ஜக் மந்திர், உதய்பூர்

ஜக் மந்திர் பிரபல்யமாக ஏரித்தோட்ட அரண்மனை என்றே அழைக்கப்படுகிறது. இது பிச்சோலா ஏரியிலுள்ள நான்கு தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ளது. மேவார் வம்சத்தின் மூன்று சிசோடியா ராஜபுத்திர மன்னர்கள் இந்த அரண்மனையை கட்டி முடித்துள்ளனர்.1551ம் ஆண்டு மஹாராணா அமர் சிங் முதலில் இந்த அரண்மனையி கட்ட ஆரம்பித்துள்ளார். அவருக்கு பின்னர் மஹாராணா கரண்சிங் 1620 முதல் 1628 வரை அப்பணியை தொடர்ந்துள்ளார்.

இறுதியாக மஹாராணா முதலாம் ஜகத்சிங் (1628-1652) இந்த அரண்மனையின் இறுதிப்பணிகளை முடித்துள்ளார். இதற்கு கடைசி மன்னரான மஹாராணா ஜகத் சிங்கின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த அரண்மனையில் உள்ள குல் மஹால் எனும் மாளிகை முகலாய இளவரசர் குர்ரம் என்பவருக்காக கட்டப்பட்டுள்ளது. இங்கு இஸ்லாமிய பாணியில் பிறையுடன் அமைந்த குமிழ்மாட கோபுரம் உள்ளது.

இந்த மாளிகையின் உள்ளே கூடங்கள், வரவேற்பறைகள், அவைக்கூடங்கள் மற்றும் வசிப்பறைகள் காணப்படுகின்றன. இது தவிர, ஜக் மந்திர் அரண்மனையின் மேற்குப்பகுதியில் கன்வர் படா கா மஹால் அல்லது பட்ட இளவரசர் அரண்மனை அமைந்துள்ளது. இங்குள்ள பீட அமைப்பில் கல்லால் ஆன யானைச்சிற்ப அலங்காரம் காணப்படுகிறது.மேலும், இந்த அரண்மனை வளாகத்தில் ஒரு பூந்தோட்டமும் இடம் பெற்றுள்ளது. இந்த தோட்டத்தில் பயணிகள் பலவிதமான போகய்வில்லா பூக்கள், மல்லிகை மலர்கள், ரோஜாப்பூக்கள், காட்டரளி மரங்கள் மற்றும் பனை மரங்கள் போன்றவற்றை பார்க்கலாம்

Please Wait while comments are loading...