கிராண்ட் அணைக்கட்டு என்று அழைக்கப்படும் கல்லணை காவிரி நதி மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணையால் சூழப்பட்டுள்ள பகுதி 146.70 சதுர கி.மீ. பரப்பளவாகும். இந்த அணை சோழ வம்சத்தின் அரசன் கரிகாலன் மூலம் கி.பி. 1 வது நூற்றாண்டில் கட்டப்பட்டு இன்று வரை உபயோகத்தில் இருந்து வருகிறது.
இது உலகின் மிக பழமையான கல்லால் கட்டப்பட்ட அணை என்பது தமிழர்கள் ஆகிய நமக்கு பெருமையை தருகிறது. கல்லணை என்ற பெயருக்கு கருங்ககற்களை கொண்டு கட்டிய அணை என்று பொருள்படுகிறது.
இந்த கட்டமைப்பு முழுவதும் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 329 மீ நீளமும் 20 மீ அகலமும் கொண்டது. இந்த அணை இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒரு கால்வாய் ஸ்ரீரங்கத்திலும், மற்றொன்று கொள்ளிடம் என்று அழைக்கப்படும் வடக்கு கால்வாய் பூம்புகாரிலும் நிறைவு பெற்று இறுதியாக வங்காள விரிகுடாவில் சென்று கலக்கிறது.



Click it and Unblock the Notifications