்றால் குமாரபர்வதா மலைக்கு சென்றடையலாம். இதற்கு இன்னொரு 2 மணி நேரங்கள் எடுக்கும்.

 வழியில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

வழியில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

இஸ்கான் ஆலயம், கப்பன் பூங்கா, விதான சௌதா, லால் பாஹ் உள்ளிட்ட எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் போகும் வழியில் உள்ளன. மேலும் இன்னும் பல பயனுள்ள அனுபவங்களை இந்த சுற்றுலாவில் நாம் பெறலாம்.

ISKCON ஆலயம்:

ISKCON ஆலயம்:

உலகிலேயே மாபெரும் ISKCON ஆலயங்களை கொண்டிருக்கும் இடங்களுள் பெங்களூருவின் ISKCON ஆலயமும் ஒன்றாகும். கிருஷ்ண பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், ஹரே கிருஷ்ண மலையில் காணப்படுகிறது. இவ்வாலயம், 1997ஆம் ஆண்டு மது பண்டிட் தாசாவால் கட்டப்பட்டது.

PC: Shiva Shenoy

 கப்பன் பூங்கா:

கப்பன் பூங்கா:

பெங்களூரு பார்ப்பதற்கான இடங்களின் பங்களிப்பாக குறைவாகவே காணப்படுகிறது. இந்த நகரமானது வாழ்வதற்கு ஏற்றதாக அமைய, சுற்றுலா இடங்களை குறைவாகவே கொண்டிருக்கிறது. இருப்பினும், சில வழக்கமான விதமாக விதான் சௌதா, லால் பாஹ், கப்பன் பூங்கா, பெங்களூரு அரண்மனை, பென்னர்கட்டா தேசிய பூங்கா என பலவும் காணப்படக்கூடும்.

PC: Yair Aronshtam

 விதான சௌதா:

விதான சௌதா:


அழகிய கட்டிடமான விதான சௌதா, நியோ திராவிடக்கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடமானது கர்நாடகாவின் மாநில சட்டமன்றத்தை இருக்கையாக கொண்டிருக்க கெங்கல் ஹனுமந்தையாவால் கருத்தாக்கமும் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பிரதியாக விகாஷ் சௌதாவானது 2005 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட, இதன் இடைவெளியானது எளிதாகவும் அமைந்திருக்கிறது. கர்நாடகாவின் உயர் நீதிமன்றமானது விதான சௌதாவின் வலப்புறத்தில் அமைந்திருக்க, அழகுடன் கூடிய செங்கோட்டையில் நிகழ்ச்சி நிரல இதனை ‘அட்டார கச்சேரி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் இது கட்டப்பட, க்ரேக்க - ரொமானிய கட்டிடக்கலை பாணியிலும் ஈடுபாட்டுடன் காணப்படுகிறது.

PC: flickr.com

லால் பாஹ்:

லால் பாஹ்:

பெங்களூருவின் தெற்கில் காணப்படும் பிரசித்திப்பெற்ற தாவரவியல் தோட்டம் தான் லால்பாஹ். இங்கே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலரைக்கொண்டு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் தொகுக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் 1000 வகையான மலர்கள் காணப்படுகிறது. கப்பன் பூங்காவானது 300 ஏக்கர் இடத்தைக்கொண்டிருக்க, தாவரங்களும், மலர்களும் எண்ணற்ற அளவில் காணப்படுகிறது. இங்கே குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகளும் காணப்படுகிறது. இந்த பூங்காவில், ஷெஷாத்ரி ஐயர் நினைவக நூலகமும் காணப்படுகிறது. .

PC: Prasanth M J

குமார பர்வதா மலை

குமார பர்வதா மலை

குமார பர்வதா மலை கர்நாடகமாநிலத்தின் உயரமான மலைகளுள் ஒன்றாகும். இதன் உயரம் 5617 அடி அல்லது 1712மீ ஆகும். இது மொத்தமாக புஷ்பகிரி காட்டுயிர் பாதுகாப்பு காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இது சோம்வார்பேட்டை எனும் பகுதியில் அமைந்துள்ளது.

Charananasam

மலை ஏறலாமா?

மலை ஏறலாமா?


குடகு மலையின் வடக்கு பகுதி வழியாக மலை ஏறுவது சிறப்பானதாக அமையும் என்கிறார்கள் அனுபவசாலிகள். இது பெங்களூருவின் வீக்கெண்ட் டிரெக்கிங் பிளான்.. சரி போலாமா?

Sujay Kulkarni

அடர்ந்த காட்டுக்குள் பயணம்

அடர்ந்த காட்டுக்குள் பயணம்

பர்வதா மலையின் முக்கிய கவர்ச்சியே அடர்ந்த காடுகளும். அதனூடே நாம் செல்லும் பயணமும்தான். 7 கிமீ வரை நீளும் பச்சைப் பசேலென்ற அடர்ந்த காடு உங்களை நிச்சயம் பேசவைக்கும். அடடா.. இது உண்மையாவே பூமிதானா என்று....

Sujay Kulkarni

எச்சரிக்கை மற்றும் கவனம்

எச்சரிக்கை மற்றும் கவனம்


இந்த பாதையில் நீங்கள் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையோடு பணிக்கவேண்டும். சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் ஆபத்துதான். நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பொழுதுபோக்கு சிறப்பாக அமைந்தாலும், மிகக்கவனமாக இருக்கவேண்டியது ஒவ்வொருவரது கவனத்தில் இருக்கவேண்டும்.

Sujay Kulkarni -

எரிமலைப் பாறைகள்

எரிமலைப் பாறைகள்

இதன் 1.5கிமீ நீளமான பகுதிகளில் வெறும் பாறைகள் மட்டுமே இருக்கின்றன. அதுதான் மிகவும் ஆபத்தான பகுதியாக சுற்றுலாப்பயணிகள் கருதுகின்றனர். குழந்தைகளை மிகக்கவனமாக பார்க்கவேண்டும். முதன்முறையாக டிரெக்கிங் வருபவர்கள் கவனிக்கவேண்டியதும் கூட..

Sujay Kulkarni

 உங்களுக்கு பயனுள்ள விதத்தில் பயண வழிகாட்டி

உங்களுக்கு பயனுள்ள விதத்தில் பயண வழிகாட்டி

நீங்கள் ஒருவேளை திட்டமிடுதலில் சற்று பின்தங்கியுள்ளீரா.. கவலை வேண்டாம்.. நேட்டிவ் பிளானட் அந்த பொறுப்பை ஏற்கிறது. உங்களுக்கு உதவுகிறது. இப்படி திட்டமிடுங்கள்..

இரண்டு நாள் சுற்றுலா ஒன்று செல்ல மற்றொன்று இறங்க..

முதல் நாள்....

முதல் நாள்....

பெங்களூருவிலிருந்து கிளம்புங்கள். 270க்கும் சற்று அதிகமான கிமீ தூரம் பயணித்து சோம்வார்பேட்டை அடையுங்கள்.

இது அதிகம் கேள்விப்படாத டிரெக்கிங் என்பதால் உங்களுக்கு ரூட் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இதை பின்தொடருங்கள்.

அதிகாலையில் கிளம்பினால் சூரியன் உதிப்பதற்குள் பெங்களூருவிலிருந்து வெளியே வந்துவிடலாம். அதிகம் கூட்ட நெரிசல் இல்லாத போக்குவரத்தை கடந்து நெடுஞ்சாலைகளில் பயணித்துக் கொண்டே அந்த சூரியனின் மென்மையை அனுபவித்து சிலாகிக்கலாம்.

 புஷ்பகிரி காட்டுயிர்

புஷ்பகிரி காட்டுயிர்

புஷ்பகிரி காட்டுயிர் சரணாலயம் கர்நாடகமாநிலத்தின் குறிப்பிடத்தக்க காடுகள் ஆகும். நம் டிரெக்கிங் பயணம் முதலில் இம்மலையடிவாரத்தின் சாந்தமல்லிகார்ஜுனா கோயிலிலிருந்து ஆரம்பிக்கவிருக்கிறது.

சாந்தமல்லிகார்ஜுனா கோயில்

சாந்தமல்லிகார்ஜுனா கோயில்

இது மிகப் பழமையான கோயில் ஆகும். பொதுவாகவே அனைவருக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். கோயிலில் பயணத்தைத் தொடர்வது. இந்த கோயில் பழமையானது மட்டுமின்றி, அழகானதும் கூட.. இங்கு மலையேற்றம் நல்லபடியாக அமைய வேண்டிக்கொள்கிறார்கள்.

Samson Joseph

 பீடஹல்லி

பீடஹல்லி

தொடர்ந்து சென்றுகொண்டிருப்போம். அரைமணி நேரத்துக்கும் குறைவான பயணத்தின்போதே நமக்கு அடர்ந்த காடுகள் தெரியவரும். அங்கிருந்து பார்த்தால் சிகரம் தெரியும். உயரமான சிகரம் நல்ல வானிலையின்போது சிறப்பான தோற்றம் தரும். மழைமேகங்கள் சிகரங்களை மறைத்திருக்கவும் சில சமயங்கள் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இந்த மொத்த இடமும் புஷ்பகிரி மலைப்பகுதிகளுக்கு உட்பட்டதாகும்.

பர்வதா சிகரம்

பர்வதா சிகரம்

பீடஹல்லியிலிருந்து 7 கிமீ தொலைவில் பர்வதா சிகரம் அமைந்துள்ளது. இங்கு தொங்கும் பாலம் ஒன்றும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாலத்தில் ஒரே சமயத்தில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும்.

 அழகான மலையேற்றம்

அழகான மலையேற்றம்

இங்கு சென்று திரும்பியபின் உங்களுக்கே சொல்லத்தோன்றும், அழகான மலையேற்றம் என்று.. மலையேறி அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் புகைப்படங்களாக.. மீண்டும் இன்னொரு இடம் பற்றிய தகவல்களுடன் சந்திக்கலாம். நன்றி.. தொடர்ந்து இணைந்திருங்கள்.

Gaurav Kapatia

Read more about: bangalore travel trekking

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்