படுபிட்ரி உடுப்பிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய, பரபரப்பான அழகான கிராமம் ஆகும். இந்த இடம் பல அழகான புராதன கோயில்களுக்கு பெயர் பெற்றுள்ளது. இங்குள்ள மஹா கணபதி கோயில் அதிக பக்தர்களால் விஜயம் செய்யப்பட்டு பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இந்தக் கோயிலில் உள்ள மஹா கணபதி சிலை இரண்டரை அடி உயரத்தில் கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை என்று கூறுகின்றனர்.இந்த இடம் ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து வசதிகளால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. உடுப்பியிலிருந்து 18 கி.மீ தூரத்திலேயெ இது அமைந்துள்ளது.
பெங்களூர், புனே போன்ற நகரங்களிலிருந்து இங்கு சொகுசு பஸ்களும் இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையான NH 17 இந்த படுபிட்ரி கிராமம் வழியே செல்கிறது.இந்த பிரதேசத்தின் வழியே கொங்கண் ரயில்வே பாதையும் செல்வதால் ரயில் மூலமாக இங்கு செல்வதும் சுலபமே. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டுள்ள மங்களூர் விமான நிலையம் அருகில் உள்ளது. எனவே இந்த சுற்றுலா ஸ்தலத்திற்கு போக்குவரத்து வசதிக்குறைவு என்று எதுவுமே இல்லை.



Click it and Unblock the Notifications