Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உடுப்பி » ஈர்க்கும் இடங்கள் » கடியாலி மகிஷாமர்தினி கோயில்

கடியாலி மகிஷாமர்தினி கோயில், உடுப்பி

35

உடுப்பியிலிருந்து இரண்டு மைல் மேற்காக இந்த கடியாலி மகிஷாமர்தினி கோயில் உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பழமையான கோயில் என்ற பெருமையை இந்த கோயில் பெற்றுள்ளது. இது 1200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்டுள்ளது.

உடுப்பியிலுள்ள பிரசித்தமான  ஸ்ரீ  கிருஷ்ணா கோயிலுக்கும் மணிபால் பல்கலைக் கழகத்துக்கும் மிக அருகில் இந்த மகிஷாமர்தினி கோயில் உள்ளது. இது சாளுக்கியர் காலத்தை சார்ந்ததாக அறியப்படுகிறது. தற்காலத்தைய சைபர் (இணைய தள) பக்தர்கள் நிதி உதவியுடன் இது சமீபத்தில் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்த கோயிலில் மகிஷாமர்தினியின் சிலை நின்ற நிலையில் காணப்படுகிறது. கற்களால் எழுப்பப்பட்டுள்ள இந்த கோயிலின் கூரை தடித்த கிரானைட் கற்களால் சாய்வாக வேயப்பட்டுள்ளது.

இங்குள்ள துர்கா தேவியின் சிலையும், வருடம் தோறும் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவும் இந்த கோயிலின் சிறப்பம்சங்களாகும். அருகிலேயே அனந்தீஸ்வரர் கோயில் என்ற மற்றொரு பழமையான கோயிலும் காணப்படுகிறது.பஸ், டாக்ஸி, ஆட்டோ போன்ற போக்குவரத்து வசதிகள் நல்ல முறையில் உடுப்பியிலிருந்து இந்த கடியாலி பகுதிக்கு கிடைக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Jun,Sun
Check Out
22 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon