Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ் மாதங்கள் நமக்கு தெரியும் – தமிழ் ஆண்டுகள் 60, அதன் அர்த்தங்கள் என்ன தெரியுமா!

தமிழ் மாதங்கள் நமக்கு தெரியும் – தமிழ் ஆண்டுகள் 60, அதன் அர்த்தங்கள் என்ன தெரியுமா!

தமிழ் மாதங்கள் சித்திரை தொடங்கி பங்குனியில் முடிவடைகிறது எனவும், அந்த பனிரெண்டு மாதங்களும் நமக்கு தெரியும். ஆனால், தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் நமக்கு தெரியுமா? அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களும், சுழற்சி முறையில் அறுபது வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு வருடமும் வரும் தமிழ் ஆண்டின் பெயருக்கு ஏற்றார் போலவே அந்த ஆண்டு சுகமாகவோ, துக்கமாகவோ, பிரச்சினையாகவோ இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் பிறந்த ஆண்டு குரோதி. குரோதி என்றால் கடிந்திடு கோபமுறும் என்று அர்த்தம். அதாவது பகைக்கேடு என்று பொருள். இந்த ஆண்டும் அப்படித் தான் இருக்கும்! தமிழ் ஆண்டுகள் 60 இன் பெயர்களும், அதன் அர்த்தங்களும் இங்கே!

அறுபது வருடங்கள் உருவானது எப்படி?

அறுபது தமிழ் வருடங்கள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு இதிகாச கதை ஒன்று உள்ளது தெரியுமா? ஒரு முறை கிருஷ்ணர், நாரதரைத் தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். வழியிலே நீரோடை ஒன்றைக் கண்ட நாரதர், நீர் அருந்தச் சென்றார். முதலில் குளித்து விட்டு, நீரை அருந்துமாறு கிருஷ்ணர் கூறினார். ஆனால் இந்த கட்டளை யைப் புறக்கணித்து விட்டு நாரதர் குளிக்காமலேயே நீரை அருந்தினார். என்ன ஆச்சரியம் உடனே அவர் ஒரு அழகிய பெண்ணாக ஆகிவிட்டார். அங்கே கிருஷ்ண ரும் இல்லை ரதமும் இல்லை. நாட்டிலே சுற்றி அலைந்த பெண் உருவிலான நாரதர், ரிஷி ஒருவரின் ஆசிரமத்தை அடைந்தார்.

tamilinscriptions

பெண்ணாக மாறிய நாரதர்

சமாதியிலிருந்து மீண்ட ரிஷி, தன் எதிரே அழகிய பெண் நிற்பதைக் கண்டார். தன்னை சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுமாறு அவள் வேண்டவே, அவளையே மணந்தார். அந்தப் பெண்ணும் அறுபது பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஒரு நாள் அறுபது பிள்ளைகளும், கணவனான ரிஷியும் இறந்து விட்டனர். துக்கம் தாளாமல் கதறி அழுத பெண், ஈமக்கிரியைகளைக் கூட செய்ய முடியாத அளவில் மிகவும் சோர்ந்து போனாள். அதிபயங்கரப் பசி அவளை வாட்டியது.

எல்லாம் மாயை என்பதே அர்த்தம்

மாயையின் மகிமையை அறிய விரும்பிய நாரதர், காலத்திற்கு உருவம் கிடையாது. ஆனால் அந்த காலமே, மாயைக்கு உருவமாக இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அறுபது குண விசே ஷங்களையே அறுபது பிள்ளைகளான வருடங்கள் வெளிப்படுத்துகின்றன. சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள அறுபது படிக்கட்டுகளிலும் இந்த அறுபது தமிழ் வருடங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

tamilinscriptions old

அறுபது வருடங்களின் பெயர்களும் அர்த்தங்களும்

1. பிரபவ - உதயம்

2. விபவ - ஒப்பில்லா பெருமை

3. சுக்ல - ஒளி மிகுந்த வானத்தை போன்ற வெண்மை

4. பிரமோத - உவகை பொங்கும்

5. பிரஜாபதி - உருவாக்கும் நாயகன்

6. ஆங்கிரச - திருமிக்க தவமுனி

7. ஸ்ரீமுக - உளமேற்கும்

8. பவ - உள்ளம் உள்ளது காட்டும்

9. யுவ - இளமை எழிலுறும்

10. தாது - இதயம் உவந்து தரும்

11. ஈஸ்வர - இறைமை நிறைந்திடும்

12. வெகுதானிய - இல்லம் செழித்திடும்

13. பிரமாதி - தலைமை தாங்கிடும்

14. விக்ரம - தைரியம் நிலைத்திடும்

15. விருஷ - நிலையுற நின்றிடும்

16. சித்திர பானு - நிறைந்த சித்திகள் விளங்கும்

17. சுபானு - நன்மைகள் பெருக்கிடும்

18. தாரண - இளமை பூண்டிடும்

19. பார்த்திப - ஆளுமை கொண்டிடும்

20. வியய - செலவிட செயல் தரும்

21. ஸர்வஜித் - தொட்டது துலங்கும்

22. சர்வதாரி - அணியெல்லாம் பூண்டிடும்

23. விரோதி - கெட்டது விரட்டிடும்

24. விக்ருதி - கேடுற்ற எழில்

25. கர - செயல் திறமுறும்

26. நந்தன - சேயென கொஞ்சலுறும்

27. விஜய - நல்வருகை தந்திடும்

28. ஜய - நல்வெற்றி தந்திடும்

29. மன்மத - காதலுற கவர்ந்திடும்

30. துர்முகி - வெம்மை காய்ந்திடும்

31. ஹே விளம்ப - ஆடகப் பொன் போலும் நற்செயல்

32. விளம்பி - நாடலுறு சொல் செயல்

33. விகாரி - நளினமுறு அழகின் திரிபு

34. சார்வரி - எல்லையில்லா இன்ப ஒளி

35. பிலவ - குகையுள் தோன்றிடும்

36. சுபகிருது - வகையுறு நலமே வளைந்திடும்

37. சோபகிருது - வடிவுறு எழில் நிறைந்திடும்

38. குரோதி - கடிந்திடு கோபமுறும்

39. விஸ்வாவசு - படிந்திடும் அன்பில் பழகிடும்

40. பராபவ - வடிந்திடும் புகழில் வந்திடும் இகழ்

41. பிலவங்க - நீரை கடக்க உதவும் சாதனம்

42. கீலசு - பழைமையின் வடிவம்

43. சௌம்ய - பண்புறு சாந்தம்

44. சாதாரண - சமத்துவம் சொல்லிடும்

45. விரோதி கிருது - வெறுப்பில் விளைந்திடும்

46. பரிதாபி - செய்த பின் வருந்திடும்

47. பிரமாதீச - பொறுப்பில் தலைமையெனும்

48. ஆனந்த - பொலிவோடு மகிழ்வுறும்

49. ராட்சச - கொடுமையை குணம்

50. நள - கொதி நிலையில குளிர்ச்சி

51. பிங்கள - கோலமிகு காவிய சாஸ்திரம்

52. காளயுக்தி - காலத்தில் அறிவுறுத்தும்

53. சித்தார்த்த - சிறப்புறு சித்தி தரும்

54. ரௌத்ர - சீர்கெடும் சினமே

55. துர்மதி - தூண்டிடும் தீமைக்கு

56. துந்துபி - துய்ய நல்லிசை தரும்

57. ருத்ரோத்காரி - கோபத்தின் விளைநிலமாம்

58. ரக்தாஷி - குருதியாய் சிவந்த கண்

59. குரோதன - விரோதத்தின் வேராகும்

60. அக்ஷய - குறைவில்லாமல் நிறைவது

More News

Read more about: interesting facts tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+