Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் ரூ.30 கட்டணத்தில் வந்தே பாரத் ஏசி ரயிலில் பயணிக்கலாம் தெரியுமா – விரைவில் தமிழ்நாட்டுக்குள் அறிமுகம்!!

வெறும் ரூ.30 கட்டணத்தில் வந்தே பாரத் ஏசி ரயிலில் பயணிக்கலாம் தெரியுமா – விரைவில் தமிழ்நாட்டுக்குள் அறிமுகம்!!

இனி நீங்கள் வெறும் ரூ.30 கொடுத்து வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? என்ன சொல்றீங்க? அந்த ரயிலில் டிக்கெட் காஸ்ட்லி ஆச்சே, எப்படி ரூ.30 க்கு டிக்கெட் கிடைக்கும், அதுவும் முன்பதிவு செய்யாமல் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மை தான்! வந்தே பாரத் ரயிலின் பட்ஜெட் வடிவமான நமோ பாரத் ரயிலில் நீங்கள் வெறும் ரூ.30 கொடுத்து பயணிக்கலாம். இந்த ரயிலின் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு முன்பதிவே தேவையில்லை. முற்றிலும் அன்ரிசர்வ்டு தான், நாம் எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம்!

இந்தியாவின் முதல் நமோ பாரத் விரைவு ரயில்

முன்பு வந்தே பாரத் மெட்ரோ என்று அழைக்கப்பட்ட இந்த ரயில் இப்போது நமோ பாரத் எனும் புதிய வடிவில், வந்தே பாரத் ரயிலில் உள்ளது போன்ற ஏசி, நாற்காலி, கழிவறைகள், தானியங்கி கதவுகளுடன் வருகிறது. ஆனால், இதில் நீங்கள் வந்தே பாரத் ரயிலில் செல்லும் அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. சமீபத்தில் அகமதாபாத்-புஜ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நமோ பாரத் ரயில் சென்னை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

செப்டம்பர் 16 இல் கொடியசைத்து துவங்கி வைத்த பிரதமர்

இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (செப்டம்பர் 16) கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, இந்திய ரயில்வே புஜ்-அகமதாபாத் வந்தே மெட்ரோவை நமோ பாரத் ரேபிட் ரயில் என்று பெயர் மாற்றியது. நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் - புனே, ஆக்ரா கான்ட் - பனாரஸ், துர்க் - விசாகப்பட்டினம், புனே - ஹுப்பள்ளி, வாரணாசியில் இருந்து டெல்லி செல்லும் முதல் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

vande bharat

5 மணி 45 நிமிடங்களில் இலக்கை அடையும் வேகம்

வந்தே மெட்ரோ எனப்படும் நமோ பாரத் விரைவு ரயில் அகமதாபாத் மற்றும் புஜ் இடையே இயக்கப்படும். மணிக்கு 110 கிமீ வேகத்தில் 360 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 45 நிமிடங்களில் கடக்கும், இது ஒன்பது நிலையங்களில் நிறுத்தப்படும். இந்த ரயில் புஜில் காலை 05:05 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத் சந்திப்பை 10:50 மணிக்கு வந்தடையும்.

குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.30 மட்டுமே

இந்த ரயிலின் குறைந்தபட்ச டிக்கெட் விலை ஜிஎஸ்டி உட்பட ரூ.30 மட்டுமே. இந்த ரயிலில் சுற்றுப்பயணத்தை முடிக்க விரும்பினால், அதிகாரிகளுக்கு ரூ.455 செலுத்த வேண்டும். மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள மற்ற உள்ளூர் ரயில் நெட்வொர்க்கை விட நமோ பாரத் விரைவு ரயில் டிக்கெட் விலை மிகவும் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில் இப்போது 17 செப்டம்பர் 2024 முதல் வசதிகளை வழங்குகிறது.

அப்படியே வந்தே பாரத் ரயிலின் வசதிகள்

இந்த ரயிலும் மற்ற மெட்ரோ ரயிலைப் போலவே செயல்படுகிறது, இது குறுகிய காலத்தில் குறுகிய தூர சேவைகளை வழங்குகிறது. இந்த ரயில் அகமதாபாத்தின் இன்டர்சிட்டியையும் இணைக்கிறது. இந்த ரயிலில் மொத்தம் 1,150 இருக்கைகள் கொண்ட 12 பெட்டிகள் உள்ளன. இந்த ரயில் முழுவதுமாக ஏர் கண்டிஷனிங் மற்றும் மாடுலர் இன்டீரியரைக் கொண்டுள்ளது. இதன் மூலம், மற்ற மெட்ரோ ரயில்களைப் போல மக்கள் மேன்மையை உணர முடியுnம்.

vande bharat ticket

தமிழ்நாட்டில் எந்த வழித்தடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்?

அகமதாபாத்-புஜ் இடையேயான 360 கிமீ தூரத்தை கடக்க வந்தே பாரத் ரயிலில் ரூ.1,000 க்கு மேல் ஆகும். ஆனால் இந்த ரயிலில் வெறும் ரூ.455 இல் நாம் இலக்கை அடைந்து விடலாம். அதாவது நாம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தூரத்தை இந்த கட்டணத்தில் அடைந்து விடலாம். நமோ பாரத் ரயிலில் வழங்கப்படும் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.30 ஆகும், அதாவது நீங்கள் சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.30 டிக்கெட்டில் பயணிக்கலாம். இந்த ரயில் தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் வேண்டும் என்று கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+