உதய்பூரிலுள்ள எம்.எல்.வி பழங்குடி ஆராய்ச்சி மையம் மேவார் பிரதேசத்தின் பல்வேறு பழங்குடி இனத்தார் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மையமாகும். இது ஒரு அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களின் கலைப்பொருட்கள் அவர்களின் வாழ்வியல் அம்சங்களை பிரதிபலிப்பதாய் உள்ளன. இங்கு ஒரு நூலகமும் உள்ளது.
இதில் பழங்குடி இனத்தார் வாழ்க்கை முறை மற்றும் சமூகவியல் சிக்கல்கள் சம்பந்தமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதியும் இலவசம்.



Click it and Unblock the Notifications