உதய்பூர் ஃபோக் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த நாட்டார் அருங்காட்சியகத்தில் ராஜஸ்தானிய பாரம்பரியத்தைச் சேர்ந்த பல கிராமப்புற ஆடைகள், அணிகலன்கள், தோல் பொம்மைகள் மற்றும் முகமூடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு பொம்மைகள், நாட்டுப்புற இசைக்கருவிகள், நாட்டுப்புறக் கடவுள் சிலைகள் மற்றும் ஓவியங்கள் என்பன இங்குள்ள இதர சேகரிப்பு பொருட்களாகும்.உதய்பூரில் சேதக் சர்க்கிளின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் பாரதீய லோக் கலா மியூசியம் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்ட பொருட்கள் தவிரவும் செயற்கையாய் உருவாக்கப்பட்ட புராதனப்பொருட்கள் மற்றும் கடவுள் சிலைகளையும் இந்த மியூசியத்தில் பயணிகள் காணலாம். பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் இங்கு தினமும் நிகழ்த்தப்படுவதும் ஒரு விசேஷமான அம்சம்.
மேலும், பொம்மை தயாரிப்பு மற்றும் நாடகக்கலை குறித்த வகுப்புகளும் இந்த மையத்தில் நடத்தப்படுகின்றன. இந்த அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications